குணசேகரன் வீட்டிற்குள் வரப்போவது யார்? கரிகாலன் கொடுத்த அப்டேட்.. “ஆதி பகவன்” ரசிகர்கள் கேட்ட கேள்வி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்காக வெளியான பிரமோவில் குணசேகரன் வீட்டிற்கு வந்த காரை பார்த்ததும் கரிகாலன் அடுத்த இடி என்று சொல்லி இருக்கிறார்.
அதில் யார் வந்து இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் அந்த பிரமோவை கரிகாலனாக நடிக்கும் நடிகர் விமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு பல்வேறு ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களால் பேசப்படும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யூகிக்க முடியாத வகையில் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கதையை தெரிந்து கொள்வதற்காகவே பலர் காத்து கிடக்கின்றனர்.
அதனால் தான் தொடர்ச்சியாக இந்த சீரியல் டிஆர்பியில் டாப் 10 இடத்தில் முதலிடத்தை சில வாரங்களாக பெற்று வருகிறது. இதில் குணசேகரன் ஆக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து சில வாரங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவை ஏற்றுக் கொள்ள முடியாத ரசிகர்கள் அவருடைய கேரக்டரில் இனி வேறு யாரும் நடிக்க வேண்டாம் அவரைப் போன்று யாராலும் நடிக்க முடியாது. என்றெல்லாம் கருத்து தெரிவத்து வந்தனர். அதுபடி தான் தற்போது சீரியல் கதையும் பயணித்து வருகிறது.

அது மட்டுமல்லாமல் குணசேகரனுக்கு அண்ணன் ஒருவர் இருந்தார் என்று குணசேகரனின் அம்மா விசாலாட்சி சொல்லி இருக்கிறார். ஆனால் மருத்துவமனையிலேயே அவர் இறந்து போய்விட்டார் என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில் அதிகமான ரசிகர்கள் இந்த சீரியலில் குணசேகரனுக்கு பதிலாக இன்னொரு நடிகர் நடிப்பார். ஆனால் அவர் குணசேகரன் கேரக்டரில் நடிக்காமல் குணசேகரனுக்கு அண்ணனாக மீண்டும் சீரியலில் களமிறங்குவார் என்று எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
அதே நேரத்தில் நேற்றைய எபிசோடில் குணசேகரனை தேடி ஞானமும் கதிரும் வீட்டை விட்டு கிளம்பி போயிருக்கின்றார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் வீட்டில் விசாலாட்சி, ஜான்சி ராணி, கரிகாலன், நந்தினி, ரேணுகா என எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு கார் வீட்டிற்குள் வேகமாக வருகிறது. அதை பார்த்த கரிகாலன் அடுத்த இடி வந்துடுச்சு என்று சொல்கிறார். அதை பார்த்து நந்தினியும் ரேணுகாவும் மரண பயத்தில் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த ப்ரோமோவை கரிகாலன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து "அடுத்த இடி" என்று அப்டேட் கொடுத்திருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் யாராயிருக்கும் என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அதில் ஒரு ரசிகர் "கரிகாலன் மாமா, ஆதி பகவான் யாரு யாரை நடிக்க வச்சிருக்கீங்க..?" என்று கேள்வி கேட்டு இருக்கிறார். அதற்கு 6 லைக் கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் ஏற்கனவே நேற்று ஈஸ்வரி ஜீவானந்தத்திடம் குணசேகரனை தேட வேண்டும் என்று சொன்னதால் ஜீவானந்தம் நான் தேடிப் பார்க்கிறேன். ஆனால் வெண்பா என்று சொல்ல, வெண்பாவை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருந்தார். இப்போ இருக்கிற சூழ்நிலையில் வெண்பாவை உங்க வீட்டில் எப்படி வைத்துக் கொள்ள முடியும் என்று கேட்டதற்கு கூட ஈஸ்வரி நான் இப்ப எல்லாம் நல்ல விஷயத்திற்க்கு பொய் சொல்ல தொடங்கிவிட்டேன் என்று சொல்லி இருந்தார்.
இந்த நிலையில் வெண்பாவை கூட்டிக்கொண்டு ஜீவானந்தம் வீட்டிற்குள் வருகிறாரா? அல்லது ஜீவானந்தத்தின் மனைவியை குணசேகரன் தான் கொலை செய்தார் என்ற உண்மை கௌதமக்கு தெரிய வந்ததால் கௌதம் குணசேகரன் வீட்டுக்கு வந்து இருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனால் இதுவரைக்கும் கௌதம் காரில் வந்ததில்லை. பைக்கில் தான் வருவார் இதனால் யாராக இருக்கும் என்ற குழப்பத்தோடு ரசிகர்கள் இன்றைய எபிசோடுக்காக காத்திருக்கின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications