நடிகர் மாரிமுத்துவின் கனவு வீட்டை திறந்து வைக்கப் போவது இந்த மூன்று பிரபலங்கள் தானா? வெளியான ரகசியம்
சென்னை: சமீபத்தில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருந்தார்.
மாரிமுத்து மரணத்திற்கு முன்பு பல வருடங்களாக தான் ஆசைப்பட்டிருந்த கனவு இல்லத்தை கட்டி முடித்து இருந்தார்.

இந்த நிலையில் அவருடைய வீட்டை மூன்று சினிமா பிரபலங்கள் வைத்து திறக்க இருந்ததாக அவரே சொன்னதாக பிரபலம் ஒருவர் தகவல்களை தெரிவித்திருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்களால் நம்பவே முடியாத ஒரு பிரபலத்தின் மரணம் என்றால் அது நடிகர் மாரிமுத்துவின் மரணமாக தான் இருக்கும். சில தினங்களுக்கு முன்பு காலையில் நன்றாக டப்பிங் பேசிக்கொண்டு இருந்தவர் திடீரென மூச்சு விட கஷ்டப்பட்டு மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவரது உயிர் பிறந்தது.
மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் அவருடைய உயிரை காப்பாற்ற முடியாமல் போனதை தமிழக ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வந்து கொண்டிருந்த நிலையில் மாரிமுத்துவிற்கு இவ்வளவு சீக்கிரமாக அந்த வாழ்க்கை முடிந்து இருக்கக் கூடாது என்று பலரும் கூறி வருகின்றனர்.
நடிகர் மாரிமுத்து பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் எதிர்நீச்சல் சீரியல்தான் அவருக்கு பெரிய அளவில் ரீச் கொடுத்தது. அந்த சீரியலால் அவரின் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்க, அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தது. நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர், கமல்ஹாசனின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா என பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இவருடைய இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாத ரசிகர்கள் நாங்கள் இனி எப்படி எதிர்நீச்சல் சீரியலை பார்ப்போம் என்று கருத்தும் தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் இனி யார் அடுத்த குணசேகரன் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் இருக்கின்றது இந்த நிலையில் மாரிமுத்துவின் கனவு இல்லம் பற்றி பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது மாரிமுத்து பிரம்மாண்டமாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டின் விலை ஒன்றரை கோடி என்று சொல்லப்படுகிறது. அந்த வீட்டில் ஒவ்வொரு விஷயங்களையும் அவர் பார்த்து பார்த்து செய்து இருந்தாராம். மரத்திலான சிற்பங்கள், பெயிண்டிங் என கலை நயத்தோடு அந்த வீட்டை அலங்கரித்து இருந்தாராம்.
இது பற்றி எதிர்நீச்சல் பட குழு மற்றும் பலரிடம் பெருமையாக சொல்லிக்கொண்டே இருப்பாராம். விரைவில் கிரகப்பிரசவம் நடத்தப் போகிறேன். அப்போதுதான் எல்லாருக்கும் எனது வீட்டை காட்டுவேன் என்றும் கூறியிருந்தாராம். அது போல தன்னுடைய கனவு இல்லத்தை நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி தான் திறந்து வைக்க வேண்டும் என்று தன்னுடைய ஆசை இருப்பதாக அவர் பிரபல எழுத்தாளர் மற்றும் நடிகராக இருக்கும் வேல ராமமூர்த்தியிடம் கூறி இருந்தாராம்.
ஏற்கனவே அடுத்த குணசேகரனாக வேலராமமூர்த்தி தான் நடிக்கப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்த நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்த வேலராமமூர்த்தி தன்னிடம் மாரிமுத்து சொன்ன பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதுவும் வீடு விஷயத்தில் அவர் சொன்ன விஷயத்தை பகிர்ந்ததும் அதிகமான ரசிகர்கள் இந்த ஆசை எல்லாம் நிறைவேறாமல் போய்விட்டதே என்று பீல் பண்ணி வருகின்றனர்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications