ஸ்வேதாவுக்கு பிட்டு போடறான் சஞ்சய்.. நிலா கூட வாழ்வானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நிலா காதலுக்கு உதவி செய்யறேன்னு ஏமாத்தி, கடைசியில தன் மகன் சஞ்சய்க்கு கல்யாணம் செய்து வச்சிட சூழ்ச்சி செய்யறாங்க நீலாம்பரி

நீலாம்பரி வீட்டுல ஒரு பொண்ணை சங்கிலியால் கட்டி போட்டு வச்சிருக்கறதா சொன்னோமே.. அது வேற யாருமில்லை.. நீலாம்பரியின் தம்பி பொண்டாட்டிதான்.

வீட்டுக்கு வந்த நிலாவிடம் எப்படியோ ரூமில் இருந்து தப்பி வந்த, நீலாம்பரியின் தம்பி பொண்டாட்டி நல்லாத்தான் பேசிகிட்டு இருக்காங்க. கடைசியில கணவன் வர்றான்.. அவளை ரூமுக்கு அழைச்சுட்டு போறான்.

போட்டோ

போட்டோ

நீலாம்பரியின் போட்டோவைப் பார்த்த தம்பி பொண்டாட்டி டென்சன் ஆகிடறா.. என்னை கொன்னுடுவாங்க.. நான் இங்க இருக்க மாட்டேன்னு சொல்லி ஒரே கத்தல், கூச்சல் போடறா.இதை நீலாம்பரியின் தம்பி கவனிக்கலை.

நீலாம்பரி

நீலாம்பரி

அது மட்டுமில்லை, தம்பி பொண்டாட்டி என்னையும், என் புள்ளையையும் கொன்னுடுவாங்கன்னு சொல்லிட்டு அழறா. பார்க்கறப்போ, சொத்துக்காக நீலாம்பரி என்ன வேணா செய்வாங்கன்னும், இதுல ஒரு விஷயமாவே தன் மகன் சஞ்சய்க்கு அப்பாவி நிலாவை கட்டி வைக்க நினைக்கறாங்கன்னும் தெரியுது.

பிளே பாய்

பிளே பாய்

இங்க பிளே பாயான சஞ்சய், நிலா தங்கச்சி கூட ஊர் சுத்தறான். உனக்கு என்ன புடிக்கும்னு கேட்டு, நைசா நிலாவுக்கு என்ன புடிக்கும்னு கேட்கறான். ஸ்வேதா கோபப்பட, இல்லை, நிலாவை நான் சர்பிரைஸ் பண்ணினா அம்மாகிட்ட இருந்து பிசினெஸ் பண்ண பணம் கேட்டா கல்யாணத்துக்கு முன்னேயே பணம் குடுக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்றான்.

ஆசை

ஆசை

அவளுக்கு புடிக்கும்னு ஒண்ணுமே கியடையாது. எப்ப பார்த்தாலும் படிப்புதான்.. தலை நிறைய எப்பவாவது பூ வச்சுக்க ஆசைப்படுவான்னு ஸ்வேதா சொல்றா. சரி, அப்போ நிறைய பூவை இறக்கிடுவோம்னு மனசுல நினைக்கறான்.

டயலாக்

டயலாக்

உன்னைவிட்டு என்னால இருக்க முடியாது.. உன் கூடவே இருக்கணும்னு தோணுதுடான்னு ஸ்வேதா சொல்ல, எனக்கும்தான் டார்லிங். நீதான் என்னோட லைஃப்னு சொல்லிட்டு, இன்னும் எத்தனை பொண்ணுங்க கிட்ட இந்த டயலாக்கை சொல்லுவேடா சஞ்சய்னு தனக்குள்ளேயே பேசிக்கறான்.

நல்ல பொண்ணா

நல்ல பொண்ணா

இங்க நீலாம்பரியின் தம்பி, வேலைக்காரிகிட்ட , நிலா ரொம்ப நல்ல பொண்ணா இருக்கா. நிலாவை பார்த்ததும் நல்லா பேசிக்கிட்டு இருந்த என் பொண்டாட்டி அவளை போக விட மாட்டேன்னுட்டா.. அவ மடியில் குழந்தை மாதிரி படுத்து தூங்கினா. ரொம்ப நல்ல பொண்ணா இருக்கா, நம்ம சஞ்சய்க்கு கல்யாணம் பண்ணி வச்சா, அவளை சஞ்சய் நல்லா பார்த்துக்க மாட்டானே.. அக்கா என்ன பண்ணுவாங்களோன்னு கவலையா இருக்குன்னு சொல்றான்.

ஏதோ தப்பு

ஏதோ தப்பு

அப்போ ஏதோ தப்பு நீலாம்பரிகிட்ட இருக்கு. சொத்துக்காகத்தானே இருக்கும்...வீட்டுல நிலாவுக்கு அவங்க அம்மா சாப்பாடு ஊட்டி விடறாங்க. எல்லாம் கல்யாணத்துக்கு சம்மதிச்சதால் பொய் பாசம்தான்னாலும் எனக்கு புடிச்சிருக்குன்னு சொல்லிக்கறா நிலா ஆனந்த கண்ணீர் வடிக்கறா. என்னம்மா கண்ணுல தண்ணி.. சாப்பாடு காரமா இருக்கான்னு அம்மா கேட்க.. இத்தனை வருஷத்துல இன்னிக்குதான்மா உங்க கையால எனக்கு ஊட்டி விடறீங்க..அதான் ஆனந்த கண்ணீர்னு சொல்றா நிலா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+