பிரபல நடிகை வீட்டில் அமைச்சரின் பணம்? அங்கே ராமாவரம் தோட்டத்தில் லைட் போட ஆள் இல்லை.. பிரபலம் நறுக்
சென்னை: "அரசியல் என்பது, காமராஜருக்கும், கக்கனுக்கும், ரெட்டைமலை சீனிவாசனுக்கும், ஜீவாவுக்குமானதுதான் அரசியல்.. மற்றபடி அரசியல் என்பது சினிமாக்கார அரசியலோ, நடிகைகளுக்கான அரசியலோ கிடையாது' என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு, தமிழா தமிழாபாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் அவர் வேதனையுடன் பகிர்ந்து கொண்டுள்ளதாவது: "கீர்த்தி சுரேஷூக்கு திருமணம் நடப்பது இயற்கையான விஷயம்தான்.. இது ஒன்றும் பரபரப்பு செய்தி கிடையாது.. கிறிஸ்தவ மணமகனை திருமணம் செய்துள்ளார். நூறாண்டு வாழட்டும் கீர்த்தி சுரேஷ்.. விஜய்யின் ஆசீர்வாதத்துடன் திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்ததும் கீர்த்தி சுரேஷ், விஜய்யின் கட்சியில் இணைய வாய்ப்புள்ளது.. கீர்த்தி சுரேஷ், திரிஷா இவங்களுக்கெல்லாம் அரசியல் தெரியுமா? சிறைக்கு சென்றிருக்கிறார்களா? தியாகங்கள் பற்றி தெரியுமா? உழைக்கும் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி தெரியுமா? இந்தம்மா சம்பளம் 5 கோடி, அந்தம்மா 7 கோடி, விஜய் 150 கோடி, மக்கள் பூராவும் தெருக்கோடி..
சினிமாக்காரன் சினிமாவிலேயே இருக்கட்டுமே.. எதுக்கு அரசியலுக்கு வரணும்? பொதுஒழுக்கம், பொதுநோக்கம், பொது சிந்தனை இது எதுவுமே சினிமாக்காரருக்கு கிடையாது.. அதுவும், 150 கோடி சம்பளம் வாங்குறவருக்கு இதயமே இருக்காது.. எம்ஜிஆரர் ஒருவரை தவிர, மற்றவர்கள் இதயமே இல்லாதவர்கள்தான். எம்ஜிஆர் உயிரோட இருக்கும்வரை, ரேஷன் கடையில் எந்த விலையும் ஏறவில்லை. ஏனென்றால், ரேஷன் பொருட்கள் ஏழைகளுக்கானது, அதில் விலையை உயர்த்தக்கூடாது என்று சொன்னவர் எம்ஜிஆர்.
ராமாவரம் தோட்டத்தில் இன்று லைட் போடறதுக்கு ஆள் இல்லாமல் இருட்டாக இருக்கு.. பணத்தை எம்ஜிஆர் பதுக்கி வெச்சிருக்காரா என்ன? எல்லாவற்றையும் மக்களுக்காகவே தந்துட்டார். காதுகேளாதோர் பள்ளி, வாய் பேசதோர் பள்ளி, கண் தெரியாதோர் பள்ளி என இப்படி பல கோடிகளை மக்களுக்காக தந்தவர் எம்ஜிஆர். இன்னமும் எம்ஜிஆரின் கடிகாரம் சமாதியில் ஓடுதான்னு பார்த்துட்டுதான் இருக்காங்க.
வெள்ள மாவட்டம்: ஆனால் விஜய், பனையூரில் வந்து அரிசியை வாங்கிக்க சொல்றார்.. வெள்ள மாவட்டத்துக்கு ஏன் நேரில் இவர் போகல? செக்யூரிட்டி பிரச்சனை என்கிறார்கள்.. அப்படின்னா இவரென்ன மோடியா? ஒபாமாவா? வெள்ள பாதிப்பு என்றால் மோடியே இறங்கி போய் பார்க்கிறாரே.. ஏழை மக்களுக்கானவர்களுக்கு செக்யூட்டி என்பது தேவையில்லையே.. காமராஜருக்கு என்ன செக்யூரிட்டி இருந்தது? பெரியாருக்கு என்ன செக்யூரிட்டி இருந்தது? கக்கனுக்கு என்ன செக்யூரிட்டி இருந்தது?
பட்டிதொட்டிகளிலும், வீதிகளிலும், முட்டு சந்திகளிலும் தொண்டனின் பெயர் தெரிந்தவர்கள் இந்த தமிழ்நாட்டில் 2 பேர்தான்.. ஒருவர் பெரியார், இன்னொருவர் காமராஜர்.
கேரவனில் கட்சி: ஆனால், கேரவனிலேயே கட்சியை நடத்திக்கொண்டு, பனையூர் பங்களாவில் மனைவி குழந்தைகளை விரட்டிவிட்டுவிட்டு, தனி ஒரு நபரால் எப்படி முதல்வராக முடியும்? இளைஞர்களுக்கான அரசியல் இன்னமும் அவர்களிடம் போய் சேரவில்லை. இதுதான் வேதனையாக உள்ளது. அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கானது. ஆனால், நடிகைகளுடன் போய் நின்றுவிடுகிறது இன்றைய அரசியல்
பல கோடி ரூபாய் மக்களின் பணத்தை கொள்ளையடித்ததாக, ஒரு அமைச்சர் வீட்டில் ரெய்டு நடக்குது. அதேசமயம், அமைச்சரின் பணத்தை தேடி பிரபல நடிகையின் வீட்டிலும் ரெய்டு நடக்குது. இதை எப்படி எடுத்து கொள்வது? இதை எப்படி விமர்சனம் செய்யாமல் இருக்க முடியும்? எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே இவைகளை விமர்சனம் செய்ய வேண்டியிருக்கிறது. மற்றபடி இவர்களின் அந்தப்புரங்களை கிளற வேண்டும் என்பது நம்முடைய நோக்கமில்லை.
காதல் திருமணம் : ஒரு நடிகையும், இயக்குனரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்காங்க.. ஆனால், 1 கோடி ரூபாய் பணத்துக்காக, தயாரிப்பாளரின் அந்தபுரத்துக்கு, கட்டின மனைவியையே போக சொல்கிறார் கணவர். உடனே அந்த நடிகை ஆவேசமடைந்து, கணவனையே தூக்கி எறிந்து விட்டது.
கேரளாவில் ஹேமா கமிட்டி வந்ததே? இங்கே தமிழ்நாட்டில் வந்ததா? ஆனால், 100 மடங்கு பிரச்சனை இங்கேதோன் இருக்கு. அத்தனை கேரள நடிகர்கள் மீது எப்ஐஆர் போட்டாங்களே, இங்கே யார் மீதாவது போட்டார்களா? இதைதான் நாம் விமர்சனம் செய்ய வேண்டியிருக்கு.
துரோகிகள்: மக்களை ஏமாற்றினால் விமர்சனம் செய்யாமல் எப்படி இருக்க முடியும்? தியாகி துரோகி ஆகிவிடுகிறான்.. துரோகி தியாகி ஆகிவிடுகிறான்.. ஆக, சினிமா என்பது, சினிமாக்காரரின் வேலை, அரசியல் என்பது அரசியல்வாதிகளின் வேலை. இங்கே நடிகைகளுக்கான அரசியல் எப்போதுமே செல்லாது..!!












Click it and Unblock the Notifications