திருத்தணியில் திருமணம் முடிந்ததும் நடிகர் பிரேம்ஜி முகத்தில் 1000 வாட்ஸ் பல்ப்! மணப்பெண் யார்?
சென்னை: ஒரு வழியாக நடிகர் பிரேம்ஜிக்கு இன்று காலை திருத்தணியில் திருமணம் நடந்து முடிந்துவிட்டது. அவருடைய மனைவி இந்து யார் தெரியுமா?
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜிக்கு 45 வயதாகிறது. அவருக்கு ஒரு திருமணம் நடக்காதா என அவருடைய தந்தை கங்கை அமரன் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தார். அவருக்கு பெண்ணையும் தேடி வந்தார்.

பிரேம்ஜி இயக்குநரும் ஆவார். இவர் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் அவருடைய உறவினர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். பிறகு பின்னணி பாடகராக மாறினார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பெரும்பான்மையான ராப் பாடல்களை பிரேம்ஜி பாடியுள்ளார். அது போல் சில ஆல்பங்களையும் தயார் செய்திருக்கிறார். 2006 ஆம் ஆண்டு சிலம்பரசனின் வல்லவன் படத்தில் கதாநாயகியின் தோழனாக பிரேம்ஜி அறிமுகமானார். இவர் சென்னை 600 028 என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் அவரை நகைச்சுவை நடிகராக மாற்றியது.
பிறகு சரோஜா, கோவா, மங்காத்தா, சேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து பார்த்து அந்த யோகமானது தற்போதுதான் கூடியது. பிரேம்ஜிக்கு இன்றைய தினம் காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள்ளாக திருத்தணி அருள்மிகு முருகன் சன்னதியில் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் பிரேம்ஜியின் மனைவி யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அதில் அவர் மீடியா துறையில் வேலை பார்ப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இது தவறு என வெங்கட் பிரபு மறுத்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் பெயர் இந்து என்றும் அவர் ஒரு வங்கி அதிகாரி என்றும் இந்துவும் பிரேம்ஜியும் காதலித்து வந்ததாகவும் இரு வீட்டிலும் சொல்லி தற்போது திருமணம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கங்கை அமரன் வீட்டில் நீண்ட நாளாக எதிர்பார்த்து நடக்கும் விஷயம் என்பதால் இது குறித்து வெங்கட் பிரபு சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. "பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்? சொப்பன சுந்தரியை இப்போ யார் வெச்சிருக்கா!" இதை எல்லாவற்றையும் விட, பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?" என்ற உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்.

வரும் 9 ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம் ஜி தான் விரும்பும் பெண்ணை அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்ந்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்.
இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார். எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலாவுகின்றன. மணமகள் மீடியாவை சேர்ந்தவர் இவ்லை. திருமணம் முடிந்தடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன். எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி, அதையும் வைரலாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரும் சந்திப்போம்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications