அனுமனுக்கு ஆத்ம சுகம் தந்த எம்பெருமான்.. ஆஹா ..என்ன ஒரு பரவசநிலை!
சென்னை: சன் டிவியின் ஜெய் அனுமான் சீரியல் ரொம்ப நல்லாருக்கு.அனுமன் பக்தியைப் பத்தி தெரிஞ்சுக்க ஒரு அரிய வாய்ப்புன்னு சொல்லலாம்.
சிறுவன் அனுமனாக நடிபவன் ரொம்ப அருமையா நடிச்சுருக்கான்.அனுமனுக்குல் இருக்கும் பக்தி உணர்வை வெளிப்படுத்துவதில் சிறுவன் உண்மையில் மிக ஆத்மார்த்தமா நடிச்சு இருக்கான்.

இதுவரையான அனுமனின் சக்திகள் அனைத்தும் மறந்து போகட்டும் என்று முனிவர் ஒருவர் சபித்துவிட சிறுவன் அனுமன் சக்தி மறந்து அன்னையின் மடியில் துவண்டு படுத்து இருக்கான்.
சிவ பெருமானின் திருவிளையாடலால் முயல் குட்டி ஒன்று அனுமனின் கண்ணில் படுகிறது.அம்மா இந்த முயல் குட்டி மிகவும் அழகாக இருக்கிறது. இன்று முதல் இவனை என் நண்பனாக்கிக் கொள்ள போகிறேன் என்று அனுமன் அம்மாவிடம் சொல்றான்.

அதைத் தேடி ஓடும் அனுமனை அழைக்கிறார் அம்மா, அனால், தந்தையோ வேண்டாம் அஞ்சனை..இப்போதுதான் அவனுக்குள் புது சக்தி கிடைத்தது போல ஆனந்தமாக இருக்கிறான். விளையாடிவிட்டு வரட்டும் என்று கூறுகிறார்.
முயலைத் துரத்தி வந்த அனுமனின் கண்ணில் எம்பெருமான் சிவன் காட்சி தருகிறார். பிரபு நீங்கள் என்னை காண வருவீர்கள் என்று தெரியும்.. ஆனால், இவ்வளவு விரைவில் பாக்கியம் கிடைக்கும் என்று நினைக்கவில்லை பிரபு என்று மகிழ்கிறான் அனுமன்.

பிரபு சிறுவன் அனுமன் முன் மண்டியிட்டு அமர, அனுமன் கண்களில ஆனந்த கண்ணீர் பிரவாகம் எடுக்குது. மேலிருந்து பார்வதி, பிரம்மன், இந்திரன் எல்லாரும் இந்த காட்சியைக் கண்டு மகிழ்கிறார்கள்.
தன் அவதாரமாக பிறந்த அனுமன் முன் சுவாமி மண்டியிட்டு நிற்கும் காட்சி அபூர்வமானது. எத்தனையோ பக்தர்கள், முனிவர்கள் பிரபுவின் தரிசனம் கிடைக்காதா என்று காத்திருக்க, அனுமனுக்கு என்ன ஒரு பாக்கியம்.அதைக் காணும் நமக்கும் பேரானந்தம்னு பார்வதி சொல்றாங்க.

வா அனுமன் என்னை கட்டிக்கொள் என்று சிவ பெருமான் அழைக்க இருவரும் தழுவிக் கொள்கிறார்கள். அனுமன் பரவச நிலை அடைந்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறான்.
இது போன்ற பேரானந்தம் நான் என்றுமே அடைந்ததில்லை என்கிறான் சிறுவன் அனுமன். இது ஆத்ம சுகம் அனுமான். உனக்கு இனி வித்தைகளை ஆசானாக இருந்து நானே கற்றுத் தரப்போகிறேன் என்று சிவன் சொல்ல சிறுவனின் முகத்தில் பரவசம். நடிப்பு மிக அற்புதம்..
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications