Year ender 2023: இந்த ஆண்டில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த டாப் 10 சீரியல் நடிகைகள்.. வெளியான லிஸ்ட்!
சென்னை: 2023 ஆம் ஆண்டு இப்போதுதான் தொடங்கியது போல இருந்தது. ஆனால் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த ஆண்டு முடிவுக்கு வருகிறது.
இந்த ஆண்டில் பல சந்தோஷங்களும் துக்கங்களும் பலருக்கும் மாறி மாறி வந்து இருக்கும். அந்த வகையில் மக்களின் கவலையை தீர்க்கும் வகையில் பல பொழுது போக்குகள் இருந்து தான் வருகிறது.

அதில் பலருடைய மனதை சினிமா மற்றும் சீரியல்கள் சந்தோஷமாக மாற்றி இருக்கும். அதில் ஒரு சில நடிகைகள் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த சின்னத்திரை நடிகைகளின் பெயர் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. அதை விரிவாக பார்க்கலாம்.
ஹரிப்பிரியா
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கேரக்டரில் நடித்து வரும் ஹரிப்பிரியாவிற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். எதிர்நீச்சல் சீரியலில் தன்னுடைய கவலைகளையும் காமெடியாக எடுத்து சொல்லும் இவரை அதிகமான ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. ஹரிப்பிரியா சென்னையில் தான் பிறந்து இருக்கிறார். இவர் ஆரம்பத்தில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி நடிகையாக மாறி இருக்கிறார்.
கனிகா
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கனிகா எதிர்நீச்சல் சீரியல் மூலமாக இப்போது சின்ன திரையில் ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார். இவர் ஏற்கனவே அஜித், பிரசாந்த் போன்ற முன்னணி நடிகர்களோடு சினிமாக்களில் நடித்திருந்த நிலையில் இப்போது சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு இணையதளத்தில் அதிகமான போட்டோ சூட் நடத்தி அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
கோமதி பிரியா
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் ரசிகர்களின் மனதில் பதிந்து இருக்கிறார். கோமதி பிரியா பிப்ரவரி 8, 1993ல் தமிழ்நாட்டில் மதுரையில் பிறந்திருக்கிறார். முதல் முதலாக கோமதி பிரியா, ஓவியா என்ற சீரியல் மூலமாக தமிழில் அறிமுகமாகி இருந்தார். அதைத் தொடர்ந்து ஹிட்லர், வேலைக்காரன் போன்ற சீரியல்களில் நடித்திருந்தவர். இப்போது ரசிகர்களின் மனம் கவர்ந்த சிறகடிக்க ஆசை மீனாவாக வலம் வருகிறார்.
கே எஸ் சுசித்ரா செட்டி
சுசித்ரா பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவாக ரசிகர்களுக்கு பழக்கம் ஆகி இருக்கிறார். இதற்கு முன்பு சுசித்ரா 2008 வெளியான மாங்கல்யா என்ற கன்னட சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாக இருக்கிறார். அதோடு சைவம் போன்ற ஒரு சில திரைப்படங்களிலும் சுசித்ரா நடித்திருக்கிறார்.
ஆலியா மானசா
நடிகை ஆலியா மானசா விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமாகி அதைத் தொடர்ந்து twitter, facebook, instagram போன்ற சமூக வலைத்தளங்களில் அதிகமான ரசிகர்களை பின் தொடர வைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருக்கு சின்னத்திரையில் பல வருடங்களாகவே அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
திவ்யா கணேஷ்
திவ்யா கணேஷ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் நடித்து வருகிறார். அதோடு விஜய் டிவியில் மகாநதி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இணையத்தில் இவர் நடத்தும் போட்டோ சூட் மற்றும் இவர் வெளியிடும் வீடியோக்களுக்கு லைக் குவிந்து வருகிறது.
ஹேமா ராஜ்குமார்
ஹேமா ராஜ்குமார் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ், சின்னத்தம்பி போன்ற பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2விலும் மீனா கேரக்டரில் மீண்டும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கும் இணையத்திலும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்
ரேஷ்மா பசுபுலேட்டி
ரேஷ்மா ஏற்கனவே வாணி ராணி, வம்சம், சுந்தரகாண்டம், என் இனிய தோழியே போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டராக ரசிகர்களின் மனதில் கொள்ளை கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இவர் இந்த சீரியலில் வில்லியா, பாசிட்டிவ் கேரக்டரா என்று யூகிக்க முடியாத வகையில் இருந்த நிலையில் இப்போது பாக்யாவிற்கு உதவி செய்து ரேஷ்மா அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
சைத்ரா ரெட்டி
சைத்ரா ரெட்டி சன் டிவியில் இப்போது கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலமாக தமிழில் அறிமுகமாகி இருந்தார். அதை தொடர்ந்து யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருந்தார். இவருக்கும் சின்னத்திரையில் பல வருடங்களாக ரசிகர்கள் பாலோவர்ஸ்களாக இருக்கின்றனர்.
கேப்ரில்லா செல்லஸ்
கேப்ரில்லா சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் கலெக்டர் கேரக்டரில் நடித்து வருகிறார் இவரும் டாப் டென் பட்டியல்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார்.
-
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்











Click it and Unblock the Notifications