பிட்டு பிட்டா உருவி ஒட்டி... இவங்களா ஜாம்பவான்? தமிழக மக்கள் மூஞ்சியில கமல் கரியை பூசுவார்: பிரபலம்
சென்னை: பல பிரம்மாண்ட படங்களை தர வேண்டிய மூத்த இயக்குனர்கள் இன்று அப்படியொரு படங்களை தருவதில்லை.. கலை என்பது மக்களுக்கானது.. ஆனால், இன்று சினிமாவை மக்களுக்காக எடுப்பதில்லை.. கலைஞர்களுக்காகவே படம் எடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் இல்லாத பிரச்சனையா? ஆனால், அவைகளை பற்றி படம் எடுப்பதில்லை என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Fine Time Cine என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தமிழா தமிழா பாண்டியன், "மணிரத்னத்தை பொறுத்தவரைக்கும் ஒரு கிரியேட்டிவ் டைரக்டர் கிடையாது.. முழுக்க முழுக்க பெரிய சக்சஸ் படம் தந்த இயக்குனரே அல்ல.. கதை, திரைக்கதை, வசனம் இதுதான் ஒரு திரைப்படத்தின் கரு.. அந்த கருவை அவர்கள் தேடுவதே கிடையாது..

எங்கெங்கே உலகத்துல படங்கள் ரிலீஸ் ஆகிறதோ, கொரியா, சீனா படங்கள் எதுவானாலும், அதை உடனே பார்க்க வேண்டியது, அதிலிருந்து கதையை கருவை, காட்சிகளை எடுப்பது.. அட்லியின் வேலையே இதுதான், லோகேஷ் கனகராஜ் வேலை இதுதான், சங்கர் வேலை இதுதான், மணிரத்னத்தின் வேலையும் இதுதான்.
தமிழ்நாட்டில் இவ்வளவு பிரச்சனை இருக்கே? ஏன் மக்களுக்கு சொல்ல முடியல? யோசிப்பதற்கும் இவர்களுக்கு நேரமில்லை.. வேறு யாராவது ஏதாவது நாட்டில் யோசித்து, அதை படமாக எடுத்தால் அதை எடுப்பதுதான் இவர்கள் வேலை..
பாகுபலி பிரமாண்டம்
கண்ணீர் சிந்தக்கூடிய கதைகள் இந்த தமிழ்நாட்டில் நடக்குது.. ஆனால் பல கதைகளை திருடுவதில்தான் இவர்கள் எல்லாம் ஜாம்பவான்கள்.. பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தை, தமிழில் யாராவது தர முடியுமா? பாகுபலியின் பிரம்மாண்டத்தை தமிழில் ஏன் இயக்குனர்களால் தரமுடிவதில்லை..
ஒரு படம் வெளியாவதற்கு முன்பேயே 5 மடங்கு சம்பளத்தை வாங்கி கொள்வதுதான்
இவர்களது வேலையே தவிர, இளம் இயக்குனர்கள் கொண்ட ஒரு குழுவை இவர்கள் பராமரிப்பதே இல்லை. இன்று இருக்கின்ற இயக்குனர்கள் அனைவருமே ஒரு காலத்தில் உதவி இயக்குனர்கள்தான்.. ஆனால், இவர்கள் இன்று சினிமாவை நோக்கி, கலை தாகத்துடன் இளம் இயக்குனர்களை, கூத்துப்பட்டறைகளை உருவாக்குவதே இல்லை..
பிட்டு படம் மாதிரி
அட்லி படமெல்லாம் பிட்டு படம் மாதிரி.. ஒவ்வொரு படத்திலிருந்தும் ஒரு பிட்டு எடுத்து, ஒரு படத்தை உருவாக்கிடுவார்.. லோகேஷ் கனகராஜ் இதுவரை எந்த சரித்திர படத்தை தந்திருக்கிறாரு? அவருக்குதான் ரஜினி கால்ஷீட் தர்றாரு? தமிழ்நாட்டில் விவசாயிகள் பிரச்சனை, காவிரி பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை இருக்கே? 25 வயது இளைஞன் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை தந்திருக்கிறாரே?
பல பிரம்மாண்ட படங்களை தர வேண்டிய இயக்குனர்கள் இன்று தருவதில்லை.. கலை என்பது மக்களுக்கானது.. ஆனால், இன்று சினிமாவை மக்களுக்காக எடுப்பதில்லை.. கலைஞர்களுக்காகவே படம் எடுக்கிறார்கள்..
சிவப்பு கம்பளம் சத்யஜித்ரே
எமர்ஜென்சி காலத்தில், நாட்டில் நடந்த அவலங்களை, சமரசம் இல்லாமல் படம் எடுத்தார் இயக்குனர் சத்யஜித்ரே.. உடனே இந்திரா காந்தி, அவரை கைது செய்ய சொல்கிறார்.. அதற்கு சத்யஜித்ரே நாட்டை விட்டே வெளியேறுவதாக அறிவித்தார்.. அடுத்த நிமிடமே பல நாடுகள், தங்கள் நாட்டுக்கு வந்துவிடும்படி சத்யஜித்ரேவுக்கு அழைப்பு விடுத்தன.. சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்க தயாராகின.
உடனே இந்திய அரசு சத்யஜித்ரேவிடம் மண்டியிட்டது.. மன்னித்து கொள்ளுங்கள் சத்ய ஜித்ரே.. நீங்கள் எப்போதும்போல சமரசம் இல்லாமல் சினிமா எடுங்கள் என்றார் இந்திரா காந்தி.. ஒரு அரசே அடிபணியுது என்றால், ஒரு இயக்குனர் இப்படித்தான் இருக்கணும்.
தூக்கு கயிறு தொங்க போனபோது மன்னிப்பு என்ற வார்த்தையே தெரியாது என்றார். என்னை சுட்டுக் கொல்லுங்கள், அம்மான்னு கூட கத்த மாட்டேன், மன்னிப்பும் கேட்க மாட்டேன் என்று பிணமானார் சேகுவேரா.. பலமுறை ஆங்கிலேயர் சொல்லியும் நேதாஜி மன்னிப்பு கேட்கவில்லை.. இப்படி மன்னிப்பு வைத்தே பல வரலாறுகள் நமக்கு இருக்கு.
மன்னிப்பு கேட்பாரா கமல்
ஆனால், கமல்ஹாசனை பொறுத்தவரைக்கும், நாடாளுமன்றத்துக்கு போக போகிறார், தக் லைஃப் படம் ஊத்திக்கிச்சு.. இப்போ கர்நாடகாவில் மன்னிப்பு கேட்பாரா? என்று சர்ச்சையாகி உள்ளது.. எம்பியாக பதவியேற்று கொண்டதும், கர்நாடகா மக்களிடம், இந்த அன்பு மன்னிப்பு கேட்கும் என்று மன்னிப்பு கேட்டு கண்டிப்பாக கமல்ஹாசன் ஒரு முற்றுப்புள்ளி வைப்பார்..
மன்னிப்பு கேட்டுவிடுங்கள் என்று தமிழ்நாட்டிலிருந்தும் குரல் வந்துவிட்டது. கமலுக்கு மன்னிப்பு கேட்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைமை.. எனவே, எம்பியாக பதவியேற்றுக் கொண்ட பிறகு, கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, தமிழர்களின் மூஞ்சியில் கரியை பூசுவார் கமல்ஹாசன். இதுதான் எதிர்காலத்தில் நடக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications