எதனால் மின் கட்டணம் அதிகம்.. விஜய் டிவி சீரியல் நடிகை குற்றசாட்டுக்கு மின்சார வாரியம் விளக்கம்
சென்னை: விஜய் டிவியில் மகாநதி உட்பட பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை வைஷாலி தன்னுடைய இன்ஸ்டால் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் 2,3 மாதங்களாக அதிகமான மின் கட்டணம் வருவதாக கூறியிருந்தார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனதை தொடர்ந்து அதற்கு மின்சார வாரியம் விளக்கம் கொடுத்திருக்கிறது. எதனால் மின் கட்டணம் அதிகரித்திருக்கிறது? அதற்கு மின்சார வாரியத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சீரியல் நடிகை குற்றச்சாட்டு
நடிகர் விஜய் அரசியலில் கால் வைத்த சமயத்தில் இருந்து நடிகை வைஷாலி தன்னுடைய கணவருடன் சேர்ந்து விஜய்க்கு சப்போர்ட் செய்து கொண்டிருந்தார். விஜய் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டிருந்தார். அதுபோல விஜய் முதல்வரான பிறகு 200 யூனிட் ஃப்ரீ என்பதற்காக விஜய் முதலில் கையெழுத்து போட்டதும் சந்தோஷமாக வீடியோ வெளியிட்டு இருந்த வைஷாலி இப்போது உருக்கமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

மின்சார வாரியம் விளக்கம்
அதில், கடந்த சில மாதங்களாக வழக்கத்துக்கு மாறாக மின் கட்டணம் அதிகரித்து இருக்கிறது. இது சாமானிய மக்களால் கட்ட முடியாது. எங்களாலும் இதை கட்ட கஷ்டமாக இருக்கிறது என்று அவர் சொல்லி இருந்தார். இது அதிகமாக விமர்சிக்கப்பட்ட வந்த நிலையில் இது குறித்து கூறுகையில், மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கோடை வெயில் நீடித்ததால் மின் பயன்பாடு அதிகரித்ததே கட்டணம் உயர முக்கிய காரணம்.
மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 3.43 லட்சம் மின் இணைப்புகளுக்கான சிறப்பு ஆய்வில் 0. 75% இணைப்புகளில் மட்டுமே வேறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. 200 யூனிட் இலவசம் மின் திட்டத்தின் மூலம் ஜூன் மாதத்தில் 59.31 லட்சம் நுகர்வோர்களும், ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் நுகர்வோர்களும் எவ்வித கட்டணமும் இன்றி இலவச மின்சாரத்தை பெற்றுள்ளனர். இதனால் மின் கட்டணம் குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
