கோலங்கள் சீரியல் ஆதியின் மனைவி யாரு தெரியுமா? சன் டிவி சீரியல் நடிகை தான்! இப்போ குடும்பத்தோடு கலக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 90ஸ் சீரியல் ரசிகர்கள் யாராக இருந்தாலும், கோலங்கள் சீரியலில் "ஆதி" என்ற வில்லன் கேரக்டரை மறக்க முடியாது. அந்த கதாபாத்திரத்தை உயிரோட்டமாக நடித்தவர் அஜய் கபூர். பல ஆண்டுகள் கடந்த பிறகும், "ஆதி" பற்றி பேசப்படுவது அந்த கேரக்டரின் தாக்கத்தை காட்டுகிறது. இப்போது அதே தன்னுடைய குடும்பத்தோடு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது

Ajay Kapoor Nisha Kapoor Kolangal Serial Sun TV

மனைவியும் சீரியல் நடிகை தான்

அஜய் கபூர் வாழ்க்கையில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், அவரது மனைவி நிஷா கபூர் தான். அவரும் சின்னத்திரை நடிகை தான். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியலில் நடித்து வருகிறார்.

நிஷா கபூர் சின்னத்திரையில் அறிமுகமானது ருத்ர வீணை சீரியல் மூலம். அதன் பிறகு பல வாய்ப்புகள் வந்தாலும், சில காலம் இடைவெளி எடுத்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பியிருப்பது தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

விஜய் பட வாய்ப்பு

நிஷா கபூர் தனது ஆரம்ப கால அனுபவத்தைப் பகிரும்போது ஒரு முக்கிய விஷயத்தை கூறியுள்ளார். பள்ளி படிப்பை முடித்த பிறகு மாடலிங் துறையில் அவர் நுழைந்தார். கல்லூரி படிக்கும் காலத்திலேயே பல விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அந்த நேரத்தில் சினிமா வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தன.

அப்போது விஜய் நடித்த ஷாஜகான் படத்தில் நடிக்க அழைப்பு வந்ததாம். இது பலருக்கும் பெரிய வாய்ப்பாக இருந்தாலும் நிஷா கபூர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம். அதற்கு காரணம் என்னவென்றால், சினிமாவை விட சீரியல் நடிப்பில் தான் அதிக ஆர்வம் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் எடுத்த முடிவு தான் தனது பாதையை மாற்றியதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அந்த நேரத்தில் தான் எடுக்க முடிவு தவறு என்பது நான் நிஷாவுக்கு பிறகு தான் தெரிந்ததாம். "ஷாஜகான்" படம் பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்தவர்களுக்கு நல்ல அடையாளம் கிடைத்தது. அந்த நிலையில், அப்போது எடுத்த முடிவை நினைத்தால் இப்போதும் சின்ன வருத்தம் இருக்கத்தான் செய்கிறது என வரும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

Ajay Kapoor Nisha Kapoor Kolangal Serial Sun TV

விளம்பரங்களில் இருந்து சீரியலுக்கு

நிஷா கபூர் சினிமா மற்றும் சீரியலுடன் தனது நடிப்பை நிறுத்தவில்லையாம். அவர் 100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார். "டாடா டீ" விளம்பரம் தான் அவரது முதல் முக்கியமான வாய்ப்பு. அதன் பிறகு தொடர்ந்து தனது அனுபவத்தை வளர்த்துக்கொண்டார்.

சின்னத்திரையில் ஆரம்பித்த "ருத்ரவீணை" சீரியலுக்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்திருந்தாலும், தற்போது மீண்டும் "மல்லி" மூலம் திரும்பியுள்ளார்.

குடும்பம்

அஜய் கபூர் மற்றும் நிஷா தம்பதியரின் குடும்ப புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர்களின் மகனை பார்த்த ரசிகர்கள், "இவங்க மகன் இவ்வளவு பெரியவனாக ஆகிட்டாரா?" என்றும், "அடுத்த ஹீரோ ரெடியா இருக்காரே!" என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆதி மீண்டும் வருவாரா?

அந்த குடும்பம் மீண்டும் பேசப்படுவதற்கான இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது சமீபத்தில் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கேரக்டர் மாற்றப்பட்டு அவர் கோமாவில் இருந்து திரும்ப வருவது போல கதை போய்க் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் புதியதாக குணசேகரனுக்கு ஒரு வில்லன் வருகிறார் என்று சொல்லப்பட்டது. அப்போது கோலங்கள் ஆதி இனி எதிர்நீச்சல் சீரியலில் திரும்ப வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.

இதனால், "ஆதி வந்திருந்தால் இன்னும் தாக்கம் இருந்திருக்கும்" என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு காலத்தில் வில்லன் கேரக்டர் மூலம் புகழ் பெற்ற அஜய் கபூர், இப்போது சமீப காலமாக எந்த திரைப்படங்களிலும் சீரியலிலும் நடிக்கவில்லை. இதனால் இவர் மீண்டும் நடிக்க வர வேண்டும் என்பது பலருடைய ஆசையாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+