அசீம் பற்றி ஒரே வார்த்தையில் விக்ரமன் கூறிய கருத்து.. இப்படி சொல்லி விட்டாரே! கலாய்க்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக விக்ரமன் அசீம் பற்றிய கேள்விக்கு தன்னுடைய கருத்தை கூறி இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் அசீம் விளம்பரத்திற்காக ஏதோ செய்திருக்கிறார் என்று விக்ரமன் தன்னுடைய கருத்தை கூறி இருக்கிறார்.

விக்ரமன் அசீம் பற்றி கூறிய கருத்துக்கு அசீம் உடைய ரசிகர்கள் அதிகமானோர் கலாய்த்து கருத்து கூறி வருகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் தான் இவர்கள் இருவருக்கும் கருத்து மோதல் என்றால் நிகழ்ச்சிக்கு பிறகு இப்படியா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

முதல் லைவ்

முதல் லைவ்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. நிகழ்ச்சி முடிந்து அடைந்து இரண்டு நாட்கள் ஆனாலும் இந்த நிகழ்ச்சியுடைய தாக்கம் இன்னும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் மத்தியில் இருந்து குறைந்த பாடு இல்லை. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் ரன்னர் முதல்முறையாக விஜய் டிவியின் instagram பக்கத்தில் இருந்து லைவில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். அப்போது அசீம் பற்றி விக்ரமனிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு சற்றும் யோசிக்காமல் விக்ரமன் பேசியிருக்கிறார்.

விளம்பரத்துக்காக செய்கிறாரா

விளம்பரத்துக்காக செய்கிறாரா

பிக் பாஸ் வீட்டிற்குள் உங்களுக்கு பிடித்த நபர் யார் என்று கேட்டதற்கு ஷிவின் என்று கூறியிருக்கிறார். ஃபேவரிட் நபர் என்றால் அமுதவாணன், ஷிவின், மகேஸ்வரி, ஏடிகே என கூறியிருக்கிறார். அப்போது அசீம் பற்றி கேட்டதற்கு அவர் விளம்பரத்திற்காக ஏதோ செய்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார். விக்ரமனுடைய இந்த எதிர்பாராத பதிலை ரசிகர்கள் பலர் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே டைட்டில் ஜெயித்த அசீம் விஜய் டிவி லைவில் இன்னும் பேட்டி எடுக்கவில்லை. ஆனால் ரன்னரான விக்ரமனியிடம் பேட்டி எடுக்கப்பட்டிருக்கிறது என்று பலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

இனி என்ன பேச போகிறாரோ

இனி என்ன பேச போகிறாரோ

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து இரண்டு நாட்கள் ஆன பிறகு அசீம் எந்த வீடியோவும் வெளியிடாமல் இருந்த நிலையில் அதிகமான ரசிகர்கள் அதைப் பற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று முதல் முறையாக விக்ரமன் ரசிகர்களுக்கு நன்றி கூறி வரும் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதை தொடர்ந்து இன்று அசீம் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த நிலையில் இன்று விக்ரமன் முதலில் லைவில் வந்திருக்கிறார். அதனால் இனி லைவில் வந்து அசீம் என்ன பேசுவார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அவரும் நல்லவர்தான்

அவரும் நல்லவர்தான்

இந்த நிலையில் விக்ரமன் முதலில் அசீம் பற்றி ஒரே வார்த்தையில் அவர் விளம்பரத்திற்காக செய்கிறார் என்று கூறிவிட்டு பிறகு இன்று அசீம் வெளியிட்ட வீடியோவை பார்த்தேன் அதில் அவர் வெற்றி பெற்ற பாதி பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு செலவழிப்பாக கூறி இருக்கிறார். அது பாராட்ட வேண்டியதுதான். அதுமட்டுமல்லாமல் அவரும் நல்லவர் தான். அதனால்தான் மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர என்று அவரைக் குறித்து பேசி இருக்கிறார். இது சமூக வலைத்தளத்தில் பலரால் பேசப்படும் பொருளாக மாறி இருக்கிறது. ஆரம்பத்தில் ஒரே வார்த்தையால் அவரை குறை கூறிவிட்டு பிறகு இப்படி பாராட்டி என்ன பயன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+