சவுந்தர்யா மனசை மூடி வைப்பது ஏன்... இந்த காலத்தில் இப்படியுமா....?
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் சவுந்தர்யா மனசு நிறைய கண்ணன் மாமாவை வச்சுக்கிட்டு, அதை மூடி மறைப்பது இன்றைய காலத்துக்கு மட்டுமல்ல எந்த காலத்துக்கும் ஒட்டாத மாதிரிதான் இருக்கிறது.
இன்றைக்கான சீரியல்களில் ஒரு ஆணுக்கு இரு பெண்கள் போட்டி போட்டு சதி வலை பின்னும் பெண்களுக்கு மத்தியில் சவுந்தர்யா மாதிரி பெண்கள் இருந்தால்...இது ஓவர் சீன் என்றுதான் சொல்ல தோணுது.
முத்துச்செல்வி அழகா இருக்கணும்னு பியூட்டி பார்லருக்கு அழைச்சுட்டு போறது... அவளை வண்டியில அழைச்சுக்கிட்டு போயி நிறைய டிரஸ் வாங்கிக் குட்டு மாமான்னு அனுப்பி வச்சுட்டு முகத்தை ஏக்கமாவும், சோகமாவும் வச்சுக்கறது...

சவுண்டு நடிப்பு எதுக்கு?
கண்ணன் மாமாவை மனசு முழுக்க வச்சுக்கிட்டு,ஒரு பெண்ணாலே இன்னொரு பெண்ணுக்கு விட்டுத் தரவே முடியாது.அப்படியே விட்டுக் கொடுத்தாலும் கண்டுக்கமா இருந்துடுவாங்க. இந்த சவுந்தர்யா முத்து செல்வியை தலையில தூக்கி வச்சு கொண்டாடாத குறைதான்... இதெல்லாம் கதையின் டூ மச்.

வீடு அரண்மனையா
என்னவோ பெரிய அரண்மனையில் வசிப்பது போல ஒருத்தர் மனசுல இருக்கறதை ஒருத்தர் தெரிஞ்சுக்க முடியாத மாதிரி நடந்துக்கறதும், விஜயலட்சுமி அம்மா கணவரிடம், கண்ணன் சவுந்தர்யா பற்றி பேசுவது கண்ணனின் காதில் ஒரு முறை இல்லாட்டியும் ஒரு முறையாவது எதேச்சையா விழாதா?

குறி சொல்லியும்
சாமியாடி குறி சொல்லியும் அக்கா சமாதானம் ஆகலையே என்னவா இருக்கும்.அக்கா உன் மனசுல என்னதான் இருக்குன்னு கண்ணன் வாய்விட்டு கேட்க மாட்டானா... நீ எதனால முத்து செல்வி வேணாம்னு சொல்றே..வேற யாரையாவது நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறியான்னு வளர்த்த அக்காகிட்ட ஒரு தம்பி கேட்க மாட்டான்?

கதை கண்ணாமூச்சி
கண்மணி கதை கண்ணாமூச்சி விளையாட்டு கதை மாதிரி, எல்லோரும் கண்ணைக் கட்டிக்கிட்டு என்ன நடக்குதுன்னே தெரியாம ஒருத்தருக்கு ஒருத்தர் இருக்கறாங்க அவ்ளோ பெரிய வீட்டில். பார்க்கற நமக்கும் கண்ணைக் கட்டிவிட்டுட்டா ரொம்ப நல்லாருக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications