15 நாட்கள் நடப்பது இதுதான்..விஜே அர்ச்சனா கணவரோடு விவாகரத்து செய்ய எடுத்த முடிவு!? அவரே கூறிய காரணம்
:வி ஜே அர்ச்சனா தன்னுடைய கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்வதற்காக முடிவு எடுத்ததாக கூறியிருக்கிறார்.
சென்னை: வி ஜே அர்ச்சனா திடீரென அவருடைய கணவரோடு ஒரு மாதத்திற்கு முன்பு பிரிவதற்கு முடிவு எடுத்ததாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
தன்னுடைய மகள் கேட்ட ஒரே வார்த்தையால்தான் தன்னுடைய முடிவு மாறி இருக்கிறது என்றும் அர்ச்சனா கூறி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் தற்போது 15 நாட்களாக தன்னுடைய வீட்டில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்று பல ரகசியங்களையும் கூறி இருக்கிறார்.

இப்போ சினிமாவிலும் அறிமுகம்
தொகுப்பாளர்களில் குறிப்பிட்ட ஒரு சிலர் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். தொகுப்பாளர்கள் என்று சொன்னதுமே அவர்களுடைய பெயர்கள்தான் நினைவிற்கு வரும் அந்த வகையில் பலருக்கும் டக்கென்று நினைவிற்கு வரும் ஒரு தொகுப்பாளராக வி ஜே அர்ச்சனா இருந்து வருகிறார். இவர் ஜீ தமிழ், விஜய் டிவி என பல சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். தற்போது ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய வேலையில் பிஸியாக இருக்கும் இவர் தற்போது தன்னுடைய மகளோடும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இருபதாவது திருமண நாள்
வி ஜே அர்ச்சனாவின் கணவர் ஒரு ராணுவ வீரர். சாரா என்கிற ஒரு மகள் மட்டும் தான் அம்மா மற்றும் தங்கையோடு சேர்ந்துதான் கூட்டு குடும்பமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய திருமண நாளை கணவரோடு மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்கிறார். அப்போது தன்னுடைய கணவரை குறித்து விஜே அர்ச்சனா வெளியிட்ட பதிவு ரசிகர்களின் மத்தியில் வியப்பை கொடுத்து இருக்கிறது. அதில், நாங்கள் சந்தித்து 20 வருடங்கள் ஆகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நாங்கள் ஒரு எளிய பிறந்தநாள் ஆசைக்காகப் பேசினோம், நாங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ்வோம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை !!

சின்ன சண்டைகள்
சின்னச் சின்ன சண்டைகள் முதல் "இனி என்னால் உன்னுடன் வாழ முடியாது" என்ற வரிகள் வரை, எங்கள் வசதியான வீட்டில் ஒரு பெரிய கப் காபி குடிப்பது, டிவி ரிமோட் மற்றும் படுக்கையில் இடவசதிக்காகப் போராடுவது, ஒருவருக்கொருவர் பர்சை எட்டிப் பார்ப்பது வரை. மற்றவர்களிடமிருந்து மட்டுமே செலவழித்து, இரண்டு தசாப்தங்களை ஒன்றாகக் கழித்தோம்.

விலையுயர்ந்த பொக்கிஷம்
நான் சொல்ல வேண்டியது என்னவென்றால் - நான் எங்கும் செல்லமாட்டேன், அதனால் நீங்களும் நானும் உங்களை ஒருபோதும் விடுவதில்லையா!! நாங்கள் உன்னை டன் கணக்காக நேசிக்கிறோம், நீங்கள் எங்களின் மிகவும் விலையுயர்ந்த (எரிச்சல் தரும்) பொக்கிஷம்!உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான 47வது காதல் மற்றும் இன்னும் பல வர வாழ்த்துக்கள்!! என்று கூறியிருந்தார்.

பிரிவதற்காக எடுத்த முடிவு
இந்த நிலையில் சமீபத்தில் விஜே அர்ச்சனா ஒரு பேட்டி ஒன்றில் தன்னுடைய வீட்டில் தற்போது நடக்கும் சூழ்நிலையைப் பற்றி உருக்கமாக கூறி இருக்கிறார். விஜே அர்ச்சனாவின் கணவர் வினித் தற்போது இந்திய கடற்படையில் பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அர்ச்சனா மற்றும் வினித் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்து இருந்ததாக அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். இருவரும் வெவ்வேறு துறையில் இருப்பதால் பிரச்சனை வந்தது என்றும் ஒரு மாதத்திற்கு முன்பு பிரிய முடிவு எடுத்தோம். ஆனால் 15 நாட்கள் முன்பு கணவர் வினோத்துக்கு திடீரென விசாக்கப்பட்டினத்திற்கு ட்ரான்ஸ்பர் போட்டு விட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.

மகளால் மாறிய முடிவு
பிறகு என் மகள் சாரா எங்கள் இருவரிடமும் பேசினார். ஒருவரை விட்டு இன்னொருவர் வாழ முடியுமா? என்று யோசித்துக் கொள்ளுங்கள் என்று கூறினாள். 20 வருடங்களுக்கு முன்பு எப்படி சந்தித்து காதலித்தோமோ அதுபோலத்தான் கடந்த 15 நாட்களாக இருந்து வருகிறோம் என்று அர்ச்சனா கூறி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் விஜே அர்ச்சனாவின் விவாகரத்து செய்தி அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட தன்னுடைய வீட்டில் வராஹி அம்மனுக்காக பிரமாண்டமாக பூஜை செய்து அதை குறித்தும் சில நெகிழ்ச்சியான தகவல்களையும் கூறி இருந்தார்.
-
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications