விஜயகுமார் பேத்தியை ரஜினிகாந்த் ஆசீர்வாதம் பண்ணும் போது சொன்னது? திடீர்னு வந்த மெசேஜ்! பிரபலம் ஓப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது நடிகர் ரஜினிகாந்த் அந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார். அந்த நேரத்தில் அந்த இடத்தில் என்ன நடந்தது என்பது பற்றி தியாவின் மேக்கப் ஆர்டிஸ்ட் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதோடு மேக்கப் முடித்து தான் வீட்டிற்கு வந்தபோது தனக்கு தியா அனுப்பிய மெசேஜ் குறித்து அந்த மேக்கப் ஆர்டிஸ்ட் உணர்ச்சி வசப்பட்டு பேசி இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

 when Rajinikanth blessed Vijayakumar granddaughter

அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜயகுமாரின் வீட்டு திருமணம் பெரிய அளவில் நடைபெற்றது. விஜயக்குமாரின் பேத்தி அதாவது விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதாவின் மகளுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. விஜயகுமார் வீட்டில் எல்லோரும் நடிகர்களாக இருக்கும் பட்சத்தில் அனிதா மற்றும் நடிப்பு துறையை தேர்ந்தெடுக்காமல் நன்றாக படித்து டாக்டராகி இருக்கிறார்.

அதே நேரத்தில் தன்னுடைய மகளையும் டாக்டருக்கு படிக்க வைத்திருக்கும் அனிதா திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் செட்டில் ஆகி இருந்த நிலையில் சமீபத்தில் தான் அவர் தமிழ்நாட்டிற்கு திரும்பி வந்திருக்கிறார். அதுவும் சென்னையில் புதியதாக பிரம்மாண்டமான ஒரு வீட்டை சில மாதங்களுக்கு முன்பு வாங்கி இருந்தார். அதை தொடர்ந்து தன்னுடைய மகளின் திருமணத்தையும் கோலாகலமாக நடத்தி இருக்கிறார்.

 when Rajinikanth blessed Vijayakumar granddaughter

இந்த திருமணம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த திருமணத்தில் முன்னணி நடிகர்கள் , நடிகைகள், இசையமைப்பாளர்கள் பாடகர்கள் என பலரும் கலந்துகொண்டு இருந்தனர். இதனால் சமூக வலைத்தளத்திலும் இந்த திருமணம் குறித்த பேச்சு அதிகமாக இருந்து வருகிறது. இப்படியான நிலையில் இந்த திருமணத்தில் முக்கிய நபராக நடிகர் ரஜினியும் கலந்து கொண்டிருந்தார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் ரஜினி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது அங்கு என்ன நடந்தது என்பது பற்றி தியாவிற்கு மேக்கப் போட்டு இருந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நாங்கள் இவ்வளவு பிரமாண்டமாக திருமணம் நடைபெறும் என்று நினைக்கவே இல்லை. எங்களுக்கு இந்த திருமணத்திற்கு கடந்த வருடமே புக் பண்ணி விட்டார்கள்.

 when Rajinikanth blessed Vijayakumar granddaughter

இந்த திருமணம் ஒரு வாரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு நாள் பங்ஷனுமே பெரிய அளவில் இருந்தது. ஆனால் நடிகர் விஜயகுமார் வீட்டில் எல்லோருமே பிரபலமாக இருந்தாலும் யாரும் எந்த இடத்திலும் திமிரு காட்டாமல் எளிமையாக நடந்து கொண்டது தான் பார்க்க முடிந்தது. அதுபோல திருமணத்தன்று நடந்த நிகழ்வு என்னால் மறக்க முடியாது. அன்று நான் திருமணத்திற்கு தியாவுக்கு மேக்கப் போட்டு வெளியே வந்து பார்க்கும்போது மிரண்டு போய்விட்டேன்.

ஏனென்றால் சென்னையில் இருக்கும் எல்லா பிரபலங்களும் அங்கேதான் இருந்தார்கள். நடிகர் நடிகைகள் முதல் கொண்டு அதிகமான கூட்டம் வந்து இருந்தது. அதோடு அதிகமான பாதுகாப்புகளும் அங்கு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் நாங்கள் கொஞ்சம் திணறி தான் போயிருந்தோம். அந்த நேரத்தில் தான் ரஜினிகாந்த் அங்கு வந்தார். ஆனால் அவர் வரும்போது மேடையில் ஒரு சிலர் மட்டுமே இருந்தனர் .அதனால் அவர் மணமக்களிடம் சென்று ஆசீர்வாதம் செய்துவிட்டு பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது மீண்டும் ஹாஸ்பிடலுக்கு எப்போது வேலைக்கு போகணும் என்று தியாவிடம் ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருந்தார். அதுபோல ரஜினி காந்த் அங்கு கொஞ்ச நேரம் தான் இருந்தார். பிறகு அவர் வெளியே சென்று விட்டார். அதற்கு பிறகு நாங்கள் மேக்கப் எல்லாம் முடித்து வீட்டிற்கு வந்து விட்டோம். வந்த கொஞ்ச நேரத்தில் எனக்கு மணப்பெண்ணான தியா ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தார்.

அதில் நீ யார் என்பதை நீ சொல்லவில்லை என்றாலும் உன்னுடைய வேலை சொல்லிவிடும்... அதுபோல நீங்கள் யார் என்பதை இப்போது நீங்கள் செய்த வேலை பிரபலப்படுத்தி இருக்கிறது என்று என்னை பாராட்டி இருந்தார். இது நான் 200க்கு 200 மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றது போன்று இருந்தது என்று அந்த பேட்டியில் விஜயகுமாரின் பேத்தி தியாவின் மேக்கப் ஆர்டிஸ்ட் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+