ராஜா ராணி ஜாக்கி... யாருக்கு கிடைக்கும் ஹோம் கீ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் வீட்டு பொறுப்பு பரம்பரை நகையை யாருக்கு கொடுக்கலாம் என்பதில் மூனு மருமகள்களுக்கும் ஊரிலிருந்து வந்த பெரிய அத்தை போட்டி வைக்கறாங்க.

முதலில் சமையலில் யார் கலக்கறாங்கன்னு போட்டி. ரெண்டாவது மருமகள் யாருக்கும் தெரியாமல் ஹோட்டலில் சாப்பாடு வாங்கி வந்து வைக்க, பெரிய அத்தை கண்டுபிடிச்சுடறாங்க.

முதல் மருமகள் நல்லாவே சமைச்சு இருந்தாலும், அதிக மசாலா உடலுக்கு கேடு... வயசானவங்க வீட்டுல இருக்காங்கள்ல பார்த்து சமைக்கணும்னு சொல்லி ரிஜெக்ட் பண்றங்க.

மருமக சம்பா

மருமக சம்பா

மூனாவது மருமக சம்பா சமைக்க ஆரம்பிக்கறதுக்கு முன்பே அவ புருஷன் சின்னையா சம்பா சமைக்கறதுக்கு தயாராகு சம்பா.. நீ பெரிம்மாகிட்ட நல்ல பேர் வாங்கணும்னு சொல்றான். என்ன சின்னய்யா நீங்க சமைக்கறதுக்கு தயாராகணுமா என்ன, சமையல் கட்டுக்கு போனா சமையல் தானா வர போகுது. இதுக்கெல்லாம் நல்லா சமைக்கணும்னு மனசு இருந்தா போதும் சின்னையான்னு சொல்றா.

நல்ல சமையல்

நல்ல சமையல்

சம்பா வாய்க்கு ருசியாவும், ஆரோக்கியமாகவும் சமைச்சுருக்கா. எல்லாரும் நல்லா சாப்பிடறாங்க. பேசிக்கிட்டே இருந்த பெரிய அத்தை, சம்பா சாப்பாடு நல்லா இருந்துச்சும்மா...அதிகம் மசாலா, ஆயில் இல்லாம சமைச்சு இருக்கே...ஆமா, இன்னும் எத்தனை பேர் சாப்பிடலாம்னு கேட்கறாங்க.

சாப்பிடலாம் அத்தே

சாப்பிடலாம் அத்தே

இன்னும் ரெண்டு பேர் சாப்பிடலாம் அத்தேன்னு சம்பா சொல்ல, பார்த்தியா தப்பு பண்ணிட்ட..நல்லா சமைக்கறது முக்கியம்னாலும், சாப்பாடு மீறாம சமைக்க கத்துக்கனும்மா.. எல்லாம் சரியா செய்தே இதுல கோட்டை விட்டுட்டியேன்னு சொல்றாங்க.இல்லை அத்தே வீணாகாதுன்னு சொல்றா சம்பா.

அவருக்கு அத்தை

அவருக்கு அத்தை

என்ன நாளைக்கு சாப்பிடுவியா, பழசை சாப்பிட்டா உடம்பு வீணா போகும் தெரியாதா உனக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே.. அம்மா பசிக்குதும்மா.. சாப்பாடு இருந்தா குடுங்கன்னு ஒரு குரல். இவருக்குத்தான் அத்தை...தினமும் ராத்திரி பசிக்குதுன்னு சாப்பாடு கேட்பாரு.நானும் அவருக்கு குடுத்துட்டு சாப்பிடுவேன்னு சொல்றா.

பொறந்தது யார் தப்பு

பொறந்தது யார் தப்பு

ஏழையா பொறந்தது யார் தப்பு அத்தே... பாவம் ராத்திரியில பசியோட படுத்தா தூக்கம் வராது அத்தே.. ஏழை வீட்டுலேர்ந்து வந்தவதான் அத்தே..இதெல்லாம் நானும் அனுபவிச்சு இருக்கேன். அதனாலதான் அவருக்கு தினமும் ராத்திரி சாப்பாடு சேர்த்து சமைப்பேன்னு சொல்றா.

இந்த சீன்ல கேட்கறவங்க கண்ணுலயும், பார்க்கறவங்க கண்ணுலயும் தண்ணீர் வந்தது என்னவோ உண்மைதான்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+