ட்விட்டரில் ரசிகர் கேட்ட "அந்த" கேள்வி.. நான் போய் சேர்ந்திருக்கணும்.. நடிகை யாஷிகா ஆனந்த் உருக்கம்
சென்னை: குடித்து விட்டு வாகனம் ஓட்டிய வழக்கு என்னவாயிற்று? தோழியை கொன்றது எப்படி உணர்கிறீர்கள் என ரசிகர் கேட்ட கேள்விக்கு யாஷிகா ஆனந்த் ஒரு பதிலை கூறிவிட்டு அந்த பதிவை நீக்கிவிட்டார்.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் யாஷிகா ஆனந்த். இவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களிலேயே நடித்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸிலும் தாராளமாக கவர்ச்சி காட்டியதால் அவருக்கு ஏராளமானோர் ரசிகர்களாகினர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

மாமல்லபுரம்
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை மாமல்லபுரம் அருகே ரிசார்ட்டில் நடந்த பார்ட்டிக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் போது நடிகை யாஷிகா ஆனந்த் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளி ஷெட்டி பவானி பலியானார். யாஷிகாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நீண்ட நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

மாமல்லபுரத்தில் யாஷிகாவுக்கு விபத்து
அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. விபத்தில் இருந்து மீண்டாலும் தன்னால் தான் தன் தோழி இறந்தார் என்று யாஷிகா குற்ற உணர்வில் இருந்து வருகிறார். உடல்நலம் தேறி வரும் யாஷிகா அடிக்கடி நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கூட சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார்.

ரசிகர்களின் கேள்விகளுக்கு யாஷிகா பதில்
இந்த நிலையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து யாஷிகா ஆனந்த், அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் #askyashika anything என ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் ரசிகர் ஒருவர் நீங்கள் குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளான வழக்கு என்னவாயிற்று?

யாஷிகா உருக்கம்
உங்கள் தோழியை கொன்ற பிறகு இப்போது எப்படி உணருகிறீர்கள் என கேட்டிருந்தார். இதற்கு யாஷிகா, அது குடித்துவிட்டு ஏற்பட்ட விபத்து இல்லை. நான் சுயநினைவு இல்லாமல் இருந்ததால் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன். நான் குடிக்கவில்லை என ரிப்போர்ட் கூட வந்துவிட்டது. சரியான தகவல்கள் இல்லாமல் வதந்தியை பரப்ப வேண்டாம். இந்த எலும்பு முறிவு எல்லாம் ஏற்படாமல் நான் போய் சேர்ந்து இருந்தாலே நன்றாக இருந்திருக்கும் என கூறியுள்ளார். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார்.












Click it and Unblock the Notifications