செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு.. நான் தப்பு பண்ணிட்டேன்! தமிழா தமிழாவில் கதறி அழுத பெண்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் பெண் ஒருவர் தன்னுடைய கணவர் மற்றும் அவருடைய தோழி இருவர் பற்றியும் தான் புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்ட விதம் குறித்து கண் கலங்க பேசி இருக்கிறார்.
சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்று விட்டால் அதே போல அடுத்தடுத்த சேனல்களிலும் நிகழ்ச்சிகள் தொடங்கப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. அது போல தான் நீயா நானா நிகழ்ச்சியை போலவே ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் சந்தோஷங்களில் இருந்து விவாதம் நடைபெறுகிறது.

அது போல நிகழ்ச்சியில் பல சுவாரசியமான தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த வாரத்தில் ஆண் பெண் நட்பு குறித்தும் அவர்கள் இருவருக்குள் இருக்கும் நட்பால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்த வார நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில்இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் ஆவுடையப்பனை அதிர்ச்சி அடைய வைக்கும் விதமாக ஒரு பெண் பேசி இருக்கிறார். அதாவது இளம் ஜோடிகள் இருவர் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு பக்கத்தில் இருக்கும் ஆண் ஒருவர் சொல்கிறார் சார் பொதுவா கல்யாணத்திற்கு பிறகு ஹனி மூனுக்கு எத்தனை பேரு போவாங்க என்று கேட்கிறார்.

அதற்கு ஆவுடையப்பன் இரண்டு பேர் போவாங்க என்று சொல்கிறார். அதற்கு அந்த ஆண், நாங்க நான்கு பேர் போனோம் எங்க ரெண்டு பேருடன் என் மனைவி அவருடைய நண்பரும் அவர் மனைவியும் வரணும் என்று சொன்னாங்க. அதற்கு ஒரு காரணம் சொன்னாங்க பாருங்க.. அதாவது போட்டோ எடுப்பதற்கு அவன் வந்தால் தான் நன்றாக இருக்கும் என்று சொன்னாங்க.
என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப இவன் விளையாடறான் சார் என்று கம்ப்ளைன்ட் சொல்கிறார். அதுபோல இன்னொரு பெண் என்னுடைய கணவரும் அவருடைய தோழியும் ஆறு வருஷமா பேசல. அதற்கு காரணம் நான் தான். கல்யாணமான புதியதில் என் கணவர் தோழியிடம் தான் அதிகமா பேசிட்டு இருப்பாங்க. என் கணவர் சாப்பிட்டு இருக்கும்போது அவருடைய தட்டிலிருந்து சாப்பாடு எடுத்து சாப்பிடுவாங்க.

எனக்கு அது கோபமாக இருந்துச்சு. நான் அந்த இடத்திற்கு வந்த பிறகு எனக்கு தானே அவங்க விட்டுக் கொடுக்கணும். நான் அவங்களுக்காக இருக்கிறேன் ஆனா இவங்க எங்கள் இடையில் வருவது எனக்கு பிடிக்கல. அதனால சண்டை போட்டு ஆறு வருஷமா பேசல. அப்புறம் அவங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு குழந்தை பிறந்து குழந்தைக்கு முடிஎடுப்பதற்காக எங்களுக்கு சொல்ல வந்தாங்க.
நாங்களும் சரி என்று சொல்லி இருந்தோம். பிறகு பங்க்ஷனுக்கு போயிருந்தோம். எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது திடீர்னு அவங்க வந்து என்ன விஜய் நின்னுட்டே இருக்குற உக்காரு என்று சொன்னாங்க. அப்போ என் கணவர் எதற்காக உட்காரனும் என்று கேட்டாங்க, அப்போ நீ இன்விடேஷன் பாக்கலையா அதில் தாய் மாமன் உன் பெயர்தான் போட்டு இருக்கேன்.

நீ தான் உக்காரனும் மடியில் வைத்து தான் என் குழந்தைக்கு மொட்டை போட போறேன் என்று சொன்னாங்க. அப்போ எனக்கு செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு. இப்படி ஒரு உறவை ஆறு வருஷமா நான் பிரித்து வச்சுட்டேனே என்று நினைத்தேன் என்று கண் கலங்கி சொல்லி இருக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போதைய காலகட்டத்தில் ஆண் பெண் நட்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பொதுவாக ஆண்களுக்கு பெண் தோழி இருக்கும்போது எந்த தவறும் செய்ய மாட்டான் என்று சிலர் சொல்லி வருகிறார்கள். அதுபோல ஒரு பெண் தன்னுடைய தோழரிடம் தான் அனைத்து கவலைகளையும் சொல்கிறார் என்றும் சில புள்ளி விவரங்கள் சொல்லி வருகிறது. ஆனாலும் திருமண வாழ்க்கை என்று வரும்போது ஆண் பெண் நட்பை தாண்டியும் திருமண பந்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத போது அங்கு பல பிரச்சனைகள் வருகிறது என்பது இந்த ப்ரோமோவில் தெரிகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications