கண்மணி.. புள்ளைக்கு சாமர்த்தியம் பத்தலைங்கோ.. இந்நேரத்துக்கு ரெட்டை புள்ளைய பெத்திருக்க வேணாமா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏங்கண்ணு சன் டிவியின் நாயகி சீரியல்ல கண்மணி புள்ளைக்கு கண்ணாலம் கட்டி ஒரு வருஷமாச்சுதுங்க.. அட இன்னும் ரெண்டு பேருக்கும் மொத ராத்திரி நடக்காம மொத்த ராத்திரியும் கெட்டு கெடக்குதாம்ல...

என்னது நான் சொல்றது புரியுதுங்களா... இவ்ளோ சாமர்த்தியம் கெட்டுப்போயி சூது வாது தெரியாத புள்ளையா பெத்த பொண்ணை ஆத்தா வளர்க்கறதுங்களா...

அப்புறம் வம்சம் எப்படி தழைக்கறது... குடும்பம் எப்படிங்க உருவாவறது. பெத்த ஆத்தாக்காரங்க ஒரு வசிய மருந்தை கொடுத்தா... கெரகம்.. அது மாமனாருக்கு போயி சேர்ந்துருதுங்க.. சரி, அதை உடுங்க.. இந்த வயசுல அவங்களும் சந்தோஷமா இருந்து போட்டுங்க.

கொல்லி மலை

கொல்லி மலை

சரி.. இந்த சுமதியை பெத்த அம்மணி கொல்லிமலையில் சொல்லி வச்சு ஒரு வசிய மருந்தை குடுத்தா... கொஞ்ச நேரம் இருங்க இதை கதையா சொல்லிப் போட்டாத்தானுங்க நல்லா இருக்கும். கண்மணியோட நிலைமையை தெரிஞ்சுக்கிட்டு, இந்த சுமதி புள்ள இருக்குதுங்களே..அந்த புள்ள அம்மா கொல்லிமலை வசிய மருந்தை வாங்கியாந்து வெவரமா சொல்லி கொடுத்து போடறாங்க..

கலக்கலாம்

கலக்கலாம்

இந்த வசிய மருந்தை எதுலயும் கலக்கலாம்.. அம்மா வூட்டுக்கு விருந்துக்கு போறீங்களே.. அங்க வச்சு சாப்பாட்டுல கலந்து குடுத்துடுங்கன்னு சுமதி வெவரமா சொல்லித்தான் அனுப்பறா. 7, 8 மணி நேரம் செண்டுதான் வேலை செய்யும் வசிய மருந்து.. இன்னிக்கு ரவைக்கு..ம்ம்..ம்ம்..னு சொல்லி குடுக்குதுங்க இந்த புள்ள..

மூதேவி

மூதேவி

வீட்டுல ஒரு மூதேவி இருக்குதுங்களேன்னு வெவரம் வேணாமா இந்த ரெண்டு புள்ளைங்களுக்கு.. அதான்ங்க இந்த சுஹாசினி புள்ளையைத்தான் சொல்றேன். இந்த புள்ளைஅதை ஒட்டு கேட்டுடுது. நமக்குதானுங்க பக்கு பக்குன்னு அடிச்சுக்குது.

நல்லா சாப்பிடுதுங்க

நல்லா சாப்பிடுதுங்க

கொழம்புல வசிய மருந்தை கலந்து போட்டு அம்மாகாரங்க ஊத்து ஊத்துன்னு ஊத்தறாங்க மருமவனுக்கு.. செழியன் கண்ணும் நல்லா சாப்பிட்டு போடுதுங்க

வீட்டுல

வீட்டுல

ரவைக்கு செழியன் தம்பி உருண்டு பொரண்டு படுக்க, ஆஹா, அதுதான்னு நம்ம கண்ணு கண்மணி புள்ளை ஏங்குதுங்க...அந்த புள்ளையைப் பார்க்க எனக்கே பாவமா இருக்குதுங்கோ.. கட்டின புருஷன் இந்த பாடு படுத்தறானே.. கெரகம் புடிச்சவன் நீதிங்கறான்.. நேர்மைங்கறான்.. பொய் சொல்ல மாட்டேன்னு சொல்றானுகளே..அது சரிதானுங்க.. நல்ல புள்ளைதான்...ஆனா, எது நேர்மை, எது நீதின்னு தெரியாத வெவரம் கெட்ட பையனா இருக்குதுங்களே..

உனக்கு பண்ணுதா

உனக்கு பண்ணுதா

ஒரு வழியா இந்த செழியன் புள்ளை ஏந்திரிச்சு ஒக்காந்துக்குதுங்க.. இந்த கண்ணு பாவம்.. ஐயோ அதுதான். அவருக்கு அதுதான் என்னவோ பண்ணுது..இப்போ என்கிட்டே வர போறாருன்னு, சும்மா புதுப்பொண்ணு கணக்கா சிரிச்சுக்கிட்டு படுத்து இருக்குதுங்க. உங்களுக்கு ஏதாச்சும் பண்ணுதான்னு கேட்க, ஆமா , வயித்தை கலக்குதுன்னு ஓடுதுங்க.. ஒரு கா இல்லை ரெண்டு கா இல்லை.. மறுக்கா மறுக்கா வகுத்தால போவுதுங்கோ...

சுஹாசினி

சுஹாசினி

நீலிக் கண்ணீர்காரி சுஹாசினி இருக்கறாளுகங்களே... அவ மருந்தை மாத்தி வச்சு போட்டாளாம். அதனலாதானுங்க இந்த புள்ளைக்கு வகுத்தால பிச்சுக்கிட்டு போயிருக்கு...

செழியன் கண்ணு

செழியன் கண்ணு

அட என்னங்க முந்தானை முடிச்சு கணக்கா இந்த செழியன் கண்ணு, சுஹாசினி பேச்சை கேட்டுகிட்டு, வேதாளம் முருங்கை மரம் ஏறுன மாதிரி மனசு மாறி மாறி பேசுது..ம்ம் கெரகம்.. கண்மணிக்கு என்னிக்கு மொத ராத்திரி நடக்குமோ...நமக்கென்னாச்சு கவலையை விட்டுப்போட்டு வேலைய பாருங்கங்கோ...பொறவு என்னால கெட்டுப்போச்சுன்னு சொல்லி போட்றாதீங்க..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+