நடிகர் கவுண்டமணி குடும்பத்தை வெளியே காட்டாத காரணம்! அந்த நடிகையோடு வதந்தி.. பிரபலம் சொன்ன பகீர்
சென்னை: நடிகர் கவுண்டமணி முன்னணி நடிகராக நடித்து பிரபலம் அடைந்திருந்த நிலையில் பல வருடங்கள் கழித்து ஒத்த ஒட்டு முத்தையா என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கவுண்டமணி தன்னுடைய குடும்பத்தை வெளியே காட்டாத காரணம் குறித்து பேட்டி ஒன்றில் செய்யாறு பாலு சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அந்த வகையில் ஆரம்ப காலகட்டத்தில் கவுண்டமணி கால் சீட்டுக்காக பல நடிகர்கள் காத்திருந்த கதை எல்லாம் உண்டு. திரைப்படங்களில் கவுண்டமணி மற்றும் செந்தில் நடித்தால் மட்டுமே அந்த திரைப்படத்தை நாங்கள் வாங்குவோம் என்று பல விநியோகஸ்தர்கள் சொல்லி இருக்கிறார்களாம். அந்த அளவிற்கு பெயர் வாங்கிய கவுண்டமணி காமெடி நடிகராக நடித்து பிரபலம் அடைந்திருந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

ஆனால் அவருக்கு கதாநாயகனாக பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. காமெடியனாக அவரை ஏற்றுக் கொண்ட மக்கள் கதாநாயகனாக அவரை ஏற்றுக் கொள்ளவில்லையா? என்பது கேள்வியாக இருக்கிறது. அதே நேரத்தில் தான் கதாநாயகனாக நடித்து ஒரு சில திரைப்படங்கள் பிளாப் ஆனதால் அதற்குப் பிறகு தன்னிடம் கதை சொல்ல வந்தவர்களை கவுண்டமணி துரத்தி விடுவாராம்.
அதற்கு காரணம் என்னால் யாரும் நஷ்டப்படக்கூடாது, எனக்கு கதாநாயகனாக நடிப்பதற்கு செட்டாகவில்லை அதை விட்டு விடுங்கள் என்று கூறி விடுவாராம். ஒரே நேரத்தில் கவுண்டமணியிடம் கதை சொல்வதற்காக பலர் குவிந்திருந்தாலும் என்னை கதாநாயகனாக வைத்து படம் எடுக்க வேண்டும் என்று ஆசையில் யாராவது இங்கே இருந்தால் அவங்க முதல்ல வெளியே போயிருங்க என்று கராறாக கவுண்டமணி கூறி விடுவாராம்.
அது போல கவுண்டமணி எந்த இடத்திலுமே தன்னுடைய குடும்பத்தையும் வெளியே காட்ட விருப்பம் இல்லாதவராம். குடும்பத்தை மட்டுமல்லாமல் கவுண்டமணியும் பொதுவாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டாராம். இப்போது நடிகர் அஜித்குமார் எப்படி நிகழ்ச்சிகளில் தலை காட்டாமல் தன்னுடைய வாழ்க்கையை பார்த்துக் கொண்டிருக்கிறாரோ அது போல தான் கவுண்டமணி அப்போது இருந்திருக்கிறார்.
அதற்கு காரணம் கவுண்டமணி மீது தேவையில்லாமல் வந்த வதந்திகள் தான் என்று செய்யாறு பாலு கூறியிருக்கிறார். அந்த நேரத்தில் கவுண்டமணியோடு ஜோடியாக நடிக்கும் நடிகைகளோடு கவுண்டமணி இணைத்து பேசப்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது. அதிலும் நடிகை ஷர்மிளா தொடர்ச்சியாக சில திரைப்படங்களில் கவுண்டமணியோடு நடித்ததால் அவரை இணைத்து பல செய்தி சேனல்களில் செய்திகள் வெளியாகி இருந்ததால் அது கவுண்டமணியை பாதித்ததாம்.
கவுண்டமணி சூட்டிங் ஸ்பாட்டில் கூட கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பதால் அவரை சுற்றி பல கதாநாயகிகள் இருப்பதாலேயே அவரைப் பற்றி பல வதந்திகள் அடிபட்டுக் கொண்டிருந்ததாம். அந்த நேரத்தில் முன்னணி கதாநாயகர்கள் விடவும் அதிகமாக வதந்திகளில் சிக்கியது கவுண்டமணி தானாம். அதனாலேயே தன்னுடைய குடும்பத்தை வெளியே காட்டவில்லை என்று செய்யாறு பாலு கூறியிருக்கிறார். அதுபோல கவுண்டமணிக்கு சாந்தி என்ற மனைவியும் செல்வி மற்றும் சுமித்ரா என்ற இரண்டு மகள்களும் இருக்கிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications