வீட்ல விசேஷம்.. தகதகவென தங்கத்தில் ஜொலிக்கும் மனைவி.. இர்பான் வெளியிட்ட திடீர் போஸ்ட்
சென்னை: யூடியூபராகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் இருக்கும் இர்பான் தன்னுடைய மனைவியின் வளைகாப்பிற்கு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்து ஒரு போஸ்ட் வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. நிறைமாத கர்ப்பமாக இருக்கும் மனைவியின் வளைகாப்பை பிரம்மாண்டமாக இர்ஃபான் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.
அந்த வகையில் youtube மூலம் பிரபலமடைந்த இர்ஃபானுக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. இவர் உள்ளூர் முதல் வெளிநாட்டு உணவுகள் வரை சாப்பிட்டு விமர்சனம் செய்வார். அதனாலயே இவருக்கு அதிகமான ரசிகர்கள் உண்டு. அதிலும் சாப்பிடும்போது இவர் கொடுக்கும் ரியாக்ஷன் அதிகமாக மீம்ஸ்களாக இணையத்தில் ட்ரெண்டாகி இருக்கிறது. சாப்பிட ஆசை இல்லாதவர்களையும் கூட இவருடைய ரியாக்ஷன் சாப்பிட ஆசை தூண்டிவிடும்.

அதே நேரத்தில் இர்ஃபான் youtube சேனல் முழுக்க முழுக்க உணவுக்கே பிரத்தியேகம் ஆனது. தன்னுடைய கடின உழைப்பினால் தினமும் ஒரு வீடியோ பதிவு செய்து வரும் இர்ஃபான் வீடியோவிற்கு மில்லியன் கணக்கில் பார்வைகளை அள்ளுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த வருடம் தான் இர்ஃபானுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இர்ஃபான் மனைவி ஆசிபா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் இவர் பதிவிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் ஆசிபா கர்ப்பமாக இருக்கிறாரா? என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரம்ஜான் அன்று அவர் சூசகமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் "நாம் மற்றும் நாங்கள்" என்று கூறி மனைவியுடன் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் "ஒருவேளை இருக்குமோ..?" என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் தன்னுடைய வாரிசு குறித்து ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு இர்ஃபான் தன்னுடைய மனைவியோடு சேர்ந்து ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அதில் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். அதற்கு பிறகு தன்னுடைய மனைவியோடு சில புகைப்படங்கள் வீடியோக்களை இர்பான் வெளியிட்டு வந்தார். அந்த நேரத்தில் தான் தன்னுடைய மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்படியான நிலையில் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மனைவியை தங்க நகையால் அலங்காரம் செய்துள்ளார். அதோடு தன்னுடைய மனைவிக்கு வளைகாப்பு நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். அதில் ரசிகர்கள் கலந்து கொள்ளலாம் என்று அழைப்பு விடுப்பது போல ஒரு அட்டையை பிடித்திருக்கிறார். அதில், "Irfan welcome you Asifa's valaikappu" என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இர்பான் மற்றும் அவருடைய மனைவிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து குழந்தையை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்று ஆசீர்வாதம் செய்து வருகின்றனர். ஒரு சிலர் வழக்கம்போல இதையும் விட்டு வைக்காமல் வீடியோவாக போட்டு விட்டாரே என்று சலித்துக் கொள்கிறார்கள். அதுபோல சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications