அது நடந்து இருந்தால் நிலைமை மாறி இருக்கும்.. ராமராஜனோடு 7 பட வாய்ப்பு நழுவல்.. குமுறும் நடிகை ரேணுகா
சென்னை: முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை ரேணுகா தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் தனக்கு நடந்த தோல்விகள் குறித்து கூறியிருக்கிறார்.
பல கம்பெனிகளில் வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்த நேரத்தில் தனக்கு அடுத்தடுத்து ராமராஜன் உடன் ஏழு படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று ஏமாற்றத்தை ஃபீல் பண்ணி நடிகை ரேணுகா கூறி இருக்கிறார்.
கதாநாயகியாக முயற்சி செய்து தனக்கு கிடைத்த ஏற்ற இறக்கங்கள் குறித்து பல தகவல்களை ரேணுகா பேசியிருக்கிறார்.

ரேணுகாவின் குடும்பம்
வெள்ளி திரையில் கதாநாயகியாக கலக்கவேண்டிய தனக்கு தமிழ் திரை உலகில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு விட்டது என்று நடிகை ரேணுகா வருத்தத்தோடு பல தகவல்களை கூறி இருக்கிறார். ஆரம்பகால கட்டத்தில் இப்ப இருக்கிற மாதிரி எல்லாம் நிலைமை கிடையாதாம். அதுவும் நடிகை ரேணுகா ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்து இருக்கிறார். ரேணுகா குடும்பத்தின் மூத்த பெண்ணாக இருந்திருக்கிறார். இவருக்கு இரண்டு இளைய சகோதரர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் இவருடைய அப்பாவின் மறைவிற்குப் பிறகு சென்னைக்கு வேலை தேடி குடும்பத்தோடு வந்திருக்கின்றனர்.

முதல் திரைப்படம் வாய்ப்பு
அந்த நேரத்தில் தான் கோமஸ் சுவாமிநாதனின் குழுவில் நாடக கலைஞராக வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அதற்கு பிறகு திரைப்படங்களில் வாய்ப்புக்காக பல கம்பெனிகளில் ஏறி இறங்கி கொண்டு இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் 1989 ஆம் ஆண்டு டி ராஜேந்திரன் இயக்கிய சம்சார சங்கீதம் என்ற திரைப்படத்தின் மூலமாக இவர் திரையுலகில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அந்த நேரத்தில் நடிகர் ராமராஜனுடன் இவர் 7 படங்களில் நடிக்க முடியாமல் கடைசி நேரத்தில் வாய்ப்பு நழுவி போய்க் கொண்டிருந்திருக்கிறது.

நழுவி போன வாய்ப்பு
ராமராஜனின் திரைப்படத்திற்காக இவருடைய முகம் கோமிலியாக இருக்கிறது என்று சொல்லி இவரை போட்டோ சூட் எல்லாம் எடுப்பார்களாம். ஆனால் கடைசி நேரத்தில் அந்த திரைப்படத்தில் வாய்ப்பு வேற நடிகைக்கு கிடைத்து விடுமாம். இது இவருக்கு தொடர்ந்து கொண்டே இருந்ததால் இவருக்கு வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்ப வரைக்கும் நடிகர் ராமராஜனோடு இவர் நடிக்க முடியாமல் ஆகிவிட்டது என்ற ஏமாற்றம் இவருக்கு இருக்கத்தான் செய்கிறதாம். அந்த நேரத்தில் இவருக்கு கிடைத்த வாய்ப்பு சரியாக அமைந்திருந்தால் முன்னணி கதாநாயகியாக நானும் மாறி இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

அங்கீகாரம் கிடைக்கவில்லை
தமிழ் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு அதிகமாக கிடைக்காததால் தான் இவர் மலையாள திரைப்படங்களில் நடிக்க தொடங்கினாராம் 1990 ஆம் ஆண்டில் தொடங்கி 1991 ஆம் ஆண்டிற்குள் 5 மலையாள படங்களில் நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து ஒரு தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார். அடுத்தடுத்து இவருக்கு மலையாள திரைப்படங்களில் தான் அதிகமான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. தமிழ் நடிகையான எனக்கு தமிழ் திரையுலகத்தில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார்.

மெட்ராஸ் பாஷை
வெள்ளி திரையில் அறிமுகம் ஆகி பல சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருந்தாலும் நடிகை ரேணுகா தற்போது முன்னணி திரைப்பட நடிகர்களோடு நடித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக அயன் திரைப்படத்தில் சூர்யாவின் அம்மாவாக நடித்த அசத்தி இருப்பார். அதுவும் அயன் திரைப்படத்தில் மெட்ராஸ் பாஷையில் இவர் பேசி இருப்பார். அதற்கு காரணம் அந்த திரைப்படத்தின் கதை ஆசிரியர் தானாம். அவர்தான் உங்களை எப்படியும் ஒரு வாரத்திற்குள் நான் மெட்ராஸ் பாஷை பேச வைத்து விடுகிறேன் என்று சவால் விட்டு கடைசியில் என்னை அந்த திரைப்படத்தில் அழகாக பேசவும் வைத்து விட்டார் என்று கூறியிருக்கிறார்.
-
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications