மச்சான் கிட்ட போயிருக்கலாமே? காற்றில் கலந்த மனோஜ்.. அந்த புண்ணியம்கூட அவரை காப்பாத்தலயே: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மனோஜூக்கு எதனால் திடீரென வலி ஏற்பட்டது என்று தெரியவில்லை. சுகர் அதிகமாகிவிட்டதா? கல்லீரல் பாதிப்பு எப்படி இருந்தது? என்பதெல்லாம் மருத்துவ ரிப்போர்ட் வந்தால்தான் தெரியும். எனினும் தாங்க முடியாத அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார்.. பாரதிராஜாவுக்கு நேர்ந்துள்ள சோகம் வேறு யாருக்குமே வரக்கூடாது" என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வேதனை தெரிவித்துள்ளார்.

Prime9 என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், "ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்து 20 வருடம் வாழ்பவர்களையெல்லாம் எனக்கு தெரியும்.. ஆனால், 10 நாளில் மறுபடியும் வலிக்குது என்று நெஞ்சை பிடித்தபடி இறந்தது வேதனையாக உள்ளது.

Television Manoj bharathiraja Malaysia

ஹீரோவாக முன்னுக்கு வரமுடியாவிட்டாலும், தன்னுடைய திறமைகளை எங்கெல்லாம் பயன்படுத்த வேண்டுமோ அங்கெல்லாம் மனோஜ் பயன்படுத்தியிருக்கிறார்.. ஆனால், "லைம்லைட்" மனோஜ் மீது போதுமான அளவுக்கு விழவில்லை.

மலேசியாவில் டாக்டர் மச்சான்

ஏற்கனவே ரஜினிகாந்த் போன்றோரெல்லாம் மலேசியா சென்றுதான், ஆபரேஷன் செய்து கொண்டார்கள்.. மனோஜ்ஜின் தங்கை கணவரும் மலேசியாவில்தான் டாக்டராக உள்ளார்.. ஆனால், ஏன் மனோஜ் மலேசியா செல்லாமல், சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்? இதற்கு என்ன காரணம் என்பதெல்லாம் சந்தேகமாக உள்ளது.

அதேபோல, மனோஜ் மனதிற்குள் சில வருத்தங்கள் இருந்ததாகவும் தகவல்கள் பல பரவுகின்றன. அதாவது, அப்பா வருமானத்தில் வாழாமல், தன்னுடைய 100 சதவீதம் சொந்த உழைப்பில், குடும்பத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணம் மனோஜ்ஜூக்கு இருந்ததாம்.

அதேபோல, அப்பா - மகன் இருவருக்கும் மனஸ்தாபம் இருந்து வந்தது என்கிறார்கள்.. மனோஜ் சொந்தமாக படம் எடுக்க வேண்டுமானால், அதற்கு சில கோடிகள் தேவை.. இது மனோஜூக்கு கிடைத்ததா தெரியவில்லை.. "உனக்கு மகனாக பிறந்ததுதான் பிரச்சனையே" என்றுகூட விரக்தியில் அப்பாவை சொன்னாராம். இப்படியெல்லாம் பல விஷயங்கள் பரவி வருகின்றன.

ரஜினியிடம் ஆலோசனை?

இதற்கு நடுவில்தான் மனோஜூக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.. சிகிச்சை குறித்து ரஜினியிடமும் ஆலோசனை கேட்டதற்கு மலேசியா செல்லும்படிதான் அவரும் சொல்லி உள்ளார்.. ஆனால், செல்லவில்லை? பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக மனோஜ் விலகியிருந்தாரா? அதுவும் தெரியவில்லை.

மலேசியாவுக்கு சமீபத்தில் தன்னுடைய மகளிடம் பாரதிராஜா சென்றிருந்தார்.. டாக்டர் மருமகன் உபசரிப்பில், சற்று தெம்பாகி திரும்பி வந்திருந்தார்.. ஆனால், மச்சானிடம் சிகிச்சை பெற மனோஜ் ஏன் செல்லவில்லை? என தெரியவில்லை.

வலி உயிர் போகுதே

நேற்று மாலை வீட்டுக்கு வந்துள்ளார் மனோஜ்.. இயல்பாகவே இருந்திருக்கிறார்.. வலி உயிர் போகுதே என்று தாங்க முடியாமல் கத்தியிருக்கிறார்.. சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு கொண்டு போவதற்குள் உயிர் பிரிந்துவிட்டது. ஆனால், எதனால் வலி ஏற்பட்டது என்று தெரியவில்லை. சுகர் அதிகமாகிவிட்டதா? கல்லீரல் பாதிப்பு எப்படி இருந்தது? என்பதெல்லாம் மருத்துவ ரிப்போர்ட் வந்தால்தான் தெரியும்.

மனோஜ் குறித்து அவர் வீட்டு வேலையாட்கள் புகழ்ந்து பேசுகிறார்கள், "ஐயா இப்போதெல்லாம் சரியா சாப்பிடறது இல்லை.. எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு எல்லாம் வருவார்.. கொரோன நேரத்தில்கூட வேலை இல்லாதபோதும் எங்களுக்கு சம்பளம் தந்தார். அன்பாக பேசுவார் " என்கிறார்கள்.. வேலைக்காரர்களுக்கு செய்த புண்ணியம்கூட மனோஜை காப்பாற்றவில்லையே? பாரதிராஜாவுக்கு நேர்ந்துள்ள சோகம் வேறு யாருக்குமே வரக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+