ரம்யா பாண்டியன் என்னுடைய மருமகள் தான்.. ஒய்.ஜி மகேந்திரன் கொடுத்த விளக்கம்! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: நடிகை ரம்யா பாண்டியனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒய் ஜி மகேந்திரன், ரம்யா பாண்டியன் வேறு யாருமில்லை என்னுடைய மருமகள் தான் என்று கூறி இருக்கிறார். அதோடு இருவருக்கும் எப்படி உறவுமுறை வந்தது என்றும் அவர் பகிர்ந்திருக்கிறார்.
நடிகை ரம்யா பாண்டியன் சின்ன வயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த நிலையில் அதற்கான முயற்சிகளை கல்லூரி படிக்கும்போது எடுத்து நடிக்க தொடங்கினார். அதில் டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தில் தான் இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுக்கவில்லை.

ரம்யா பாண்டியன் நடிகர் அருண்பாண்டியனின் உறவினர் தான். அருண்பாண்டியன் ரம்யா பாண்டியனின் சித்தப்பா தான். ஆனாலும் தன்னுடைய சித்தப்பாவின் உதவி எதுவும் இல்லாமல் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று அதற்காக பல முயற்சிகள் எடுத்தார்.
ஆனால் அதுவெல்லாம் பெரிய அளவில் அவருக்கு பலம் கொடுக்கவில்லை. அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது என்றால் போட்டோ சூட் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சிலருக்கு திறமையும் உழைப்பும் இருந்தாலும் அது பலருக்கு வெற்றியை கொடுப்பதில்லை. அதுபோலத்தான் ரம்யா பாண்டியனின் வாழ்க்கையிலும் நடந்தது.

பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். வெள்ளித்திரை, சின்னத்திரையில் இவர் கலந்து கொண்டு வந்த நிலையில் தொடர்ந்து கதாநாயகிக்காக முயற்சிகளும் எடுத்து வந்தார். இந்த நிலையில்தான் யோகா மாஸ்டர் ஒருவரை காதலித்து கடந்த எட்டாம் தேதி திருமணமும் செய்து கொண்டார்.
இவருடைய திருமணம் எளிமையாக கங்கை நதிக்கரையோரம் ரிஷிகேஷில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சென்னையில் திருமண வரவேற்பு நடந்தது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். சின்னத்திரை வெள்ளித்திரை நடிகர்கள் நடிகைகள் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தி இருந்தனர்.
அப்போது ஒய் ஜி மகேந்திரனும் கலந்து கொண்டார். அவர் ரம்யா பாண்டியன் வேறு யாரும் இல்லை என்னுடைய மருமகள் தான் என்று கூறியிருக்கிறார். அதாவது ரம்யா பாண்டியன் சமீபத்தில் சாருகேசி என்ற திரைப்படத்தில் எனக்கு மருமகளா நடிச்சி இருக்காங்க. ரொம்ப நல்ல பொண்ணு. உண்மையான ஒரு மகள் போலத்தான் அவங்க என்னிடம் நடந்து கொள்வார்கள்.
ரம்யா கல்யாணத்திற்கு ரிஷிகேஷ் போகணும் என்று நினைத்திருந்தேன். சில காரணங்களால் தான் அங்கு போக முடியாமல் ஆகிவிட்டது. அதனால் கண்டிப்பாக வரவேற்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று வந்தேன். திருமணத்திற்கு பிறகும் ரம்யா பாண்டியன் அவங்க கேரக்டரில் அப்படியே இருக்க வேண்டும். அவருடைய கணவர் அவரைப் போலவே இருக்க வேண்டும். யாருக்காகவும் யாரும் மாற வேண்டாம். சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications