விஜய் மீடியாவை சந்திக்காத காரணம், 6 மணிக்கு மேல No பிரச்சாரம்! துண்டு பேப்பர் வாசிப்பு! விளக்கம் கொடுத்த SAC
சென்னை: தமிழக அரசியல் களத்தில் தனது பயணத்தை தொடங்கிய நடிகர் விஜய் குறித்து தினமும் பல்வேறு கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக அவர் மீடியாவை நேரடியாக சந்திக்காதது, பேச்சின்போது பேப்பரை பார்த்து பேசுவது, மாலை 6 மணிக்கு பிறகு பிரச்சாரம் செய்யாதது போன்ற விஷயங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், இந்த சர்ச்சைகள் குறித்து விஜயின் அப்பாவும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அளித்த பேட்டி தற்போது கவனம் ஈர்த்துள்ளது.

செய்தியாளர்களை சந்திக்காத விஜய்
சினிமாவில் இருக்கும் போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய் இப்போது பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு செய்தியாளர்களை பார்த்தாலே தலை தெறிக்க ஓடுகிறார் என்று பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் மீடியாவை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த எஸ்.ஏ.சி, "ஒரு அரசியல்வாதி தினமும் மீடியாவை சந்திக்கணும் என்று சட்டம் ஏதாவது இருக்கா? விஜய் தனியாக நிற்கிறார். நம்பிக்கையோட தான் நிற்கிறார். 'நான் போட்டியிடுறேன், வாக்களிங்க'ன்னு விளம்பரம் பண்ணவே இல்ல," என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பேப்பரை பார்த்து பேசுவது ஏன்?
பிரச்சாரங்களில் விஜய் பேப்பரை பார்த்து பேசுவது குறித்து பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு விளக்கம் அளித்த எஸ்.ஏ.சி, "ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் வேற வேற இருக்கும். அதைப் பற்றிய குறிப்புகளை எழுதி வைத்துக்கிட்டு பேசுறார். அது தவறா?" என்று பதிலடி கொடுத்தார்.
மேலும், விஜய் ஆரம்பத்தில் சினிமாவில் நடித்த காலத்திலேயே அவருக்குள் சமூக சிந்தனையை விதைத்தது தானென்று பெருமையாகவும் கூறியுள்ளார்.

6 மணிக்கு பிறகு பிரச்சாரம் இல்லாத காரணம்
விஜய் மாலை 6 மணிக்குப் பிறகு பிரச்சாரம் செய்யவில்லை என்ற விமர்சனத்துக்கும் எஸ்.ஏ.சி விளக்கம் கொடுத்துள்ளார்.கரூரில் நடந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளை மனதில் வைத்து, இரவு நேர பிரச்சாரத்தை தவிர்க்கிறார் என்று கூறியுள்ளார்.
எஸ்.ஏ.சி தனது மகனைப் பற்றி மேலும் பேசும்போது, "விஜய்க்கு குடும்பத்தைவிட மக்கள் முக்கியம். அவர் எதையும் சீரியஸா எடுத்துக்கொள்வார். அதனால தான் எல்லா விஷயத்தையும் திட்டமிட்டு செய்கிறார்," என்று தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் விஜய் அரசியலுக்கு போறேன் என்று என்கிட்ட வந்து சொன்னாரு, நான் அப்போ எதிர்க்கட்சிக்காரங்க அரசியலுக்கு வரவங்களை என்னவெல்லாம் தொந்தரவு செஞ்சிருக்காங்க என்று ஒரு லிஸ்ட் கொடுத்தேன்.
அதை லிஸ்ட் எல்லாம் படித்து பார்த்ததும் அவர் என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னாரு. நான் அன்னைக்கு அந்த லிஸ்டில் சொன்ன விஷயங்களை எல்லாவற்றையும் இப்போ விஜய் மீது எதிர் கட்சியினர் செய்து கொண்டிருக்கிறார்கள். அவருடைய கேரக்டரை ஸ்பாயில் பண்ணுறாங்க, பொருளாதாரத்தை தடை பண்ணுறாங்க ஆனால் அவர் தைரியமா அதை எதிர்கொள்கிறார் என்று தன்னுடைய மகனுக்கு சந்திரசேகர் ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.

விமர்சனங்களும், ரசிகர்களின் ஆதரவும்
ஒருபுறம் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும், மறுபுறம் விஜய் ரசிகர்கள் அவருக்கு முழு ஆதரவு அளித்து வருகிறார்கள். "அப்பாவே நேரடியாக விளக்கம் கொடுத்திருக்கிறார். இனிமேல் unnecessary criticism வேண்டாம்" என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் குடும்ப பிரச்சனை கையெழுத்து போட்டு முடிஞ்சாச்சு.. பெற்றோர் நிலை! தப்பா காட்டுறாங்க.. SAC ஆதங்கம்
மொத்தத்தில், அரசியலில் புதிதாக களம் இறங்கியுள்ள விஜயைச் சுற்றி எழும் கேள்விகளுக்கு, அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் நேரடியாகவும், வெளிப்படையாகவும் பதில் அளித்திருப்பது தற்போது பெரிய பேச்சாக மாறியுள்ளது.
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள் -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
4 அதிமுக விக்கெட் காலி.. இபிஎஸ்ஸுக்கு தலைவலி.. தவெகவில் இணைந்த மாஜி அமைச்சர்கள்.. விஜய் தந்த செக்மேட் -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
"விஜய், ஆர்.ஜே. பாலாஜிக்காகவே அந்த பதிவு?"... ‘கருப்பு’ சர்ச்சைக்கு நடுவே சூர்யா கொடுத்த சைலண்ட் சிக்னல்! -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம்












Click it and Unblock the Notifications