கவின் மேரேஜுக்கு இதனால்தான் போகல.. என் பொண்ணு அந்த காட்சியை பார்த்து..! சாண்டி மாஸ்டர் ஓப்பன் டாக்
சென்னை: விஜய் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலமடைந்த சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக இளைஞர்களின் மனதை கவர்ந்து இருந்தார்.
இத்தனை நாட்களாக இவருக்கு டான்ஸ் மட்டும் தான் நன்றாக வரும் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது லியோ திரைப்படத்தில் வில்லன்களுக்கெல்லாம் சவால் விடும் வகையில் தன்னுடைய நடிப்பால் அனைவரையும் மிரட்டி இருந்தார்.

இந்த நிலையில் முதல் முறையாக தன்னுடைய நண்பன் கவின் திருமணத்திற்கு ஏன் போகவில்லை என்பதை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அந்த வகையில் விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் அதிகமான பிக்பாஸ் ரசிகர்களை கவர்ந்த சீசன் என்றால் அது மூன்றாவது சீசன்தான் இந்த சீசனில் அதிகமான இளம் போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதில் கவின், தர்ஷன், முகின், சாண்டி மாஸ்டர் என பல போட்டியாளர்கள் இருந்தாலும் இவர்களுகிடையே நட்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
உள்ளே எப்போதும் ஜாலியாக துறுதுறுவென இருந்த இவர்களுடைய கேரக்டர் பலரையும் கவர்ந்திருந்தது. இப்போது இருக்கும் போட்டியாளர்கள் அதிகமாக சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு கண்டென்ட் கொடுத்தால் தான் நிகழ்ச்சி சுவாரசியம் என்று இருக்கும் நிலையில் ஆனால் அவர்களுடைய சீசனில் அப்படி இல்லை என்று தான் அதிகமான ரசிகர்கள் இப்போதும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் நெருக்கமாக கவின் மற்றும் சாண்டி மாஸ்டர் இருந்திருந்த நிலையிலும் கவின் உடைய திருமணத்திற்கு சாண்டி மாஸ்டர் போகவில்லை. அது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் சாண்டி பேசியிருக்கிறார். அதற்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நாங்கள் ரொம்பவே நெருக்கமாக இருந்தோம்.
வெளியே வந்த பிறகு அவர் அவர்கள் வேலையை பார்த்ததால் பெரிய அளவில் நாங்கள் சந்தித்துக் கொள்வது கிடையாது. ஆனாலும் பாசம் இன்னும் அப்படித்தான் இருக்கிறது. கவின் கல்யாணத்திற்கு எனக்கு போன் பண்ணி கூப்பிட்டான். ஆனால் என்னால் போக முடியவில்லை. அப்போது லியோ திரைப்படத்தின் சூட்டிங்கில் நான் இருந்தேன்.
அதனால் தான் போகவில்லை. மத்தபடி அவன் கல்யாணம் ஆகி அவனுடைய வாழ்க்கையில் செட்டில் ஆனது எனக்கு ரொம்பவே சந்தோஷம் என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் லியோ திரைப்பட அனுபவங்கள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு இந்த மாதிரி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை.
எத்தனையோ பேரு இந்த கேரக்டரில் நடிக்க தயாராக இருந்த நிலையில் எனக்கு இந்த கேரக்டர் கொடுத்ததற்கு இயக்குனருக்கு தான் நான் நன்றி சொல்வேன். அது போல இந்த கேரக்டரில் நான் நடித்த பிறகு என்னுடைய மகள் என்னை மான்ஸ்டர் என்று தான் கூப்பிடுவாள். நான் அந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த கொஞ்ச நாளைக்கு என் பக்கத்திலேயே என் பொண்ணு வரவில்லை.
அது போல தியேட்டரில் நாங்க அந்த படத்தை பார்க்கும்போது என்னை விஜய் அடிக்கும்போது அப்பாவை அடிக்காதீங்க என்று என் பொண்ணு அழுதுட்டா. அது போல இப்போது நான் அவகிட்ட விளையாடிக்கிட்டு இருக்கும்போது நான் அந்த மாதிரி சிரிச்சா அவ உடனே மான்ஸ்டர் என்கிட்ட வராத போயிரு என்று கத்திருவா என்று தன்னுடைய மகள் குறித்தும் அதோடு தன்னுடைய வெற்றிக்கு காரணமே என்னுடைய மனைவிதான் என் மனைவி எனக்கு கொடுக்கிற சப்போர்ட்டு தான் என்றும் அந்த பேட்டியில் சாண்டி மாஸ்டர் பேசி இருக்கிறார். அந்த நிலையில் சாண்டி மாஸ்டரின் நடிப்பு குறித்து பலரும் இணையத்தில் பாராட்டி வருகிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications