சாய்ராவின் 2 முகம்.. மனைவி பற்றி கேட்டதுமே, AR ரஹ்மான் நெகிழ்ச்சி பதில்.. இது இணையத்தில் சுத்துது
சென்னை: "தன்னுடன் எத்தகைய வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கும் என்பது பற்றி, திருமணத்துக்கு முன்பே தன்னுடைய மனைவியிடம் தெரிவித்துவிட்டேன்" என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய பழைய பேட்டி ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அவரது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது வக்கீல் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியாகியிருந்தது.

அறிக்கை: அந்த அறிக்கையில், "திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்து,கணவர், ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை சாய்ரா பானு எடுத்திருக்கிறார்... இந்த முடிவானது தங்கள் உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சில உணர்ச்சிபூர்வமான அழுத்தத்திற்கு பிறகு ஏற்பட்டது.
இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதிலும் இந்த தம்பதியினருக்கு இடையே சிரமங்களும், தீர்க்க முடியாத இடைவெளியும் உருவாகியது. சில முரண்பாடுகள் எங்களுக்கு இடையே தீர்க்க முடியாத ஒரு இடைவெளியை உருவாக்கி விட்டது. அந்த முரண்களை சரி செய்து இணைப்பை தொடரும் முயற்சியில், இருவரும் தோல்வி அடைந்து விட்டதாக உணர்ந்தனர். ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவது என்ற வேதனை மற்றும் சோகமான முடிவை சாய்ரா பானு எடுத்துள்ளார்" என்று கூறியிருந்தார்.
திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த தம்பதியின் விவாகரத்து முடிவு பலருக்கும் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. இந்நிலையில், கடந்த 2012ல் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான சிமி கரேவால் உடன் நேர்காணலில் ரஹ்மான் திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சரியான குணம்: '29 வயதாகிவிட்டது.. கல்யாணம் செய்து கொள்வதற்கு சரியான காலம் அதுதான் என்று முடிவு செய்தேன். இருந்தாலும், மணப்பெண்ணைத் தேடிக்கொண்டிருக்க எனக்கு நேரமில்லை.. அதனால், எனக்கேற்ற பெண்ணை பார்க்கும்படி என் அம்மாவிடம் சொல்லியிருந்தேன்.
'
'எளிமையான பெண்ணாக இருக்க வேண்டும், நான் இசைப்பணியை செய்வதற்கு அதிகம் தொந்தரவு தராதவராக இருக்க வேண்டும். மனைவியாக வரப்போகிறவர், கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் அழகு, நிறைய பணிவு கொண்டவராக இருக்க வேண்டும் என்று என் அம்மாவிடம் சொன்னேன்" என்றார்.
சாய்ராவின் குணம்: "அப்படியானால் மனைவியாக வந்த சாய்ராவின் குணம், நீங்கள் எதிர்பார்த்தது போல் இருக்கிறதா? " என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்புகிறார்..
அதற்கு ரஹ்மான், ''அவர் அமைதியாக இருக்கிறார் என்றால், அமைதியாக இருப்பார். கோபம் வந்து விட்டால் அதைக்காட்டி விடுவார். அவருக்கு 2 பக்கங்கள் இருக்கின்றன. தொடக்கத்தில், நான் வெளியில் எங்குமே அழைத்துச் செல்வதில்லை என்பதால் அவர் விரக்தி அடைந்தார்.
"கல்யாணத்துக்கு முன்னாடியே, அவர் எத்தகைய வாழ்க்கையை என்னுடன் வாழ வேண்டியிருக்கும் என்பதை நான் அவரிடம் தெரிவித்து விட்டேன். அந்த வகையில் அது ஒரு முன்கூட்டியே செய்யப்பட்ட ஒப்பந்தம் போன்றது" என்று ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
வைரல் பேட்டி: தன்னுடைய திருமணம், மனைவி பற்றி ரஹ்மான் அளித்த இந்த பேட்டிதான், இப்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.. தன்னுடன் எத்தகைய வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கும் என்பதை சாயிராவிடம் திருமணத்துக்கு முன்பே ரஹ்மான் தெரிவித்து விட்டதாக கூறியிருப்பதை, ரஹ்மானின் ரசிகர்களும் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications