விஜய் சட்டப்பேரவையில் அனல் பறக்க பேச.. மகன் ஜேசன் வெளியிட்ட கூல் போஸ்ட்.. என்ன ஒரு டைமிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு பக்கம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசிய வீடியோக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் அவரது மகன் ஜெசன் சஞ்சய் வெளியிட்டிருக்கும் சிக்மா படத்தின் ப்ரோமோஷன் பதிவு கவனத்தை ஈர்த்து வருகிறது. அதாவது அப்பா அரசியல் மேடையில், மகன் சினிமா மேடையில். இருவரும் வேறு வேறு வேலை என்றாலும் இரண்டு பேருடைய வீடியோக்களும் ஒரே நேரத்தில் ரசிகர்களின் டைம் லைனை ஆக்கிரமித்து இருப்பதுதான் இப்போது சுவாரசியமாக இருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்தார். சுமார் 40 நிமிடங்கள் நீண்ட அவரது உரையில் சட்டம், ஒழுங்கு, ஊழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன் வைத்து திமுகவை கடுமையாக விமர்சித்து இருந்தார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமலியில் ஈடுபட்டு பின்னர் வெளிநடப்பும் செய்தனர்.

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு

இதன் பிறகு விஜய் பேசிய ஒவ்வொரு பகுதியும் தனித்தனி வீடியோவாக சோசியல் மீடியாவில் சுற்ற ஆரம்பித்துவிட்டது. இந்த வீடியோக்களை இதோ விஜய் பேசியது.., எங்கே விஜய் கொடுத்த பதிலடி, இந்த இடத்தை கவனிச்சீங்களா? என்று தலைப்பு போட்டு ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். எதிர் தரப்பினர் விஜய் வீடியோவை போட்டு, எதிர்க்கட்சியினர்கள் கேட்ட கேள்வி என்ன? அதற்கு இவர் கொடுக்கும் பதிலை பாருங்களேன்! என்று விஜய் பேசியதை கலாய்த்து வருகிறார்கள்.

Jason Sanjay Vijay

வைரலாகும் முதல்வர் விஜய் வீடியோ

இப்படியாக சோசியல் மீடியா முழுக்க இந்த வீடியோக்கள் தான் ரிப்பீட் மோடில் சுற்றி வருகிறது. இந்த நேரத்தில் அப்பா சட்டப்பேரவையில் அரசியல் கணக்கை போட்டுக் கொண்டிருக்க மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் படமான சிக்மா வேலையில் பிஸியாக இருக்கிறார். சந்திப் கிஷன் ஹீரோவாக நடிக்க சிக்மாவை ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கிறார். லைக்கா ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கும் இந்த படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார்.

Jason Sanjay Vijay

சிக்மா பட ப்ரோமோஷன்

இப்போது படத்தின் ஃப்ரீ லான்ச் ஈவென்ட் இன்று செப்டம்பர் 8 தேதி சேலத்தில் உள்ள மகேந்திரா இன்ஸ்டிடியூஷனில் நடைபெறுகிறது. இதற்கான போஸ்டரை தான் ஜேசன் சஞ்சய் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதுபோல இந்த ப்ரொமோஷனுக்கு சந்தீப் கிஷன் கேஷுவலாக வந்த வீடியோவையும் ஜேசன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

ரசிகர்கள் கருத்து

இதைபார்க்கும் ரசிகர்கள் அப்பா என்னதான் சட்டசபையில் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருந்தாலும் மகன் அதைப்பற்றி எதையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய பட ப்ரொமோஷனில் கவனமாக இருக்கிறார். சரி அப்பா சட்டசபைக்கு போயிட்டாலும், மகன் இனி சினிமாவில் இருக்கிறார் என்றெல்லாம் கமெண்ட் கொடுத்து இந்த போஸ்டை வைரஸ் செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+