இளையராஜா மகளான பவதாரிணியின் கணவர் இவரா? பிரிந்தாலும் மனைவிக்காக கடைசி நேரத்தில் செய்த செயல்!
சென்னை: இளையராஜாவின் மகளான பவதாரணி சமீபத்தில் உடல்நல குறைவால் காலமானார். இவருடைய இறப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும், திரையுலகினர்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பவதாரணி இதுவரைக்கும் 30க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். அதோடு பத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசை அமைத்திருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் நான்காவது ஸ்டேஜ் வரைக்கும் வீட்டிற்கு தெரியாமல் இருந்த நிலையில் பிறகு தெரிய வந்த பிறகு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். பவதாரிணி மறைவிற்கு அதிகமான தமிழ் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர் பற்றிய நினைவுகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பவதாரிணியின் உடல் இளையராஜாவின் சொந்த ஊரான தேனியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது அவருடைய கணவர் அழும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. இந்த சூழலில் தான் பவதாரிணியின் கணவர் குறித்த விவரங்கள் இப்போது இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது. அதில் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் பிரபல பத்திரிக்கையாளர் ராமச்சந்திரன் மகன் சபரி ராஜ் உடன் தான் பவதாரிணிக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது.
அதுவும் 2005 ஆம் ஆண்டு பிரமாண்டமாக சென்னையில் வைத்து திருமணம் நடைபெற்று இருக்கிறது. இவர்களுடைய திருமண வரவேற்பிற்கு ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சில வருடங்கள் கழித்து பவதாரிணிக்கும் அவருடைய கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து இருக்கின்றனர். பவதாரிணி தன்னுடைய கணவரை விட்டுவிட்டு தன்னுடைய அப்பா வீட்டில் தான் வசித்து வந்திருக்கிறார்.
இளையராஜாவின் செல்ல மகளான பவதாரிணி அவரோடு சில காலங்கள் இருந்திருக்கிறார். ஆனால் கடைசி காலத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பது தெரிய வந்த பிறகு அவருடைய கணவர் சபரி ராஜ் பவதாரிணியோடு சேர்ந்து பல முயற்சிகளை செய்து அவரை காப்பாற்றி விட வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தன்னுடைய மனைவியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பல சிகிச்சைகளுக்கும் கூட்டிட்டு போனதாகவும் கூறப்படுகிறது. பவதாரிணிக்கு குழந்தை இல்லை என்பது பெரிய வருத்தத்தில் இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவருக்கு எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்திருந்தார். இந்த நிலையில் பவதாரிணியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் தான் பவதாரிணி கூட பிறக்கவில்லை என்றாலும் தன்னுடைய சொந்த சகோதரியாக நினைத்து பழகி வந்த வெங்கட் பிரபு இன்று பவதாரிணியோடு எடுத்த கடைசி புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய வருத்தத்தை தண்ணீராக பதிவு செய்திருக்கிறார். அந்தப் புகைப்படம் இப்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீட்டிற்கு ஒரே பெண் குழந்தையாக இருந்த பவதாரிணியின் இழப்பு அவருடைய குடும்பத்தை மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களையும் பெரிய அளவில் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தொடர்ச்சியாக youtube பக்கங்களில் பவதாரிணி பாடிய பாடல்களும் அவரைப் பற்றிய செய்திகளும் தான் அதிகமாக இடம்பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications