எதிர்நீச்சல் குணசேகரனுக்கு டப்பிங் பேசிட்டு அழுதுட்டேன்.. பிரபல இயக்குனர் பகிர்ந்த சோகம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகராக நடித்து வந்த மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு திடீரென்று மாரடைப்பு காரணமாக காலமானார்.
நடிகர் மாரிமுத்து தான் நடித்த எதிர்நீச்சல் சீரியலுக்கு ஆரம்பத்தில் இருந்து அவர்தான் டப்பிங் பேசிக் கொண்டிருந்தார். கடைசியாக டப்பிங் பேசிக் கொண்டிருக்கும்போது தான் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் மரணமும் அடைந்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து அவர் நடித்த சில எபிசோடுகளுக்கு அவருக்கு டப்பிங் செய்யப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்கு மாரிமுத்துவோடு பணிபுரிந்த இயக்குனர் ஒருவர் தான் டப்பிங் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் மாரிமுத்து பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சின்னத்திரை ரசிகர்கள் அதிகமானவரால் பாராட்டப்படும் சீரியலாக குணசேகரன் ஆக மாரிமுத்து ஆரம்பத்தில் இருந்து ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டார். இந்த சீரியலின் வெற்றிக்கு இவரும் ஒரு காரணம் என்று சொல்ல முடியும். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பு மற்றும் வசனங்கள் தன்னுடைய தனித்துவமான உடல் மொழி காரணமாகவே அவர் அனைவரையும் கவர்ந்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மரணமடைந்து விட்டாலும் அவர் நடித்த எபிசோடுகள் இன்னும் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் இன்றைய எபிசோடு அது நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இது அதிகமான ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் நடிகர் மாரிமுத்து அவர் எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போது தான் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்திருந்தார்.
இந்த நிலையில் அந்த குறிப்பிட்ட எபிசொட்டில் பாதிக்குப் பிறகு அவருடைய காட்சிகளுக்கு வேறு ஒரு நபரை வைத்து டப்பிங் செய்யப்பட்டது. அது இயக்குனர் வெங்கட் ஜனாதானாம். இவரிடம் சீரியல் தரப்பில் இருந்து முதலில் கேட்டபோது இவர் சரி என்று சொல்லி இருக்கிறார். இவர் துணை இயக்குனராக இருந்த போதிலும் மதுரை போன்ற வட்டார மொழி இவருக்கு தெரிந்ததால் இதில் பேசலாம் என்று முடிவு எடுத்தாராம்.
ஆனால் பேசப்போவதற்கு முன்பு இயக்குனர் வெங்கட் ஜனா ரொம்பவே பயந்து போய் இருந்தாராம். காரணம் குணசேகரன் கேரக்டர் ரொம்பவே ஸ்ட்ராங்கான கேரக்டர். அதில் நாம பேசி எதுவும் சொதப்பி விடக்கூடாது என்று பயந்தாராம். பிறகு இயக்குனர் திருச்செல்வம் இவருக்கு கொடுத்த தைரியத்தால் தான் இவர் பேசியிருந்தாராம்.
மாரிமுத்து தான் இயக்கிய கண்ணும் கண்ணும் திரைப்படத்தில் முதல் முறையாக வெங்கட்ஜனாவை டப்பிங் பேச வைத்திருந்தாராம். அவருடைய இயக்கத்தில் தான் முதலில் டப்பிங் பேசிவிட்டு இன்றைக்கு அவருக்கு டப்பிங் பேச வேண்டிய நிலைமை வந்துவிட்டது. எனக்கு ரொம்பவே வருத்தமாக இருந்தது. டைரக்டரா எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதுபோல மாரிமுத்து போலவே எனக்கு பேசுவதற்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது.
மாரிமுத்து சாரின் இருமல், செருமல் எல்லாம் ரொம்பவே உன்னிப்பாக கவனிச்சு தான் நான் இதில் பேசியிருந்தேன். அதுக்கு காரணம் இயக்குனர் திருச்செல்வம் தான் முதல் நாள் என் பக்கத்திலேயே இருந்து எனக்கு பல விஷயங்களை சொல்லி தந்தார். மாரிமுத்து சார் விட்டுட்டு போனதை நான் முடித்து வைத்தது போன்று எனக்கு ஒரு சின்ன மன நிம்மதி இருக்கிறது. இதுதான் நான் அவருக்கு செலுத்துற அஞ்சலியா நினைக்கிறேன்.
அது போல நான் பேசுறது கொஞ்சம் மாரிமுத்து சார் போல இருக்கு என்று என்னுடைய நண்பர்கள் சொன்னார்கள். அதுவும் எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது. அதே நேரத்தில் பல இடங்களில் நான் அவரைப் போல பேச முடியவில்லை என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மைதான் யாராலும் அவரைப் போன்று முழுமையாக பேச முடியாது. என்னால் முடிந்ததை நான் செய்திருக்கிறேன் என்று அந்த பேட்டியில் இயக்குனர் வெங்கட்ஜனா பகிர்ந்திருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications