தங்கலான் படத்தில் நான் நடிக்காதது ஏன்? கபாலி பட நடிகர் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்
ரஜினி 25 கலை நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பல கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். சுமார் 4,000 பேரில், தமிழகத்தில் சிறந்த நடனக்காரராக விஸ்வந்த் தேர்வாகி, லதா ரஜினிகாந்த், கையால் பரிசை பெற்றார். அதுபோக மற்றொரு பரிசாக சிங்கப்பூர் சென்று வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார் லதா ரஜினிகாந்த்.
மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு விருதை வழங்கச் சொல்லியிருந்தார், அந்த விருதின் பெயர் "சூப்பர் ஸ்டார் ஹீரோ ரஜினி அவார்ட்." இந்த விருதையும் அதே மேடையில் விஸ்வந்த் பெற்றுள்ளார். ஒன் இந்தியா தமிழுக்கு அவர் அளித்த பேட்டியானது கேள்வி, பதில் வடிவில் இதோ!

கேள்வி: நீங்கள் ஒரு நடனக் கலைஞராக இருந்து நடிகராக மாறியுள்ளீர்கள். ஆனால் இப்போது திரைக்கு வரும் புதிய தலைமுறைகள் இரண்டு ஷார்ட் ஃபிலிம் எடுத்து விட்டு, திரைத் துறையில் சாதிக்க வேண்டும் என நினைக்கின்றனர். அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? உங்கள் திரை அனுபவத்தை வைத்து கூறுங்கள்.
விஷ்வந்த்: இப்போது வருகிற இளைய தலைமுறை எல்லா விஷயங்களையும் திறமையாக கற்றுக்கொண்டு தான் வருகிறார்கள். உலக சினிமாவை விரிவாகப் பார்க்கிறார்கள். எதை செய்தாலும் தனித்துவமாக செய்கிறார்கள். அதனால், பெரிதாக அவர்களுக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை.

எந்த ஒரு விஷயத்தையும் செய்யும்போது பிளானிங் ரொம்ப முக்கியம். எதை செய்யக்கூடாது என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு, அசிஸ்டென்ட் ஆக பணி புரிந்து, அனுபவமுள்ளவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு, உங்கள் இலக்கை ஒரே குறிக்கோளாகக் கொண்டு பயணித்தால் மட்டுமே வெற்றி பெறலாம். நான் என் முழு கவனத்தையும் ஒரே இலக்கில் செலுத்தியதால்தான், இப்போது உங்கள் முன் பேட்டி கொடுத்து கொண்டு இருக்கிறேன்
கேள்வி: இப்போது வரும் சில கருத்துக்களில், படங்கள் விமர்சகர்களால் தோல்வியடைகின்றன என கூறுகிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
விஷ்வந்த்: நல்ல படங்கள் வந்தால், எத்தனை எதிர்மறை விமர்சனங்களும் இருந்தாலும், அந்த படத்தின் வெற்றியை தடுக்க முடியாது.

கேள்வி: உங்கள் அடுத்த படங்கள் குறித்து கூறுங்கள். விஷ்வந்த நீலம் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் சாரோடு, Passion Studio தயாரிப்பில் அருள்நிதி சாரோடு, Nemichand Jhabak தயாரிப்பில் சசிக்குமார் சாரோடு, Mini Studios production தயாரிப்பில் ஆர்யா சாரோடு இவை எல்லாம் எனது தற்போதைய கரண்ட் ப்ரொஜெக்ட்ஸ்.
கேள்வி: ரஞ்சித் அவர்கள் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்துள்ளீர்கள். ஸ்கெட்ச் படத்தில் விக்ரமுடன் நடித்துள்ளீர்கள். அதனால், அனைவரும் உங்களை தங்கலான் படத்திலும் எதிர்பார்த்தனர். ஆனால் நீங்கள் இல்லை. அது எப்படி மிஸ் ஆனது?

விஷ்வந்த்: ரஞ்சித் சாருக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்க விரும்புகிறேன். தங்கலான் சிறந்த படத்திற்கான விருது கிடைத்து உள்ளது சென்னை பிலிம் பெஸ்டிவல் விழாவில். தங்கலான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எனது தோற்றத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமென கூறப்பட்டது. அப்போது, வேறு ஒரு ப்ராஜெக்ட் மேற்கொண்டு இருந்ததால், தங்கலான் பட வாய்ப்பை இழந்துவிட்டேன். எனினும், தற்போது ரஞ்சித் அண்ணாவின் நீலம் தயாரிப்பில் பணியாற்றி வருகிறேன்.
ரஞ்சித் அண்ணா எப்போது படம் எடுத்தாலும், என்னை அழைப்பார்கள். அவரின் அன்பு எப்போதும் குறையாது. அதேபோல், விக்ரம் சாரோடு ஸ்கெட்ச் படத்தில் 65 நாட்கள் வேலை செய்தேன். அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்.

கேள்வி: உங்கள் பெயரில் கபாலி என்ற பிராண்ட் உள்ளது. சூப்பர் ஸ்டாரோடு இரண்டு படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளீர்கள். அடுத்து கூலி, ஜெயிலர் 2 போன்ற படங்களில் உங்களை எதிர்பார்க்கலாமா?
விஷ்வந்த்: கபாலி படத்தில் 22 நாட்கள். அண்ணாத்த படத்தில் 48 நாட்கள் பணியாற்றினேன். இந்த இரண்டு படங்களுமே எனக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தன.
சூப்பர் ஸ்டாரோடு நடித்த வருடத்தில், எனக்கு வாழ்க்கையில் நல்ல நிகழ்வுகள் நடந்தன. அதனால், அவருடன் அடுத்ததாக எந்த நேரத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் எனக் காத்திருக்கிறேன்.

கேள்வி: அஜித் அவர்களோடு நடிக்கின்ற வாய்ப்பும், நீங்கள் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்கின்ற வாய்ப்பும் ஒரே நேரத்தில் வந்தால், நீங்கள் எதற்கு முதலில் ஓகே செல்வீர்கள்?
விஷ்வந்த்: அஜித் சாரோடு நடிக்க, உண்மையாகவே நான் எதிர்பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். அவர் கடின உழைப்பாளி, நல்ல மனிதர். அவருடன் பணியாற்ற, ஒவ்வொரு ரசிகரும் காத்துக் கொண்டு இருப்பார்கள். அந்த வரிசையில் நானும் ஒருவன். "வீரம்" படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப்போது வேறு ஒரு பட ஷூட்டிங் இருந்ததால், அதில் நடிக்க முடியாமல் போனது. இன்னும் இன்று வரை அந்த வாய்ப்பை இழந்ததை நினைத்து வருத்தப்படுகிறேன். பின்னர், சிவா சாரை பின்தொடர்ந்ததனால், அண்ணாத்த பட வாய்ப்பு கிடைத்தது.
எதிர்காலத்தில் அஜித் சாரோடு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக செய்வேன். நீங்கள் கூறியது போல், இரண்டு வாய்ப்புகளும் ஒரே நேரத்தில் வந்தால், தயாரிப்பாளர்களிடம் பேசுவேன். நான் அஜித் சாரோடு படம் செய்கிறேன்; அதற்குப் பிறகு நம்முடைய படம் செய்தால், அது டபுள் ப்ரமோஷன் மாதிரி இருக்கும். ஏனென்றால், தயாரிப்பாளரும் அஜித் சாரின் ரசிகராகவே இருப்பார். அதனால், "கண்டிப்பாக நீங்க பண்ணிட்டு வாங்க" என்று தான் கூறுவார். அஜித் சாருக்கு பத்மபூஷன் விருது அறிவித்து இருப்பதற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
- குரு கிருஷ்ணன்












Click it and Unblock the Notifications