பிக் பாஸ் 8ல் இந்த வாரம் கெட் அவுட் இவரா? அவ்வளவு தந்திரமும் வீணா போச்சு! இனி தான் ஆட்டம் ஆரம்பம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற விபரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த வாரத்தில் ஆறு போட்டியாளர்கள் எலிமினேஷனுக்கான நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் நிலையில் ஆண் போட்டியாளர் ஒருவர் தான் வெளியேற இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் பெரும் பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நிகழ்ச்சி தொடங்கிய அன்று 24 மணி நேரத்தில் முதல் எலிமினேஷன் நடைபெறப்போகிறது. என்று அறிவித்திருந்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது.

பிக் பாஸ் சொன்னது போலவே சாச்சிகா வெளியேற்றப்பட்டார். இது இணையத்தில் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே போட்டியாளர்கள் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள். அவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரே நாளில் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள் இது தவறான முடிவு, ஒரு நாளில் ஒரு போட்டியாளர் வெளியேறி போனால் அவரைப் பற்றி மக்கள் என்ன புரிந்து கொள்வார்கள்? என்றெல்லாம் விதவிதமான கமெண்டுகள் வந்தது.
பிக் பாஸ் 8: விளையாட வந்தாங்களான்னு சந்தேகமா இருக்கு? ஒரே சண்டை.. முடிச்சு விட்டுருவோம்.. VJS பஞ்ச்
அதனாலேயே சில தினங்களிலேயே சாச்சிகா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார். இதுவும் இப்போது விமர்சிக்கப்படுகிறது. எதற்காக வெளியேற்றம் என்ற ஒரு சீன் போட்டு மக்களை புலம்ப வைத்து இப்போது மீண்டும் நிகழ்ச்சிக்குள் கொண்டு வர வைக்க வேண்டும் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. இந்த சர்ச்சைகள் முடிவதற்குள் இந்த வாரத்தில் அடுத்த எமிக்ஷனுகாகான நாமினேஷனும் நடைபெற்றிருக்கிறது.
அதில் 18 போட்டியாளர்களில் லிஸ்டில் 6 பேர் இருக்கிறார்கள். ஜாக்குலின், சௌந்தர்யா, அருண் பிரசாத், ரவீந்தர், ரஞ்சித், முத்துக்குமாரன் என ஆறு போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இதில் நேற்று நாமினேஷன் பிரீ பாஸை அருண் பிரசாத் வென்றதால் அவர் இந்த வார எவிக்ஷனில் இருந்து தப்பிள்ளார். அதுபோல இந்த நாமினேஷனில் கம்மியான ஓட்டு வாங்கிய அவர் இந்த வாரம் தப்பிவிட்டதால் மீதமுள்ள ஐந்து போட்டியாளர்களில் ஒருவர்தான் எலிமினேட் ஆகி உள்ளார்.
அதிலும் அருண் பிரசாத்திற்கு அடுத்தபடியாக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் ஜாக்குலின் மற்றும் ரவீந்தர் இருக்கும் நிலையில் ரவீந்தர் தான் இப்போது நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சீசனில் அதிகமான சம்பளம் வாங்குவதில் ஒருவரான ரவீந்தர் முதல் ஆளாக இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே போகிறார்.
ரவீந்தர் நிகழ்ச்சியில் இருப்பதால்தான் டப் டாஸ்குகள் கொடுக்கவில்லை என்பது ரசிகர்களின் கருத்தாக இருந்தது. காரணம் ரவீந்தரால் கடினமான டாஸ்க்களை உடல் அளவில் செய்ய முடியாது என்பதால் அவருக்காக பிக் பாஸ் தரப்பினர்கள் நிகழ்ச்சியை சுவாரசியமான இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது ரசிகர்களின் கருத்தாக இருந்த நிலையில் அடுத்த வாரத்தில் ஆவது இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்குமா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications