Bigg Boss: பிக் பாஸ் போட்டியாளரான உலக சாம்பியன் மேரி கோம்.. பிரியங்கா சோப்ரா கொடுத்த வார்னிங்
சென்னை: பாக்ஸிங் ரிங்கில் எதிரே நிற்பவர்களை நாக் அவுட் செய்த மேரி கோம் இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் களம் இறங்கி இருக்கிறார். இதுவரை அவரை உலக சாம்பியன் பாக்ஸராகவும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனையாகவும் பார்த்திருக்கிறோம். ஆனால் இனிமேல் மேரிகோமின் இன்னொரு பக்கத்தை பார்க்கப் போகிறோம். சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 20 நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமான போட்டியாளராக என்ட்ரி கொடுத்திருக்கிறார் மேரி கோம்.
மேரி கோம் என்ற பெயரை கேட்டாலே முதலில் நினைவுக்கு வருவது பாக்ஸிங் தான். மணிப்புரை சேர்ந்த இவர் உலக அமைச்சூர் பாக்சிங் சாம்பியன்ஷிப்பில் பலமுறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். 2012ல் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து காமன்வெல்த் போட்டி என பல சர்வதேச மேடைகளிலும் தங்க பதக்கங்களை குவித்திருக்கிறார்.

பிக் பாஸ் போட்டியாளரான மேரி கோம்
அதுமட்டுமா? விளையாட்டு துறையில் இவருடைய சாதனையை கவுரவிக்கும் வகையில் பத்ம விபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளும் வழங்கப்பட்டன. பாக்ஸிங் ரிங்கில் காட்டிய அந்த ஒழுக்கமும் விடா முயற்சியும் தான் மேரி கோமின் அடையாளம். ஆனால் இப்போது கையில் கிளவுஸ் இல்லை, ரிங்கும் இல்லை, எதிராளியும் இல்லை. அதற்கு பதிலாக பிக் பாஸ் வீடு கேமராக்கள், சக போட்டியாளர்கள் என முற்றிலும் வேறு ஒரு உலகத்திற்குள் நுழைந்து இருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டில் வீராங்கனை
பிக் பாஸ் வீட்டிற்குள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று மேரிகோமிடம் சல்மான் கான் கேட்டதும் விளையாட்டு வீராங்கனையாக இருந்த போது கடைபிடித்த ஒழுக்கத்தை இங்கும் கொண்டு வர போவதாக தெரிவித்திருக்கிறார். வீட்டில் அனைவரும் வேலைகளில் பங்கெடுக்க வேண்டும், ஒன்றாக இணைந்து வாழ வேண்டும், ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய அணுகுமுறையாக இருக்கும் என்றும் கூறினார்.
பிக் பாஸ் 10 நிகழ்ச்சிக்கு தேர்வான 19 போட்டியாளர்கள் இவர்கள்தான்! காமன்மேன் முதல் செலிபிரட்டீஸ் வரை முழு லிஸ்ட்
அதோடு மக்கள் இதுவரை தன்னை ஒரு பாக்ஸராக மட்டுமே பார்த்திருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள் போன பிறகு நான் யார் என்பதை மக்கள் வேறு ஒரு கோணத்தில் பார்க்க முடியும் என்ற எதிர்பார்ப்பும் அவருக்கு இருக்கிறது. ஒரு அம்மாவாகவும், ஒரு பெண்ணாகவும், ஒரு விளையாட்டு வீராங்கனையாகவும் தன்னுடைய வாழ்க்கையில் இருக்கும் பல்வேறு பக்கங்களை இந்த நிகழ்ச்சி வெளியில் கொண்டு வரும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

பிரியங்கா சோப்ரா அட்வைஸ்
மேரி கோம் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் நேரத்தில் அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருந்தது. 2014ல் வெளியான மேரி கோம் திரைப்படத்தில் மேரிகோமின் கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா. அந்த படத்துக்கு பிறகு இருவருக்கும் நல்ல நட்பு இருந்து வருகிறது. அதனால் பிக் பாஸ் பிரீமியர் மேடையில் மேரிகோம்க்காக பிரியங்கா சோப்ராவின் வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
மேரி கோம்க்கு வாழ்த்து தெரிவித்த பிரியங்கா நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே இரு. மனதை திறந்து விளையாடு என்று கேட்டுக்கொண்டார். அதோடு இவருடைய நாக்கவுட் ரொம்ப பயங்கரமாக இருக்கும் என்று மற்ற போட்டியாளர்களுக்கு சின்ன எச்சரிக்கையும் கொடுத்துவிட்டார். அதாவது மேரிகோமை பார்த்து வீட்டுக்குள் யாராவது வம்பு இழுத்தால் அது பாக்ஸிங ரிங் இல்லை என்பதாவது முதலில் அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டிய நிலை தான்.
உலக சாம்பியனுக்கு பிக் பாஸ் வீடு ஒரு புதிய ரிங். ஆனால் இந்த முறை நாக் அவுட் யாருக்கு என்பதுதான் சுவாரசியமே இருக்கிறது. பிக் பாஸ் தமிழ் தொடங்கிய அதே நேரத்திலேயே நான்கு மொழிகளிலும் இந்த முறை தொடங்கி இருக்கிறது. தமிழைப் போலவே இப்போது மற்ற மொழி பிக் பாஸ் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications
