பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் கோபி..இன்னும் 10,15 எபிசோடு தான்..கண்கலங்கி கூறிய காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து கோபி விலகப் போவதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

திடீரென்று கோபியாக நடிக்கும் சதீஷ் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்களின் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது.

சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் திடீர் முடிவு எடுக்க என்ன காரணம் என்று கோபி கூறி இருக்கிறார்.

Why actor Sathish quits Gopi character from serial Baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எதிர்பார்க்காத பல திருப்பங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அடுத்தடுத்து கோபி குடிக்க தொடங்கி இருக்கிறார். அதனால் பாக்யாவின் வீட்டிற்கு வந்து தங்கிவிட இப்போது ராதிகாவும் பாக்கியாவின் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்கிறார்.

இனி ராதிகா கொடுக்கும் டார்ச்சரால் பாக்யா வீட்டை விட்டுவிட்டு போகப் போகிறாரா? அல்லது பாக்கியா கொடுக்கும் டார்ச்சரால் ராதிகா வீட்டை விட்டு போகப் போகிறாரா அல்லது இவர்கள் இருவரும் சேர்ந்து கோபியை பாடாய படுத்துவார்களா? என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது.

இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து கோபியாக நடிகர் சதீஷ் தொடர்ந்து நடித்து வருகிறார். பலர் கோபியை கழுவி ஊத்தினாலும் இவருடைய நடிப்பை பலரும் பாராட்டவும் தவறுவது இல்லை குறிப்பாக கோபி, ராதிகா மற்றும் பாக்யா இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு தினறும் இடங்களிலும் சரி, தான் தவறாக ஏதேனும் நடித்து விட்டாலும் அதற்குப் பின்பும் வீடியோ வெளியிட்டு ரசிகர்களிடம் சதீஷ் பலமுறை மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

அடிக்கடி பாக்கியலட்சுமி சீரியல் பற்றி அப்டேட் கொடுத்து கோபி பல வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது இன்று ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. அதில் நான் சொல்ல போறதை கேட்டு உங்களுக்கு கோபம் எரிச்சல் வருத்தம் எல்லாம் வரலாம் ஆனால் எனக்கும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் இதை செஞ்சுதான் ஆக வேண்டும்.

Why actor Sathish quits Gopi character from serial Baakiyalakshmi

இன்னும் கொஞ்ச நாளில் அதுவும் 10,15 எபிசோட்டில் நான் இந்த பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகப் போகிறேன்.
சதீஷ் ஆகிய நான் கோபியாக நடித்துக் கொண்டிருக்கிற இந்த கேரக்டரை விட்டு விலகுகிறேன். காரணங்கள் பல இருக்கு. ஆனா கொஞ்சம் பர்சனல் ரீசன் இருக்கிறது. எனக்கு இந்த வாய்ப்பு தந்த விஜய் டிவிக்கு நன்றி.

நான் எனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக நடித்து முடித்து இருக்கிறேன். இதனால் எனக்கு அன்பு கொடுத்த உங்களுக்கு நன்றி என்று சதிஷ் சொல்லி வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் என்ன காரணமாக இருக்கும் என்ற பல்வேறு கேள்விகளும் ஏற்கனவே விஜய் டிவி எட்டாவது பிலிம் பேர் டெலிவிஷன் அவார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்த சீரியலில் நடித்த பலருக்கும் அவார்ட் கொடுத்திருக்கும் நிலையில் கோபிக்கு அவார்டு கிடைக்கவில்லையா? அதனால் தான் இந்த முடிவா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+