மூத்த நடிகரின் சுயரூபமே வேற.. பட்டென போட்டுடைத்த நடிகை.. யாரந்த உண்மை, கண்ணியம் மிக்க பிரபல டைரக்டர்
சென்னை: யாரையுமே பேச்சை, தோற்றத்தை வைத்து எடை போட முடியாது.. எனினும் மீடியா முன்னாடி சில விஷயத்தை சொல்லியே ஆக வேண்டியிருக்கு என்று 2 பிரபலங்கள் பற்றி பேட்டி ஒன்றில் சமீபத்தில் கூறியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.
Titanic Media சேனலுக்கு பேட்டி தந்துள்ள செய்யாறு பாலு, "அவர் ஒரு இயக்குனரும் நடிகரும் ஆவார்.. தற்போது தமிழைவிட தெலுங்கில்தான் நிறைய படங்களை செய்துட்டு வர்றார்.. கேரக்டர், வில்லன் ரோல்களை செய்து வருகிறார். விருகம்பாக்கம் ஆபிஸைவிட, ஹைதராபாத்தில்தான் அதிக நேரம் இருக்கிறார்..

பிஸியான டைரக்டர், நடிகர்
இதனால் மாத மாதம் 15 நாட்களுக்கு தன்னுடைய குடும்பத்துடன், ஹைதராபாத் சென்றுவிடுவார். அவரை சந்திக்க நான் ஒருமுறை சென்றிருந்தேன்.. அப்போது ஒரு பள்ளியின் தாளாளரும் அங்கே வந்திருந்தார். அந்த நடிகரிடம் தாளாளர் பேசும்போது, தங்களுடைய பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு அழைப்பு விடுத்து, மாணவர்களுக்கு ஏதாவது அட்வைஸ் தந்து உரைநிகழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
உடனே அந்த நடிகர், எதைபற்றி அட்வைஸ் தரவேண்டும்? என்று கேட்டார், அந்த பள்ளி தாளாளர், இன்றைக்கு போதைப்பழக்கத்துக்கு, நிறைய மாணவர்கள் சிக்கி கொள்கிறார்கள்.. அதனால், நீங்கள் அதுகுறித்த விழிப்புணர்வு தரவேண்டும் என்றார்.
அட்வைஸ் பண்ண தகுதி இல்லை
உடனே அந்த நடிகர், இதைக்கேட்டு சிரித்துவிட்டார்.. போதை, சிகரெட் பழக்கவழக்கம் எல்லாம் எனக்கும் ஒருகாலத்தில் இருந்தது.. இப்போது போதையை குறைத்து கொண்டிருக்கிறேன்.. ஆனால், முற்றிலுமாக ஒழிக்கவில்லை.. ஒரு கெட்ட பழக்கத்தை முழுமையாக விட்டொழிக்காமல், மாணவர்கள் முன்பு நின்று அறிவுரை சொல்ல, எனக்கு தகுதி கிடையாது.
நன்கொடை பெற்று இலவச கல்வியை மாணவர்களுக்கு நீங்கள தந்துகொண்டிருக்கும்போது, அந்த பள்ளிக்கு நான் வருவதற்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும். ஆனால், அட்வைஸ் செய்ய எனக்கு தகுதி கிடையாது. வேண்டுமானால், நான் பள்ளிக்கு வந்து, மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகளை மட்டு தருகிறேன் என்றார். அந்த நடிகரின் உண்மைத்தன்மையான வார்த்தையை கேட்டதுமே, தாளாளருக்கு ஆச்சரியமும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
பிரபல மூத்த நடிகர்
இதேபோல இன்னொரு மூத்த நடிகரை பற்றி இங்கு சொல்ல வேண்டும்.. 80'களில் கொடிகட்ட பறந்தவர்.. இவர் தெருவில் போறவங்களுக்கெல்லாம் அட்வைஸ் தரக்கூடியவர்.. மேடைக்கு மேடை அறிவுரை தருவார்.. எல்லா டாபிக் பற்றியும் பேசுவார்..
80களில் நடித்த ஒரு நடிகையை நான் சமீபத்தில் சந்திக்க நேர்ந்தபோது, பழைய சினிமா கதைககள் பற்றி பேச நேர்ந்தது.. அப்போது, இந்த மூத்த நடிகரை பற்றின பேச்சை நான் எடுத்தேன். உடனே அந்த நடிகையின் முகம் மாறிவிட்டது.
நடிகரின் மறுபக்கம்
உங்களுக்கெல்லாம் நடிகர்களின் ஒருபக்கம்தான் தெரியும், அவர்களின் மறுபக்கம் முழுமையாக தெரியாது. ஒருமுறை, நானும் இன்னொரு நடிகையும், அவருடன் அவுட்டோர் ஷூட்டிங்கில் நடித்து கொண்டிருந்தோம். அங்கே பாத்ரூம் வசதிகள் இல்லை.. இயற்கை உபாதைக்காக நாங்கள் இருவரும் வெளியே வந்தோம். அப்போது அந்த நடிகர் ஒளிந்திருந்து எங்களை பார்த்ததை கண்டுபிடித்துவிட்டோம்.. அந்த நடிகர் மீது 100-ல் நாங்கள் வைத்திருந்த மதிப்பு, அந்த நிமிடமே பூஜ்யத்துக்கு வந்துவிட்டது என்றார்.
ஆக, முதலில் சொன்ன இயக்குனரின் உண்மை பேச்சு, வெளிப்படைத்தன்மைக்கும், இப்போது சொன்ன மூத்த நடிகரின் கேவலமான செயலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.. அதனால், தமிழ் சினிமாவில் யாரையுமே முழுமையாக அறியாமல் எடை போட முடியாது" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications