பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்துக்கு என்ன ஆகும்? இனி இது தான் நடக்கப் போகிறது..! இதை கவனிச்சீங்களா..!?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்திற்கு புற்றுநோய் இரண்டாவது கட்டத்தில் இருப்பதாக டாக்டர்கள் கூறியிருக்கின்றனர்.
ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில் தற்போது தனம் கர்ப்பமாக இருப்பதால் இனி அவருடைய நிலை என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த சீரியலின் கதாநாயகியே அவராக இருக்கும் நிலையில் கடைசி நேரத்தில் சீரியலின் கதையை மாறப்போகிறதா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணன் தம்பிகளில் ஒற்றுமையை மையமாகக் கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே ஒரு முக்கியமான கேரக்டராக குடும்பத்தை தாங்கி இருக்கும் தனம் தற்போது உடல்நல பிரச்சனையில் இருப்பதால் இந்த சீரியல் ரசிகர்கள் அடுத்து என்ன நடக்க போகும் என்று எதிர்பார்ப்போடு கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களாகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் ஹாஸ்பிடலுக்கு சென்று கொண்டே இருக்கின்றனர். ஆரம்பத்தில் மீனா கர்ப்பமாகி அந்த கர்ப்பத்தில் கடைசி நேரத்தில் சிக்கல் வந்தது. அப்போதும் அதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த தனம் கர்ப்பமானார். அப்போதும் கடைசி நேரத்தில் பிரச்சனை தான் என்று சொன்னார்கள்.
இதோடு விடாமல் முல்லைக்கு இனி குழந்தையே பிறக்காது என்று கூறி பல மாதங்களாக அழுகாச்சி சீன்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஒரே அறையில் இருந்தாலும் அடுத்தடுத்து மூன்று மருமகள்கள் கர்ப்பமானார்கள். இதுவே பெரிய அதிசயமாக இருந்த நிலையில், அதைத்தொடர்ந்து 7 மாதமாக கர்ப்பமாக இருந்த முல்லை வயிற்றில் அடிபட்டதால் அவரும் ICUவில் இருப்பதாக கூறி சில நாட்கள் பெரும் பரபரப்பாக்கி பின்பு ஆபரேஷன் செய்து குழந்தையும் தாயும் நல்லபடியாக வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கின்றனர்.

இப்ப என்ன பிரச்சனைனா.. தனத்துக்கு பல மாதங்களாகவே நெஞ்சு வலிக்கிறதுன்னு சொல்லி கடைசியில் அவருக்கு மார்பக கட்டி வந்திருப்பதாகவும் சொல்லி அதைத்தொடர்ந்து அதை செக் பண்ணிப் பார்த்தா இப்போ புற்றுநோயின் இரண்டாவது கட்டத்தில் இருப்பதாகவும் டாக்டர் கூறிவிட்டார். அதுவும் இனி இதை வைத்து வீட்டில் என்னவெல்லாம் பிரச்சனை நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் இப்போதே கமெண்ட்களில் பீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
இதில் இன்னொரு விஷயத்தை பதிவு செய்யவில்லை. ஏற்கனவே மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்து அவரும் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி வந்திருக்கிறார். இதனால் இனி தனத்திற்கு புற்றுநோய் இருப்பது தெரிந்து மூர்த்தியின் நிலைமை என்ன ஆகுமோ? என்றும் எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் மீனாவும் தனமும் வீட்டிற்கு தெரியாமல் இந்த ரகசியத்தை மறைத்து வைத்திருக்கும் நிலையில் ஸ்பெஷல் டாக்டரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருக்கிறார்கள்.
வீட்டிற்கு தெரியாமல் இந்த விஷயத்தை இவர்கள் எத்தனை நாட்களுக்கு மறைத்து வைக்க முடியும்? அதுவும் பணத்திற்கு என்ன செய்யப் போகிறார்கள்? என்பது பற்றி நாம் யோசித்துக் கொண்டிருந்தாலும், இது பற்றி சீரியலில் எதுவும் யோசிக்காமல் கடைசி நேரத்தில் தனத்தின் நிலைமை குடும்பத்திற்கு தெரிய வந்து அதை வைத்து பல வாரங்கள் அழுகாச்சி சீன்களை போட்டு, கடைசியில் தனம் உயிர் பிழைத்து வர போகிறார் இதுதான் நடக்கப் போகிறது.
அதோடு ஐஸ்வர்யாவின் வளைகாப்பு இனி நடக்குமா? இல்லையா? என்று கேள்விக்குறியாக இருக்கிறது. கண்ணன் அடுத்தடுத்து பேங்கில் லஞ்சம் வாங்கிக் கொண்டிருக்கிறார். அதனால் கண்ணனுக்கு அடுத்த பிரச்சனை வர இருக்கிறது.. இதனால் தனத்திற்கு ஸ்பெஷல் டாக்டர் பார்த்துவிட்டு உடனே உங்களுக்கு ஒன்றுமில்லை அது தப்பான ரிப்போர்ட் என்று சொல்லி விடுவாரா? என்றும் எதிர்பார்க்க தோன்றுகிறது? ஆனாலும் பொறுத்திருந்து பார்ப்போம். இந்த இரண்டு பிரச்சனையில் எது வெடிக்க போகிறது என்பதை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications