Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TTF Vasan : வைரலாகும் TTF வாசனின் திருமணப் புகைப்படங்கள் - யார் அந்த பெண்? குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: யூடியூப் உலகில் தனது சாகச வீடியோக்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட டிடிஎஃப் வாசன், தனது திருமணத் தகவலை அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். தற்போது அவரது திருமணத்திற்கு முந்தைய ப்ரீ-வெட்டிங் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஒருபக்கம் அவரது சாகசப் பயணங்கள், மறுபக்கம் காதல் வாழ்க்கை என TTF வாசன் பற்றிய புதிய தகவல்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன.

TTF Vasan vijay tv

யார் இந்த TTF வாசன்

TTF வாசன், தனது ட்வின் த்ரோட்டல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர். இவர் தனது மோட்டார் சைக்கிள் சாகச வீடியோக்கள், நெடுந்தூரப் பயணங்கள் மற்றும் பைக் ரிவியூக்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இவரது சாகசங்கள் மற்றும் தனித்துவமான பேச்சு நடை, இவருக்குப் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. ஆனால், அதிவேகமாக பைக் ஓட்டியது, சாலை விதிகளை மீறியது போன்ற காரணங்களுக்காக இவர் பல சர்ச்சைகளிலும் சிக்கினார். இதனால், இவரது ரசிகர்கள் மத்தியில் இவரை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என இருவிதமான குழுக்கள் உருவாயின.

காதலி பற்றி வாசன் பேசியது

TTF வாசன் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகம் பேசியதில்லை. ஆனால், சமீபத்தில் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டபோது, தனது காதலி பற்றியும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். "எனது திருமண வீடியோவை நேற்றிரவு வெளியிட்டேன். எனது வாழ்க்கையில் இனி ஒரு புது அத்தியாயம் ஆரம்பிக்கிறது. என் அன்பான துணைவி, என் சாகசப் பயணங்களில் எனக்கு ஆதரவாக இருப்பார்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

இவரது திருமணப் புகைப்படங்களில், தனது மனைவியின் அடையாளத்தைக் காட்டாமல், உணர்வுபூர்வமான தருணங்களை மட்டுமே பதிவு செய்திருக்கிறார். இந்த முடிவு, அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியத்தைக் காக்கும் அவரது எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.

வைரலாகும் திருமண புகைப்படங்கள்

தற்போது TTF வாசன் தனது திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அவற்றில் ஒன்று, அவர் மணப்பெண்ணின் காலில் மெட்டி அணிவிக்கும் காட்சி. இந்தக் காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. "சினிமா ஸ்டைல் ரொமான்ஸ்!", "இவர்தான் சரியான லவ் ஹஸ்பண்ட் மெட்டீரியல்!" "வாழ்த்துக்கள் அண்ணா, உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்!" போன்ற பல்வேறு கருத்துகளுடன் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு பக்கம் சர்ச்சைகளும், மறுபக்கம் பெரும் ரசிகர் ஆதரவும் எனப் பயணிக்கும் TTF வாசனின் வாழ்க்கையில்,அவருடைய திருமணம் பற்றிய விஷயம் தான் இப்போது பலராலும் பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அவர் மணப்பெண்ணின் முகத்தை காட்டாமல் இருப்பதால் இது சூட்டிங் புகைப்படமாக இருக்குமோ தன்னுடைய திரைப்படத்திற்காக வித்தியாசமாக ப்ரமோஷன் செய்கிறாரா என்று கேள்விகளும் வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+