நான் அரசியலை சார்ந்தவன் இல்லை.. உதயநிதி ஸ்டாலினுடன் வீடியோ! இதற்காகத்தான்! இர்ஃபான் திடீர் விளக்கம்
சென்னை: யூடியூபர் இர்ஃபான் தன்னை பற்றி பரவி வரும் கருத்துகளுக்கு பதில் அளித்து ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். தான் அரசியலை சார்ந்தவர் கிடையாது என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் வீடியோ வெளியிட்டது எதற்காக என்றும் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
யூடியூபராக பலருக்கும் பரீட்சையமான இர்ஃபான் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னராக தேர்வாகி இருந்தார். அவருடைய செயல்கள் பலவை சர்ச்சையை கிளப்பி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும்போது குழந்தையின் பாலினத்தை அறிவித்து ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இர்ஃபான் தன்னுடைய மனைவியின் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை தான் என்று அதை மகிழ்ச்சியாக குடும்பத்தோடு கொண்டாடி வீடியோ வெளியிட்டு இருந்தார். எந்த குழந்தையாக இருந்தாலும் அதைப்பற்றி குழந்தை பிறப்பதற்கு முன்பு வெளியே சொல்ல கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கும் நிலையில் இர்ஃபான் வெளிநாட்டில் சென்று ஸ்கேன் பார்த்து அந்த ரிப்போர்ட்டை வைத்து விழா எடுத்து கொண்டாடியது தவறு என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
அது சார்பாக சுகாதாரத்துறை அவருக்கு நோட்டீஸ் வெளியிட்டது. பிறகு இர்ஃபான் செய்த செயலுக்காக மன்னிப்பு கேட்டு இருந்தார். அதற்கு பிறகு குழந்தை பிறப்பின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரிகோலால் வெட்டிய வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். அதுவும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த நேரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இர்ஃபான் செய்த செயல் மிகவும் தவறானது, அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று அறிவித்திருந்தார். ஆனால் சில மாதங்கள் கழித்து இர்ஃபான் பற்றி ஒரு பேட்டியில் பேசும் போது இர்ஃபான் ஒண்ணும் கொலை குற்றம் செய்யவில்லை சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறது என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
இதனால் இதுவும் சர்ச்சையை கிளப்பியது. அதோடு இர்ஃபான்க்கு ஒவ்வொரு சம்பவத்திலும் துணையாக இருப்பது அரசியல் கட்சி பின்புலம் தான், அதனால் தான் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற அதிகமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் முதல் முறையாக இது பற்றி தன்னுடைய மவுனத்தை இர்ஃபான் கலைத்திருக்கிறார்.
ஒரு பேட்டியில் பேசும் போது, தனக்கும் எந்த கட்சிக்கும் தொடர்பு கிடையாது, நான் அரசியல் கட்சியை சார்ந்தவன் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். அதோடு தன்னை சிலர் குறிவைத்து தாக்கி பேசுவது தனக்கு வேதனை தருகிறது, துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் உடன் நான் வீடியோ வெளியிட்டது பிரமோஷனுக்காக மட்டும்தான் அதற்காக அவர் எப்படி என்னை ஆதரிக்க முடியும்.
அதுபோல நீதித்துறையும் அரசும் வேறு வேறு தான் அவர்களும் எப்படி என்னை காப்பாற்ற முடியும்? நடந்த சம்பவங்கள் எல்லாம் என் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் நீதிமன்றம் செயல்படுகிறது. நடந்த விஷயங்களை பொருத்தவரை நான் தனிமையில் இருப்பதாகத்தான் உணர்கிறேன். தனியாகத்தான் தற்போது நடக்கும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். யார் யாரோ என்னை திட்டுகிறார்கள். இதனால் யாருமே எனக்கு இல்லையா? என்ற எண்ணம் எனக்கு தோன்றுகிறது என்றும் அந்த பேட்டியில் இர்ஃபான் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications