நடிகர் மொட்டை ராஜேந்திரனின் சோகமான மறுபக்கம்.. சூழ்ச்சியால் “தலைமுடி”யை இழந்த பயங்கரம்
சென்னை: நான் கடவுள் படத்தில் குரூரமான வில்லனாக மிரட்டிய நான் கடவுள் ராஜேந்திரனை யாரும் எளிதில் மறந்து விட முடியாது.
தற்பொழுது குணசித்திரம் மற்றும் காமெடி நடிகராகவும் சிறப்பாக பல படங்களில் நடித்து வந்தாலும் நான் கடவுள் ராஜேந்திரன் என்ற பெயரில் முன் அடைமொழியாக வரும் நான் கடவுள் படத்தில் அவரது நடிப்பை பார்த்து மிரளாதவர்கள் இருக்க முடியாது.

அப்படி செம டெரர் பீசாக அனைவருக்கும் தெரிந்திருக்கும் ராஜேந்திரனின் பின்னால் இருக்கும் சோக கதையை குறித்து பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் பகிர்ந்துள்ள காணொளி பார்ப்பவர்களுக்கு இவருக்கா இப்படி ஒரு நிலைமை என்று சோக பட வைத்திருக்கிறது.
சினிமா துறையிலேயே மிகவும் ரிஸ்க் டிபார்ட்மென்டான ஸ்டண்ட் துறையில் பணியாற்றியவர் ராஜேந்திரன். இவராக விருப்பப்பட்டு அந்தத் துறையை தேர்ந்தெடுக்கவில்லை. இவரது தாத்தா,அப்பா போன்றோர் சண்டை கலைஞர்களாக இருந்ததால் அவ்வப்போது படப்பிடிப்புகளை காணும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது.

அப்பொழுது படப்பிடிப்புகளில் கதாநாயகர்களுக்கும்,முன்னாடி நடிகர்களுக்கும் தரப்படும் மரியாதையையும் மதிப்பையும் பார்த்து ஆரம்பத்தில் தானும் ஒரு கதாநாயகனாக வேண்டும் என்று தான் முயற்சி செய்திருக்கிறார். அதற்காக தனது உடலை ஆஜானபாகுவாக தயார் செய்து கொண்டு பல தயாரிப்பாளர்களிடம் பல இயக்குனர்களிடமும் வாய்ப்பு தேடி ஏறி இறங்கி இருக்கிறார்.
சிவப்பு தோல் தான் சினிமாவில் நடிப்பதற்கான முதல் தகுதி என கருதப்பட்டு வந்த அந்த காலகட்டத்தில் இவர் வாய்ப்பு கேட்டு சென்ற பலரும் இவரது உருவத்தை வைத்து இதெல்லாம் ஒரு மூஞ்சா..?உன் முகத்தை நீ கண்ணாடிகள் பார்த்ததில்லையா..!? என்று இவரது மனம் புண்படும்படி நேரடியாகவே கேலி செய்துள்ளனர்.இதனால் மனம் நொந்து போன ராஜேந்திரன் தனது தாத்தா தந்தை வழியை பின்பற்றி ஸ்டண்ட் நடிகராக முடிவு செய்துள்ளார். ஸ்டண்ட் நடிகராக பல மொழிகளில் பல படங்களில் தனது திறமையை காட்ட ஆரம்பித்துள்ளார்.

ராஜேந்திரன் ஆள் பார்ப்பதற்கு மிகவும் கரடுமுரடான ஆளாக தெரிந்தாலும், நிஜத்தில் வெகுளித்தனமான குழந்தை மனதுக்காரர் ஆவார். அதனாலேயே பிற ஸ்டண்ட் நடிகர்கள் செய்யத் தயங்கும் ஆபத்தான ஸ்டண்ட் சீன்களை பல முறை இவரை ஏமாற்றி நடிக்க வைத்த கதைகள் உண்டு. அப்படித்தான் மலையாள பட சூட்டிங் ஒன்றில் ஆற்றின் குறிப்பிட்ட பகுதிகள் கெமிக்கல் கலந்து தண்ணீர் விஷமாகி இருப்பது தெரிந்திருந்தும் இருமுறை அந்த இடத்தில் இவரை குதிக்க வைத்து சூட்டிங் எடுத்துள்ளனர்.
அந்த சூட் முடிந்த சிறிது நேரத்திலேயே ராஜேந்திரனின் முடி, மீசை, புருவம் என அனைத்தும் உதிர ஆரம்பித்துள்ளது.கதாநாயகன் கனவோடு தான் வளர்க்க ஆரம்பித்த முடியும் மீசையும் ஆற்றில் கலந்த விஷத்தால் பாழாய் போனதை அறிந்து பயத்திலும் விரக்தியிலும் கதறி அழுதுள்ளார் ராஜேந்திரன்.இந்த சம்பவத்தால் பெரியதாக மனதளவில் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் மீண்டும் உருவ கேலிக்கு ஆளாகியுள்ளார்.
இதனால் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே பல மாதங்கள் முடங்கி இருந்திருக்கிறார். பின்பு குடும்ப சூழ்நிலை காரணமாக திரும்பவும் ஸ்டன்ட் கலைஞராக களம் இறங்கிய ராஜேந்திரன் தன்னுடைய 58 வது வயதில் இயக்குனர் பாலாவின் நான் கடவுள் படத்தில் வில்லனாக மொட்ட தல, முடி இல்லா முகம், கரகர குரல் போன்ற தன்னுடைய மைனஸையே ப்ளஸ் ஆக மாற்றி சிறந்த வில்லன் நடிகராக தன்னை நிரூபித்தார்.
தற்பொழுது தனது கட்ட குரலையும், கெட்டப்பையும் தனக்கான டிரேடு மார்க்காக மாற்றி தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். முன்னணி கதாநாயகர்களே தங்களுடைய இயக்குனர்களிடம் நான் கடவுள் ராஜேந்திரனையும் படத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறும் அளவிற்கு முன்னேறியுள்ள நான் கடவுள் ராஜேந்திரனுடைய கதை சோகங்கள் கடந்த சாதனைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.












Click it and Unblock the Notifications