கார்த்தி நடிக்க போறேன்னு சொன்னப்போ மணிரத்னம் இப்படித்தான் சொன்னாராம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கார்த்தி இயக்குநர் மணிரத்னம்கிட்ட அசிஸ்டென்ட் இயக்குநர்களில் ஒருவரா இருந்தார். கார்த்திக்கு பருத்திவீரன் படத்துல நடிக்க வாய்ப்பு வந்தப்போ, மணிரத்னம் இப்படி சொன்னாராம்....

அப்படி என்ன சொன்னார், அது நிஜமா நிஜமில்லையான்னு ஒரு பக்கம் யோசிச்சுகிட்டு இருப்போம். அதுக்குள்ளே சன் டிவியின் தேவ் படத்தின் சிறப்பு நிகழ்ச்சிக்காக நடிகர் கார்த்தி கலகலன்னு பல விஷயங்கள் சொன்னார்.

எப்பவும் எந்த இடத்திலும் சூரியா பேசினா கார்த்தி பத்தி பேசுவார். பேட்டின்னா கேட்கவே வேணாம் ஜோஜோன்னு புகழ்ந்திருவார். அவர் தம்பி கார்த்தி மட்டும் இதுக்கு விதிவிலக்கா என்ன?

அண்ணன் சட்டை

அண்ணன் சட்டை

தேவ் படத்திற்கான சிறப்பு நிகழ்ச்சி சன் டிவியில் நடந்தது அப்போ பேசிய கார்த்தி, என்னவோ தெரியலை நான் ஆசையா சட்டை வாங்குவேன்., அது அண்ணனுக்கு சரியா இருக்கும், எடுத்து போட்டுக்குவார். அவர் சட்டை ஆசையா வாங்குவார், அதை நான் போடலாம்னு பார்த்தா கை கூட நுழையாது என்று சிரித்தார்.

புது வண்டி

புது வண்டி

காலேஜ் படிக்கும்போது ஆசைப்பட்டு பைக் வணங்கினேன்.. வாங்க போறப்போ எதுக்குடா பைக்லாம் இப்போன்னு அசால்ட்டா கேட்டார். அப்புறம் அந்த வண்டியை என்னை எங்கே எடுக்க விட்டார். அவர்தான் அடிக்கடி எடுத்துக்கிட்டு ரவுண்ட்ஸ் போவார்.

கார்த்திதானே

கார்த்திதானே

தேவ் படத்தில் நடித்தது கார்த்திதானே இல்லை சூரியாவோன்னு சந்தேகத்தை கிளப்பும் அளவுக்கு கார்த்தி சூரியா பத்திதான் பேசினார். நல்ல அண்ணன், நல்ல தம்பி, நல்ல அப்பா.

நிஜமா, நிஜமில்லையா?

நிஜமா, நிஜமில்லையா?

கார்த்தி பருத்திவீரன் படத்துல நடிக்கப் போறேன்னு குருநாதர் மணி சார்கிட்ட சொன்னாராம். அப்போ மணி சார் என்ன சொல்லி இருக்கார் தெரியுமா, நானே ரெண்டு வருஷத்துக்கு மூணு ஒரு வருஷத்துக்கு ஒரு படம்னு எடுக்கறவன். என்கிட்டே உதவி இயக்குநரா சேர எத்தனை பேர் காத்து இருக்காங்க.

பறிச்ச மாதிரி

பறிச்ச மாதிரி

அவங்களுக்கு வாய்ப்பு குடுத்தாலும் குடுத்து இருப்பேன். வேற நினைப்புல இருந்த உனக்கு குடுத்த வாய்ப்பு இன்னொருத்தருக்கு கிடைக்க இருந்த வாய்ப்பு தானேன்னு சொல்லிட்டு ஆசிர்வதிச்சு அனுப்பி வச்சாரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+