நீயா நானாவுக்கு யாரும் “இப்படி” போய்டாதீங்க! பேசக்கூட முடியாது! வருத்தத்தில் சமையல் யூடியூபர் ஜெனி
சென்னை: விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த வாரம் சமையல் யூடியூபர்களும் அதை பார்த்து சமைக்கும் ரசிகர்களும் கலந்து கொண்டு விவாதித்தனர். இதில் சமையல் யூடியூபராக கலந்து கொண்ட ஜெனி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி பற்றி அதிருப்தியாக பேசி இருக்கிறார்.
விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே அதிகமான வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான நிலையில் இப்போது ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒளிபரப்பாகி வருகிறது.

ஃபேவரைட் நிகழ்ச்சி
அதுபோல இந்த நிகழ்ச்சியில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் இருந்து விவாதங்கள் நடத்தப்படுவது வாடிக்கைதான். ஆனாலும் கடந்த சில வாரங்களாகவே இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் டாபிக் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை என்ற கருத்து இருந்து வருகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு என்று இருக்கும் ரசிகர்கள் தொடர்ந்து நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள்.
கடைசி நேர மாற்றம்
இந்த நிலையில் தான் கடந்த வாரத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் மும்மொழி கொள்கை பற்றிய விவாதம் ஒளிபரப்பாவதற்காக சூட்டிங் எடுக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அது ஒளிபரப்பு செய்யப்படாமல் youtube மூலம் சமையல் செய்யும் டியூடிபர்கள் மற்றும் அதை பார்க்கும் ரசிகர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மாற்றப்பட்ட ப்ரோமோ
இது குறித்த ப்ரோமோக்கள் வெளியான போது இணையத்தில் விவாதங்களும் வந்துவிட்டது. எதனால் மும்மொழி கொள்கை எபிசோடு ஒளிபரப்பாகவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் இந்த வாரத்தில் சமையல் கலைஞராக கலந்து கொண்ட ஜெனிக்கு பேச வாய்ப்பு கொடுக்கவில்லை என்று அவருடைய பாலோவர்ஸ் அவருடைய வீடியோக்களில் கமெண்ட் கொடுத்து வந்தனர்.
சமையல் யூடியூப்பர் ஜெனி
இது குறித்து யூடியூபர் ஜெனி ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். அதில் நான் இனி எந்த டிவி சேனலுக்கும் போக போறது கிடையாது. என்னுடைய youtube பக்கத்தில் மட்டும் தான் நான் முகத்தை காட்டுவேன். அதுபோல youtube சேனலில் விருது கொடுக்கும் நிகழ்ச்சிகளுக்கு போகலாம். ஆனால் டிவி சேனல்களுக்கு போகும்போது அங்கு வேறு விதமாக இருக்கிறது.
நீயா நானாவில் வருத்தம்
நான் ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சிக்கு போகவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தேன். என்னுடைய மகன் சொன்னதால் தான் நீயா நானா நிகழ்ச்சிக்கு போனேன் என்று வருத்தமாக பேசி இருக்கிறார். அதைத் தொடர்ந்து மக்களிடம் அவர் பேசும் போது நீங்கள் யாராவது நீயா நானா நிகழ்ச்சிக்கு போகப் போகிறீர்கள் என்றால் கையில் ஒரு மைக் கொண்டு போய் விடுங்கள்.
காரணம் அந்த நிகழ்ச்சியில் ஒரு ஊரிலிருந்து சிலர் வருகிறார்கள் என்றால் அந்த ஊர் பற்றிய கேள்விக்கு யாராவது ஒருவர் மட்டும்தான் பதில் சொல்ல முடிகிறது. எனக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பல யூடியூபர்களின் அறிமுகம் கிடைத்தது. அதில் பலர் புதியவர்களாக இருந்தார்கள். அதிலும் அதிகமானோர் சீனியர்களாக தான் அந்த நிகழ்ச்சியில் பேசினார்கள் என்னால் பேச முடியவில்லை.
யூடியூபர் வருத்தம்
சில கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியவில்லை என்றும் வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். அதற்கு அவருடைய பாலோவர்ஸ் அதிகமானோர் நாங்களும் உங்களுக்காக அந்த நிகழ்ச்சியை பார்த்தோம். ஆனால் நீங்கள் பேச வரும்போது மற்றவர்கள் பேசுகிறார்கள், உங்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்று வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.
அதுபோல நீயா நானா நிகழ்ச்சி குறைந்தபட்சம் ஆறு, ஏழு மணி நேரம் சூட்டிங் நடந்தால் அதை 20 நிமிடங்களுக்கு ஒளிபரப்பு செய்கிறார்கள். இதனால் பாதி பேர் பேசுவது கட் செய்து தூக்கப்பட்டு விடும். ஆனாலும் ஜெனி வருத்தமாக பேசியிருப்பதை பார்க்கும் அவருடைய பாலோவர் ஜெனிக்கு வாய்ப்பு கொடுக்காதது குறித்து நீயா நானா நிகழ்ச்சியை விமர்சித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications