சூப்பர் சிங்கர் 9 டைட்டில் வின்னர் இவர்தானா? அதுவும் இத்தனை லட்சம் பரிசா? இதுவரை இல்லாத மாற்றம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நேற்று இறுதி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் வெற்றியாளராக ஸ்ரீநிதாவிற்கு டைட்டில் வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு அவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக கிடைத்திருக்கிறது.
அதுபோல இதுவரைக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் டைட்டில் ஜெயித்தவர்கள் குறித்து அதிகமாக இணையதளத்தில் நெகட்டிவ் ஆக விமர்சிக்கப்படும் நிலையில் இந்த சீசனில் ஸ்ரீநிதாவிற்கு டைட்டில் கொடுத்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். அதிலும் விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் அதில் ரசிகர்களின் மத்தியில் ஒரு சில நிகழ்ச்சிகள் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதில் ஒன்றுதான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சி பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. அதோடு இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்ற இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவரைக்கும் தங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த பல பிரபலங்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக வெள்ளி துறையில் பின்னணி பாடகர்களாக ஜொலித்துக் கொண்டிருப்பதை பார்க்கலாம்.
அதற்கு பலரை எடுத்துக்காட்டாகவும் சொல்லலாம். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சீனியர் நிகழ்ச்சியை விடவும் குழந்தைகள் குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் ஏகப்பட்ட வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை மா காபா மற்றும் பிரியங்கா தேஷ் பாண்டே தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போதைய சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 ஜூன் மாதத்திலேயே ஆரம்பமாகி இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர்கள் பலரும் தங்களுடைய திறமையை சிறப்பாக வழிகாட்டி இருந்தனர். தற்போது நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி படத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 போட்டியாளரான ஸ்ரீநிதா, ஷிவாத்மிகா, ஹர்ஷினி, கோகுல் ஆகிய நான்கு பேருமே சேர்ந்து ஒரு பாடலை பாடி இருக்கிறார்கள்.
இதுவும் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் கிடைத்த வரவேற்பால் கிடைத்த வாய்ப்பு தான். அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியின் இசை அமைப்பாளர் தமன் மற்றும் இமான் இருவரும் குழந்தைகளுக்கு சினிமாவில் பாடல் பாட வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று இந்த சூப்பர் சிங்கர் சீசன் 9 ஜூனியர் நிகழ்ச்சிக்கான இறுதி நாள் நிகழ்ச்சி லைவாக ஒளிபரப்பானது.
இதில் இந்த சீசனில் ஸ்ரீநிதா டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார். இவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கிடைத்திருக்கிறது. இதுவரைக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்தவர்கள் பற்றி சோசியல் மீடியாவில் அதிகமான சர்ச்சைகள் எழும். பட்டம் தகுதி இல்லாதவர்களுக்கு கொடுத்து விட்டார்கள்.
தகுதியானவர்களுக்கு கொடுப்பதில்லை என்றும் இது சேனல் செய்யும் ஏமாற்று வேலை என்றும் அதிகமானோர் விமர்சித்து வருவதை பார்க்க முடியுமாம். ஆனால் இந்த முறை சரியான நபருக்கு தான் பட்டம் கொடுத்திருப்பதாக அதிகமான ரசிகர்கள் கருத்து வெளியிட்டு டைட்டில் வின்னர் ஸ்ரீநிதாவை பாராட்டி வருகிறார்கள்.
-
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications