ஜாக்குலின் ஓடிட்டாரு.. "எங்கும் பிரியங்கா மயம்".. எல்லாம் பிரதீப் தந்த தைரியம்.. ஓபனா சொன்ன பிரபலம்
சென்னை: மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து விலகியதிலிருந்தே விஜய் டிவிக்குள் பரபரப்பு சூழ்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து இணையவாசிகளும் பிரியங்கா மீதான குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்கள். அந்தவகையில், மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியனும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை, அதிலிருந்து விலகுவதாக அறிவித்து, இதற்கான சில காரணங்களையும் வெளிப்படுத்தியிருந்தார்.

மணிமேகலை: நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவரின் ஆதிக்கமே இதற்கெல்லாம் காரணம் என்று மணிமேகலை மறைமுகமாக சொல்லியிருந்த நிலையில், அவர் குறிப்பிடுவது பிரியங்காவைதான் என்று இணையவாசிகள் பதிவிட்டும், கருத்து தெரிவித்தும் வருகிறார்கள்.
அந்தவகையில், பிரபலங்களும், மூத்த பத்திரிகையாளர்களும் கருத்து சொல்லி வருகிறார்கள். இதில், AramNaadu யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில் விஜய் டிவி நிர்வாகத்தை கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:
சேனல் ஹெட்: "நிறைய புகார்கள் பிரியங்காவை பற்றி வந்து கொண்டேயிருக்கின்றன.. அதாவது, சேனல் ஹெட் பிரதீப், பிரியங்கா இருவருமே நெருக்கமானவர்கள்.. அதனால்தான், பிரியங்காவை யாருமே விஜய் டிவியில் தட்டிக் கேட்பதில்லை.. பிரியங்கா கணவரை உதாசீனப்படுத்துகிறார்.. நிறைய புகழ், நிறைய பணம் இருப்பதால், மதிப்பதில்லை.. அதனால்தான், கணவரையே டைவர்ஸ் பண்ணிட்டாங்க..
பிரியங்காவால் சேனலில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம்.. அனிதா சம்பத், பாவனா, டிடி, ஃபரினா, ஜாக்குலின் பட்டியல் நீளுது. எந்த ஷோ நடந்தாலும், அதை தன்வசப்படுத்திவிடுகிறார்.. அதனால்தான், மணிமேகலை அறிக்கைக்கு, "உனக்கு துணிச்சல் அதிகம், வீர தமிழச்சி".. என்றெல்லாம் பாராட்ட ஆரம்பிச்சிட்டாங்க..
மணிமேகலை குக் வித் கோமாளியில் இருக்கும்போது, பிரியங்கா கெஸ்ட்டாக உள்ளே வர்றாங்க.. ஆனால், கடைசியில் கெஸ்ட் ஆங்கர் ஆகிட்டாங்க.. ஆங்கர் கெஸ்ட் ஆகிட்டாங்க..
கண்டிக்கவில்லை: பிரியங்காவைகூட, பெரியவர் செப் தாமு பட்டும் படாமல்தான் கண்டிக்கிறார்.. புகழ் சொல்வதும்சரி, செப் தாமு சொல்வதும் சரி, பிரியங்காவின் டாமினேஷனை பொறுக்க முடியாமல் சொல்லும் வார்த்தைகள்தான்..
இர்பான் என்பவர், அந்த நிகழ்ச்சியிலுள்ள ஆண்களை எல்லாம் "போயா, வாயா, வாடா போடா" என்று பேசுகிறார்கள்.. ஆண்களுக்கெல்லாம் இர்பான்தான் தலைமை..
ஆங்கர்கள்: அதேபோல, பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பிரியங்காதான் தலைமை.. இந்த தைரியம் பிரதீப் கிட்ட இருந்துதான் வருது.. ஆல் இன் ஆல் பிரியங்கா மயமாகிவிட்டது.. பேசாமல் விஜய் டிவியை பேர் எடுத்துட்டு, பிரியங்கா டிவின்னு வெச்சிடலாம்.. ஏன் நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிடல? அப்படி தலையிட்டிருந்தால் இத்தனை ஆங்கர்கள் வெளியே போயிருக்க மாட்டார்களே?
10 வருடம் பணியாற்றியவர்களும் வெளியேறுவது ஏன்? நிர்வாகம் இதை சரி பண்ணணுமா இல்லையா? ஏன் காதில் வாங்கல? அதிக நேரத்தை விஜய் டிவியில்தான் பிரியங்கா செலவிடுறாங்க.. வீட்டுக்கு கூட போறதில்லை..
ஃபர்பார்மன்ஸ் செய்றவங்களை ஓரங்கட்டுவது பிரியங்காதான். இதையெல்லாம் பிரதீப் கட்டுப்படுத்துவதேயில்லை.. ஒரு நிகழ்ச்சியை 60 சதவீதம் சிறப்பாக கொண்டுவர உழைப்பவர்கள் மத்தியில், பிரியங்கா போன்றோர் உள்ளே வருவதை பிரதீப் ஏன் அனுமதிக்கிறார்?
தூங்கும் நிர்வாகம்: எப்போதுமே ஒரு நிர்வாகம், உழைப்பவர்களை தட்டிக்கொடுத்து, வேலை வாங்க வேண்டுமே தவிர, எல்லாமே பிரியங்கா மயம் என்றால் எப்படி? அதுக்குதான் எல்லாரும் சன் பக்கம் ஓடறாங்க..
இவ்வளவு குறைபாடுகளை வைத்து கொண்டு நிர்வாகம் தூங்குகிறது. இப்படியே தூங்கிட்டு இருந்தால், விஜய் டிவியை இழுத்து மூட வேண்டியதுதான்.. ஏற்கனவே பல டிவிக்காரங்க ஓடிட்டாங்க.. நிர்வாக சீர்கேடுகளை எப்போதுமே மெருகேற்ற கூடாது... உடனடியாக சரி செய்ய வேண்டும்" என்றார் பாண்டியன்.
இதே AramNaadu யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் உமாபதி அளித்த பேட்டியில், "பிரியங்கா ஹமாரே தேஷ் பாண்டே-ன்னு வந்தாச்சு.. இங்கே வந்து நம்ம பசங்களை டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சாட்டங்க..
எப்பவுமே ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கும்.. உச்சிக்கு போனாலும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் வரும். அப்படி அந்த சேனலுக்கும் இப்போது வந்துருச்சு.. இந்தளவு பிரபலமான விஜய் டிவி ஒரு பெண்ணால நாசமா போயிடுமோன்னு நிலை இப்போ வந்துருக்கு. இப்போது தேஷ் பாண்டேன்ற பூனைக்கு மணிமேகலை என்ற பொண்ணு போய் மணியைக் கட்டிவிட்டுருச்சு" என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தமிழா தமிழா பாண்டியன் சொல்லும்போது, சின்னத்திரை நடிகைகள் பற்றி எஸ்வி சேகர் அன்று சொல்லியிருந்தது நினைவிருக்கலாம்.. அதனால், கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியக்கூடாது.. விஜய் டிவியில் எல்லார் மீதும் விமர்சனம் உள்ளது.. ஹேமா கமிட்டி அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கும் நிலையில், இனி விஜய் டிவிக்குள்ளேயே ஹேமா கமிட்டி போகப்போகுது. பிரியங்கா, பிரதீப்பை மட்டுமே அனைவருமே புகார் சொல்கிறார்கள்.. ஒருத்தர், 2 பேர் என்றால் பரவாயில்லை.. விஜய் டிவியிலிருந்து வெளியேறியவர்கள் எல்லாருமே ஒரே மாதிரியான புகார்கள் சொல்வதை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications