நடிகர் அஜித்தை விடுங்க.. பிரபல தயாரிப்பாளரின் பிடிவாதத்தால் பார்த்திபனுக்கு பறிபோன பம்பர் வாய்ப்பு
சென்னை: தமிழ் சினிமாவில் எதிலும் வித்தியாசங்களை விரும்பும் இயக்குனர் மற்றும் நடிகர் ஆர். பார்த்திபன் இன்று தனது 65 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமாவில் பல புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் எப்பொழுதும் ஆர்வமாக இருப்பவர் பார்த்திபன். ரொமான்டிக் காமெடி கலந்த கதைகளில் கதாநாயகனாக ஸ்கோர் செய்வதில் ஸ்பெஷலிஸ்ட் ஆவார்.

அப்படிப்பட்ட பார்த்திபனுக்கு உலக அழகி ஐஸ்வர்யா ராய் உடன் ரொமான்ஸ் செய்யும் வாய்ப்பு கிடைத்தும் தயாரிப்பாளருடன் இருந்த சிறிய மனக்கசப்பால் நூலிழையில் தவறிப் போய் இருக்கிறது.
நடிகர் மற்றும் இயக்குனருமான கே.பாக்யராஜ் இடம் உதவியாளராக பணியாற்றி பின்பு புதிய பாதை படத்தை இயக்கி நடித்ததன் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பார்த்திபன். எதிலும் ஒரு வித்தியாசத்தை விரும்பும் பார்த்திபன் தமிழ் சினிமாவின் யாரும் யோசிக்காத சில புதிய முயற்சிகளை தன்னுடைய படங்களில் மேற்கொள்வார்.
அதனாலேயே சீனியர் ஆர்டிஸ்டாக இருந்தும் முன்னணி கதாநாயகர்களை தன்னுடைய படங்களில் நடிக்க வைக்க முடியவில்லை. 'ஒத்த செருப்பு' என்கின்ற படத்தின் மூலம் மோனோ ஆக்டிங் ஸ்டைலை முயற்சித்த பார்த்திபன், 'இரவின் நிழல்' படத்தின் மூலம் சிங்கிள் ஷாட் மூவி என்று ஒரே ஷாட்டில் படம் முழுவதையும் ஷூட் செய்யும் முயற்சியில் இறங்கி இந்திய அளவில் பல பிரபலங்களின் பாராட்டுகளையும் பல விருதுகளையும் பெற்றிருந்தார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யாராயுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தாலும் அதற்கு முன்பே 'கண்டுகொண்டேன்.. கண்டுகொண்டேன்' திரைப்படத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக நடிப்பதற்கு இயக்குனர் ராஜுவ் மேனனால் முதன் முதலில் கமிட் செய்யப்பட்டவர் ஆர். பார்த்திபன் தான்.
'நீ வருவாய் என' படத்தில் அஜித்- பார்த்திபன் காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆனதால் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்திலும் இவர்களை இணைந்து நடிக்க வைக்க நினைத்த இயக்குனர் ராஜீவ் மேனன் அஜித் மற்றும் பார்த்திபனிடம் கதை சொல்லி ஓகே செய்து விட்டார்.இயக்குனர் ராஜுவ்மேனன் கதாநாயகர்களாக அஜித் மற்றும் பார்த்திபனை முடிவு செய்த பின்பு தயாரிப்பாளர் கலைப்புலி தானுவிடம் சென்று பார்த்திபன் அவர்களிடம் நம்முடைய படத்தில் நடிப்பதற்கு சம்மதம் வாங்கி விட்டதாகவும், நீங்கள் சென்று அவருக்கு ஒரு ஐந்து லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட தயாரிப்பாளர் தானு இயக்குனர் ராஜீவ் மேனனிடம் பார்த்திபன் நடிப்பதென்றால் இத்தோடு நான் படத்தை விட்டு விலகி விடுகிறேன் வேறொரு நல்ல தயாரிப்பாளரை வைத்து தயாரித்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.அதற்குக் காரணம் இதற்கு முன்பு அவர் பார்த்திபனை வைத்து தயாரித்த தையல்காரன் படத்தின் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு தான் என கூறியுள்ளார்.
பின் நாட்களில் தானுவிற்கும் பார்த்திபனுக்கு இடையே இருந்த மனக்கசப்பு சரியாகி இறுதியாக வெளிவந்த இரவின் நிழல் படத்தை கூட தயாரிப்பாளர் தானு தான் டிஸ்ட்ரிபியூட் செய்திருந்தார். என்னதான் காலம் கடந்து மனக்கசப்பு நீங்கி சமாதானம் ஆகிவிட்டாலும் இனிமேல் ஐஸ்வர்யாராயுடன் ஜோடி சேரும் வாய்ப்பு பார்த்திபனுக்கு கிடைக்குமா..!!????
-
நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ -
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
ஆண் பாவம் பாண்டியனின் சோகமான மறுபக்கம்.. பிரபல நடிகரை வீழ்த்திய "பந்தய குதிரை".. நடந்தது என்ன -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications