Aranmanai Kili Serial: உங்களுக்கே பயம் வருதுல்ல... எதுக்கு அந்த சீன்ஸ் வைக்கறீங்க?
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் அர்ஜுனுக்கு தெய்வ சாபமாம். அவன் உயிர் போவது உறுதியாம். சித்தர் அடிச்சு சொல்லிடறார்.
புருஷன் உயிரை எப்பாடு பட்டாவது மீட்பேன் என்று சொல்லி சித்தரிடம் பரிகாரம் கேட்டு வாதாடுகிறாள் ஜானு. உன் புருஷனுக்கு கிடைத்த சாபம் கிடைத்ததுதான்... அதை மாத்த முடியாது என்று சொல்லிவிடுகிறார் சித்தர்.
ஜானுவுக்கு புருஷன் செத்துடற மாதிரி கெட்ட கனவு வருது. இதை அடுத்துதான் மேற்கண்ட சித்தர் சொன்னது எல்லாம். இந்த சீரியலை ஒளிபரப்பிவிட்டு, இது வெறும் கற்பனை கதைதான். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல என்றெல்லாம் பொறுப்பு துறப்பு அடிக்கடி ஸ்க்ரோலிங்க்ல விடறாங்க.

இருக்குல்ல இந்த பயம்
ஜானு நினைக்கும்போது சித்தரை பார்த்து விடுகிறாள். மற்றவர்கள் போனால்தான் காத்து கிடக்க நேரிடுது.கணவனின் கால் நடக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்து, நடந்தால் என் உயிரை தருகிறேன் என்று சாமிக்கு தனது உயிரை காணிக்காகையாக வைக்கிறாள். அப்படி வேண்டுதல் வைத்துவிட்டு மறந்தும் விடுகிறாள். புருஷன் சும்மா ஒரு அடி மட்டும்தான் எடுத்து வைக்கிறான். அதற்குள் ஜானுவின் உயிரை சித்தர் வந்து கேட்கிறார்.

ஜானு உயிருக்கு பதில்
இதை தெரிஞ்சுக்கிட்ட அர்ஜுன் அதே சாமியிடம் வந்து அவன் ஒரு வேண்டுதல் வைக்கிறான். ஜானுவின் உயிருக்கு பதில் தனது உயிரை காணிக்கை என்று சொல்கிறான். இதை பிடிச்சுக்கிட்டு கதையை மாத்தி மாத்தி கொண்டு போறாங்க. இப்போ அர்ஜுனுக்கு சாமியின் சாபம் விழுந்துவிட்டதாம். அவன் உயிர் போகப் போவது உறுதியாம்.

அர்ஜுன் நடக்கலை
வேண்டுதல் வச்சு நிறைவேத்தியும் கூட அர்ஜுன் இன்னும் நடக்கலை. அவன் நடக்காமல் இருந்தால்தான் கதை எனும்போது எதற்காக இந்த சித்தர் வாக்கு, வேண்டுதல், பரிகாரம் இதெல்லாம் என்று தெரியவில்லை. இப்போது அர்ஜுன் உயிர் நிச்சயம் போய்விடும், அவன் மேல் தெய்வ சாபம் இருக்குன்னு சொல்றார் சித்தர்.

மீட்பேன் புருஷன் உயிரை
சாமிக்கு எதையாவது செய்து, எப்படியும் புருஷன் உயிரை மீட்பேன் என்று சங்கல்பம் எடுக்கிறாள் ஜானு. அதன் படி சித்தரிடம் சென்று என் புருஷன் உயிரை மீட்பேன் சாமி. அதுக்கு நீங்க வழிமுறை சொல்லுங்கன்னு மன்றாடுகிறாள். சித்தர் ஒப்புதல் தரவில்லை. இருந்தும் அவளுக்கு மீண்டும் கனவு வந்து அதில் அர்ஜுன் உயிருக்கு போராடுவது போல் வருகிறது.மீண்டும் சித்தரிடம் போகிறாள் ஜானு.

எடுப்பானேன் பயப்படுவானேன்
இப்படி உங்க இஷ்டத்துக்கு கற்பனை செய்து கதையை எழுதிவிட்டு, அதை ஒளிபரப்பும்போது எல்லா நேரத்திலும் ஸ்க்ரோலிங் பொறுப்பு துறப்பு போடுகிறீர்கள். எதற்கு இப்படிப்பட்ட காட்சிகளை எடுப்பானேன், பிறகு பயம் கொள்வானேன்? அதற்காக கதை முழுக்க இப்படியேவா? முடியலைங்க... அந்த நேரத்தை இப்படியா நாங்க செலவிடனும்? இன்னும் இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழக் கூட ஆரம்பிக்கலை.. ஜானு அதற்குள் இவ்வளவு தியாகமா?
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications