பிறந்தவுடன் அரவிந்த்சாமியை தத்து கொடுக்க காரணம் இதுதான்..மனம் திறந்த அவர் தந்தை நடிகர் டெல்லி குமார்
சென்னை: 90ஸ் காலகட்டத்தில் அதிகமான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பலருடைய மனதை கவர்ந்த நடிகர் அரவிந்தசாமி தற்போது வில்லனாகவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவருடைய உண்மையான தந்தை சின்னத்திரை நடிகரான டெல்லி குமார் முதல்முறையாக அரவிந்த்சாமி குறித்து பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதில் நடிகர் அரவிந்தசாமி தன்னுடைய மகன் தான் என்றும் தான் எதனால் அவர் பிறந்ததுமே தத்து கொடுத்தேன் என்பது பற்றியும் பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
சின்னத்திரையில் ஒரு சிலருடைய முகம் தான் பல வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத அளவிற்கு அதிகமான ரசிகர்களின் மனதில் பதிந்து விடுகிறது. அந்த வகையில் ஒருவர் தான் டெல்லி குமார். இவர் ஆனந்தம், மெட்டிஒலி, தலையணை பூக்கள், பாண்டவர் இல்லம் என பல சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்திருந்தார். ஒரு காலகட்டத்தில் இவர் நடிக்காத சேனல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பிசியோ பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார்.
எந்த சேனல் பார்த்தாலும் இவருடைய நடிப்பும் கதாபாத்திரமும் முக்கியம் வாய்ந்ததாகவே இருந்து வந்தது. அதுவும் மெட்டிஒலி சீரியலில் அப்பா கேரக்டரில் இவர் நடித்து பலருடைய அனுதாபங்களையும், பாராட்டுகளையும் பெற்றிருந்தார். அதுபோல அவருடைய மகன் அரவிந்தசாமி 90ஸ் காலகட்டத்தில் பல பெண்களின் கனவு காதலனாக வலம் வந்தவர் தான்.
அப்போ மட்டுமில்லாமல் இப்போதும் இவருக்கு வயது மட்டும்தான் அதிகரித்து இருக்கிறதே தவிர அவருடைய அழகும் நடிப்பும் எப்போதும் பலருக்கும் பேவரைட் தான். முன்னணி நடிகர்கள் பலரையும் ஓரம் கட்டும் அளவிற்கு பிரபலமாக இருந்தவர்தான் அரவிந்தசாமி. அந்த அளவிற்கு இருந்த நிலையில்தான் அவருக்கு திடீரென்று ஏற்பட்ட விபத்தால் சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
அதுபோல கடந்த 1994 ஆம் ஆண்டு காயத்ரி என்ற பெண்ணை அரவிந்தசாமி திருமணம் செய்திருந்தார். பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2014 ஆம் ஆண்டு அவரை பிரிந்து விட்டார். ஆனாலும் தன்னுடைய குழந்தைகளை தன்னுடைய பாதுகாப்பில் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அரவிந்த்சாமி பற்றி அவருடைய தந்தை பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அதில் என்னுடைய மகன்தான் அரவிந்தசாமி என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அவர் பிறந்ததுமே என்னுடைய அக்காவிற்கு குழந்தை இல்லாததால் அவரை தத்து கொடுத்து விட்டேன். அவ்வளவுதான். அதற்குப் பிறகு அவர் அதிகமாக என்னிடம் ஒட்டிக் கொண்டது கிடையாது. பங்க்ஷன் போன்ற முக்கியமான நேரங்களில் வருவார். ஏதாவது தேவை என்றால் பேசிக்கொண்டு கிளம்பி விடுவார்.
அவரை அளவுக்கு அதிகமான பாசத்தோடு என்னுடைய சகோதரி வளர்த்து விட்டதால் அவர்களை தான் அம்மா அப்பா என்று மனதில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அப்படியே வாழ்ந்து வருகிறார் அவ்வளவுதான். ஆனாலும் எப்போதும் என்னுடைய மகன் அரவிந்தசாமி தான் இதில் எந்த மாற்றமும் இல்லை என்று அந்த பேட்டியில் டெல்லி குமார் பேசியிருக்கிறார்.
-
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications