நடிகையை சீண்டிய 2 பிரபல நடிகர்கள்.. "முத்துலட்சுமி"க்கு வந்த சோதனை? மீண்டும் முதல்ல இருந்தா
சென்னை: கேரளாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஹேமா கமிட்டி அறிக்கை உண்டுபண்ணியிருந்த நிலையில், மீண்டும் ஒரு பரபரப்பு சம்பவம் அங்கே நடந்துள்ளது.. அதேபோல கன்னட திரையுலகிலும் பாலியல் புகார் வெடித்து கிளம்பியிருப்பது, திரைவட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள திரையுலகில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையானது, வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியிருந்தது.. இந்த அறிக்கை வெளியானதுமே, நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக், டைரக்டர் ரஞ்சித், நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது..

ராஜினாமா: அதேபோல, கேரளா நடிகர்கள் சங்கத்தின் AMMA (Association of Malayalam Movie Artists) நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தது அதற்கு மேல் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு நியமித்தது. இந்த குழுவானது விசாரணை நடத்தி மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணைகளும் நடந்து வருகின்றன. மலையாள சினிமாவில் எல்லை மீறலுக்கு காரணம் என்ன? என்பது குறித்த விவாதங்களும் மற்றொருபக்கம் சோஷியல் மீடியாவில் எழுந்தன.
நடிகைகள்: மலையாள படங்கள் பெரும்பாலும் வெவ்வேறு லோகேஷன்களில் எடுக்கப்படுகின்றன. இதனால் நடிகைகள் மாதக்கணக்கில் தங்கள் வீட்டை விட்டு பிரிந்திருக்க நேரிடுகிறது. இதனால் அவர்களிடம் தவறாக நடந்துகொள்கிறார்கள். மற்ற சினிமா துறைகளைவிட, மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு என்று நடிகை சுகாசினி சமீபத்தில்கூட தன்னுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதே மலையாள திரையுலகில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி 2 நடிகர்கள் மீது சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சீரியல்: சினிமாவில் வாய்ப்பு தருவதாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள சீரியல் நடிகை ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். திரையுலகினரின் பாலியல் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவிடமே இந்த புகாரை, மலையாள சீரியல் நடிகை தந்திருப்பது, மீண்டும் மல்லுவுட்டில் புயலை கிளப்பியிருக்கிறது.
சீரியல் ஷூட்டிங்கில் தான் கலந்து கொண்டிருந்தபோது நடிகர் பிஜூ ஷோபானம், ஸ்ரீகுமார் ஆகியோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அந்த நடிகை புகார் தந்துள்ளார்.. இதையடுத்து, நடிகை தந்த புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை நடத்தியிருக்கிறது..

அறிவுறுத்தல்: பிறகு இது குறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்ஃபோ பார்க் போலீசாருக்கும் அறிவுறுத்தியிருக்கிறது. இதையடுத்து, நடிகர்கள் பிஜூ ஷோபானம், ஸ்ரீகுமார் ஆகியோர் மீது போலீசார் பாலியல் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில், நடிகர்கள் மீது புகார் கொடுத்த அந்த நடிகை, தான் நடித்து வந்த சீரியலில் இருந்து விலகியிருக்கிறாராம்.. ஆனால், நடிகர்கள் மீது பாலியல் புகார் அளித்ததற்காக அந்த நடிகை சீரியலில் இருந்து விலக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதேபோல கன்னட திரையுலகிலும் ஒரு புகார் முளைத்துள்ளது.. "முத்துலட்சுமி" என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் சாரித் பாலப்பா. இவர் மீது கன்னட தொலைக்காட்சி நடிகை ஒருவர் பெங்களூரு ஆர்.ஆர்.நகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தொந்தரவு: அந்த புகாரில் சாரித் பாலப்பா என்னை காதலிப்பதாகக் கூறி அவரது ஆசைக்கு இணங்கும்படி என்னை வற்புறுத்தினார். ஆனால் நான் மறுக்கவே, என்னை தொடர்ந்து தொந்தரவு செய்தார். நண்பர்களுடன் ஒருமுறை என் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து என்னை துன்புறுத்தினார். பணம் தராவிட்டால் எனது அந்தரங்க போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பரப்பிவிடுவதாக மிரட்டினார். அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் சாரித் பாலப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications