Exclusive: சிறகடிக்க ஆசையில் ரோகிணி கேரக்டர் உருவானது இப்படித்தான்.. ரகசியத்தை உடைத்த எழுத்தாளர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் வரும் ரோகிணியின் கேரக்டர் மற்றும் இந்த சீரியலில் வரும் ஒவ்வொரு கேரக்டரையும் எப்படி உருவாக்கப்பட்டிருந்தது என்பது குறித்து இந்த சீரியலின் எழுத்தாளர் குரு சம்பத்குமார் ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்தியேகமாக பேசியிருக்கிறார்.

விஜய் டிவியில் டிஆர்பியில் முதல் இடத்திலிருந்து வரும் சிறகடிக்க ஆசை சீரியல் பற்றி தான் இணையத்திலும் அதிகமான பேச்சு இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்து ரோகிணி எப்போது மாட்டுவார் என்ற கேள்விகள் ரசிகர்கள் மனதில் இருந்து வந்தது. இப்போது அது நடந்திருக்கிறது. ஆனாலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Siragadikka aasai serial vijay tv

உண்மை உடைபட்டது

ரோகிணி தன்னுடைய மாமா என்று நடிப்பதற்காக பிரவுன் மணியை கூட்டிக்கொண்டு வந்தார் என்ற உண்மை மட்டும்தான் விஜயாவிற்க்கு தெரிந்திருக்கிறது. ஆனால் ரோகிணி அதற்கு என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார் என்று கூட கேட்காமல் ரோகிணியை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தி இருக்கிறார். இதனால் இதற்கு ரோகிணி என்ன பிளான் போட்டு மீண்டும் வீட்டிற்குள் வரப் போகிறார் என்ற கேள்விகள் இருக்கிறது.

ரோகிணியின் சபதம்

தன்னுடைய பிரண்டிடம் ரோகிணி பேசும் போது நான் ஏற்கனவே நிறைய அழுதுவிட்டேன் இனி என்னுடைய வாழ்க்கையை காப்பாற்றி கொள்வதற்காக நான் எடுக்க போகும் முடிவு முக்கியமானதாக இருக்கும். என்னுடைய வாழ்க்கையை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இதனால் மீண்டும் இவர் ஏமாற்றி வீட்டிற்குள் போகப் போகிறாரா? அல்லது நான் ஏழை வீட்டு பெண்தான் என்று சொல்லப் போகிறாரா என்று கேள்விகளும் இருக்கிறது.

எழுத்தாளர் விளக்கம்

இப்படியான நிலையில் தான் இந்த சீரியலில் எழுத்தாளர் ஒன் இந்தியா தமிழில் பிரத்யேகமாக பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில், சிறகடிக்க ஆசை சீரியலின் கதை உருவான விதம் குறித்து கூறியிருக்கிறார். அது சென்னை மெரினா பீச்சில் தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது தன் முன்பு ஒரு கரும்பு ஜூஸ் கடைக்காரரின் மகளும் அவரும் பேசுவதை வைத்து தான் நான் மீனா கேரக்டர் மற்றும் அவருடைய குடும்பத்தை உருவாக்கி இருந்தேன் என்று கூறியிருந்தார்.

முத்து கேரக்டர் உருவான விதம்

அதுபோல இந்த சீரியலுக்கு கதாநாயகி கதாநாயகன் செலக்ட் செய்ததும் அடுத்ததாக ரோகிணி என்ற கேரக்டர் தான் உருவாக்கியை வைத்திருந்தோம். ரோகிணி கற்பனை கேரக்டராக இருந்தாலும் அவரை முழுமையாக கெட்டவர் என்று சொல்லிவிட முடியாது. தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர் ஏமாற்றிக் கொள்கிறார் என்று கூறி இருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

திறமையான நடிகை விஜயா

ரோகிணியின் அம்மா தன்னுடைய கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று ஏதோ ஒரு திருமணத்தை செய்து வைக்கிறார். ஆனால் ரோகிணியின் முதல் கணவர் இறந்து போய் விடுகிறார் அதனால் ரோகிணி தனக்காக ஒரு வாழ்க்கையை தேடி கொள்கிறார். அதற்காக தன்னுடைய கடந்த காலத்தை மறைத்து இருக்கிறார். அதுபோல ரோகிணியின் கேரக்டருக்கு வலுக்கொடுப்பதற்காகத்தான் புதியது புதியதாக ஒரு சில கேரக்டரை கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்.

ரோகிணிக்காகத்தான் இது

மலேசியா மாமா, ரோகிணி பிரண்ட் வித்யா கேரக்டர் கூட ரோகிணிக்கு வலு கொடுப்பதற்காகத்தான் வருகிறார்கள். அதுபோல இந்த சீரியலில் மனோஜ் கேரக்டர் ஏற்கனவே சில ஷார்ட் பிலிம்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் இந்த சீரியலில் மனோஜாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் திறமையான நடிகர். அதுபோல முத்து கேரக்டரில் நடிக்கும் வெற்றி வசந்த ஷார்ட் பிலிம்களில் நடித்திருக்கிறார். அவரும் இப்போது இந்த சீரியல் மூலம் நன்கு பிரபலம் அடைந்துவிட்டார்.

கேரக்டர் உருவான விதம்

அதுபோல விஜயா கேரக்டர் மலையாள நடிகை அவரை சேனல் தரப்பினர் செலக்ட் செய்தார்கள். அதுபோல அண்ணாமலை கேரக்டருக்கு நல்ல பிரபலம் அடைந்த ஒரு கேரக்டர் வேண்டும் என்று நினைத்திருந்தோம். அப்போது திடீரென்று சுந்தர்ராஜன் சார் ஞாபகம் வந்தது. அவர் இதுவரைக்கும் சீரியலில் நடிக்கவில்லை என்றாலும் நாம் முயற்சி செய்து பார்ப்போம் என்று அவரிடம் பேசினோம்.

பிரச்சனை இருக்கு

அவர் கதையை கேட்டதும் சரி என்று சொல்லிவிட்டார். அவர் இப்போது அந்த கேரக்டராகவே ரசிகர்களிடம் பதிந்துவிட்டார். இந்த சீரியலுக்கு பிறகு அவருக்கு பல சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர் திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருப்பதால் மற்ற சீரியலில் நடிக்கவில்லை. அதுபோல இது சீரியலில் இப்போது ரோகிணி மாட்டி இருக்கிறார். ஆனால் அவர் மாட்டும்போது இன்னொரு லாக் அங்கே வைத்திருக்கிறோம். அந்த லாக்கை திறக்கும் போகும்போது இன்னொரு லாக் வந்துவிடும். இப்படித்தான் அந்த கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று எழுத்தாளர் குரு சம்பத்குமார் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+