"புல்லியிங் கேங்" பூர்ணிமா எவிக்ட் ஆவாருன்னு நெனச்சோம்..ஆனால் ஐஷு ஏன்? பின்னணியில் பரபரப்பு தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பூர்ணிமா வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ஐஷு வெளியேற்றப்பட்டது ஏன் என்பதற்கான காரணம் தெரிந்துவிட்டது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக பிரதீப் ஆன்டனி வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு அவர் நாமினேஷனில் இருந்தாலும் அவரை மக்கள் எலிமினேட் செய்யாமல் ஓட்டு போட்டபடி இருந்தனர்.

Why did Aishu evicted instead of Poornima in Biggboss season 7?

இந்த நிலையில் பிரதீப் ஆன்டனி மீது மாயா, ஜோவிகா, ஐஷு, பூர்ணிமா ஆகியோர் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். கதவை திறந்தபடியே சிறுநீர் கழிப்பது , திடீரென இரவு நேரத்தில் எழுந்து உட்கார்ந்து கொண்டு வைத்த கண் வாங்காமல் யாரையாவது பார்த்துக் கொண்டிருப்பது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

இதையடுத்து பெண்களுக்கு பாதுகாப்பு எல்லா இடங்களிலும் உறுதி செய்ய வேண்டும் என பேசிய கமல் சேனல் நிர்வாகத்தினருடன் கலந்து பேசி பிரதீப் ஆன்டனிக்கு ரெட் கார்டு கொடுப்பதாக தெரிவித்தார். இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். பிரதீப் ஆன்டனியிடம் விளக்கமே கேட்காமல் இப்படி செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவே இவர்கள் கூறுகிறார்கள்.

நிக்ஸன் ஐஷுவிடம் எல்லை மீறி நடக்கிறார். மாயா, பூர்ணிமா ஆகியோர் 18 பிளஸ் ஜோக்குகளை பேசுகிறார்கள். மாயா தனது உள்ளாடையை எடுத்து ஆண் போட்டியாளரிடம் காட்டி மாஸ்க் போல் அணிந்து கொண்டார். இப்படியெல்லாம் சம்பவங்கள் நடக்க பிரதீப் ஆன்டனியை வெளியேற்றியது ஏன் என கேள்வி எழுப்பினர்.

அது போல் சனிக்கிழமை அன்று விசித்ரா, கமலிடம் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது ஏன் என கேட்டிருந்தார். மேலும் புல்லியிங் கேங்கை பார்த்தால் எங்களுக்க பயமாக இருக்கிறது என கூறிய நிலையில் அந்த கேங்கிலிருந்து பூர்ணிமா வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக ஐஷு எவிக்ட் செய்யப்பட்டுவிட்டார்.

ஐஷு நடன கலைஞர் அமீருக்கு தங்கை போன்றவர். ஐஷு நடந்து கொள்வதை பார்த்து அமீரே தனது தங்கைக்கு எதிராக ட்விட் போட்டிருந்தார். அது போல் நிக்ஷனுடன் ஐஷு பழகுவதை பார்த்த அவரது பெற்றோர் கண்டித்தபடியே பேட்டி கொடுத்து வந்தனர். இந்த நிலையில்தான் ஐஷு ஏன் எவிக்ட் செய்யப்பட்டார் என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட போது ஐஷுவின் குடும்பத்தினர் அவரது விளையாட்டை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனராம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல நிக்ஸனுடன் ஏற்பட்ட பழக்கம் அவரு்கு வெளியே கெட்ட பெயரை பெற்றுக் கொடுத்துவிட்டதாக பெற்றோர் கவலை தெரிவித்தனர். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவை தொடர்பு கொண்ட அவர்கள், ஐஷு விளையாடினது போதும், ரூ 50 லட்சம் பணம் , புகழை விட எங்களது மகளுக்கு பெயர்தான் முக்கியம் என கூறி அவரை வெளியேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டனராம். இதனால்தான் ஐஷு எவிக்ட் செய்யப்பட்டார் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+