விஜய் சேதுபதி பேசியதில் என்ன தவறு இருக்கு? கோபம் இதனால் தான் வருதா? விஜய் ரசிகர்களை மடக்கிய சாட்டை

Subscribe to Oneindia Tamil

சென்னை: லீடர்ஷிப் பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது சில நாட்களைக் கடந்து விட்ட நிலையிலும் பஞ்சாயத்து மட்டும் முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பலரும் விஜய் சேதுபதிக்கு எதிராக பேசி வரும் நிலையில் விஜய் டிவி விஜய் சேதுபதி பேசியது நிகழ்ச்சியை பற்றி தான் என்று விளக்கம் கொடுத்து விட்டது. ஆனாலும் இந்த பஞ்சாயத்து முடியாத சமயத்தில் விஜய் சேதுபதி பேசியது எந்த தவறும் இல்லை என சாட்டை துறைமுருகன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாட்டை துரைமுருகன் வீடியோ

சாட்டை துரைமுருகன் சும்மாவே தவெக தொண்டர்களை கலாய்த்து வீடியோ போடுவார். இப்போ விஜய் சேதுபதியை விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருவதால் இதை வைத்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் விஜய் சேதுபதியை விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். என்ன காரணம் என்று பார்த்தால், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் லீடர் பற்றி பேசி இருக்கிறார்.

Vijay Sethupathi Saattai Durai Murugan Bigg Boss

விஜய் சேதுபதி பேச்சு

லீடர்ஷிப் என்றால் என்ன? லீடர்ஷிப்னா என்னன்னு புரியாம வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாக சொல்லிவிட்டு.. ஒரு பிரச்சனையோ, பொறுப்போ வந்தால் உடனே பழியை தூக்கி எதிர்க்கட்சி மீது போட்டுவிட்டு தெறித்து ஓடுவது லீடர்ஷிப் கிடையாது என்று சொல்லி இருக்கிறார். அவர் இப்படி சொன்னதும் திமுக காரர்களுக்கு கோபம் வரவில்லை, அதிமுக காரர்களுக்கு கோபம் வரவில்லை, காங்கிரசுக்கு கோபம் வரவில்லை, பாஜகவிற்கு கோபம் வரவில்லை, நாம் தமிழருக்கோ மற்ற எந்த கட்சிக்காரர்களுக்கு கோபம் வரவில்லை. ஆனால் தாவெகவினருக்கு மட்டும் கோபம் வருகிறது.

விஜய் சேதுபதிக்கு சப்போர்ட்

விஜய் சேதுபதி என்ன சொல்கிறார்? லீடர்ஷிப் என்றால் பொறுப்பு வரும்போது அல்லது கேள்வி வரும்போது எதிர்க்கட்சி மீது பழியை போட்டு விட்டு தெறித்து ஓடக்கூடாது என்று சொல்கிறார். இதில் தவெகவினருக்கு கோபம் வருவதற்கு காரணம் என்னவென்றால் போதைப்பொருள் பயன்பாடு குறித்தோ அல்லது கொலை குற்றங்கள் குறித்த முதல்வரிடம் கேள்வி கேட்டால், ஏன் உன் காட்சியில் நடக்கவில்லையா? என்று பொறுப்பை பழியை தூக்கி எதிர்க்க கட்சியின் மீது போடுகிறார்.

Vijay Sethupathi Saattai Durai Murugan Bigg Boss

ரசிகர்களிடம் கேள்வி

இப்படி அவரிடம் எந்த கேள்வி கேட்டு கேட்டாலும் எதிர்க்கட்சி மீது பழியை போட்டு விட்டு ஓடுகிறார். அதனால் தான் தவெகவினருக்கு விஜய் சேதுபதி மீது இவ்வளவு கோபம் வருகிறதா? அதில் விஜய் சேதுபதி எந்த இடத்திலுமே விஜய் பெயரை குறிப்பிட்டு சொல்லவே இல்லை. கேள்வி கேட்டால் ஓடக்கூடாது என்று சொன்னது விஜய்க்கு தான் பொருந்துகிறது என்று தவெகவினர் ட்ரிகர் ஆகிட்டாங்க என்று சாட்டை துரைமுருகன் கலாய்த்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இது சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்த வாரம் விஜய் சேதுபதி வந்து இந்த பஞ்சாயத்துக்கு விளக்கம் கொடுக்கிற வரைக்கும் இது முடிவுக்கு வராது போல.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+