உன்ன பேசுனா உங்க ஆளுங்க வருவாங்க.. இர்ஃபானை கலாய்ப்பது போல.. டிடிஎஃப் வாசனை கலாய்த்த Vj சித்து
சென்னை: பிரபல யூடியூபரான விஜே சித்து யூடியூப்பர் இர்ஃபானை கலாய்ப்பது போல டி டி எஃப் வாசனை கலாய்த்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் இவர்களுடைய ரசிகர்கள் மாறி மாறி ஒருவருக்கொருவரை திட்டிக் கொள்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்புவரைக்கும் சினிமா நடிகர்களுக்கு தான் அதிகமான ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால் இப்போது இணையத்தில் ரீல்ஸ் வெளியிடுபவர்களுக்கும், வீடியோஸ் வெளியிடுகிறவர்களுக்கும் அளவுக்கதிகமான ரசிகர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். இன்ஸ்டாகிராம், facebook, youtube போன்ற சமூக வலைத்தளங்களில் இவர்களுக்கு இருக்கும் ரசிகர்களை பார்த்து இவர்கள் பிரபலங்களாக தங்களை அடையாளப்படுத்தி வருகிறார்கள்.

சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பெயர் வாங்கிய நடிகர்களுக்கு இருக்கும் அளவிற்கு இப்போது youtube-ல் வீடியோ வெளியிடும் youtuberகளுக்கு இருக்கிறார்கள். அதிலும் இர்ஃபான், விஜே சித்து, டிடிஎஃப் வாசல் போன்றோர் பலவிதமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இவர்களை பலர் பாலோ செய்து வருகிறார்கள். ஆனால் சமீபத்தில் இவர்களுடைய ரசிகர்கள் ஒருவருக்கு ஒருவர் கருத்து மோதல்களில் ஈடுபடுத்தி வருகிறார்கள்.

இவர்களில் டிடிஎஃப் வாசன் அடிக்கடி பிரச்சினைகளில் மாட்டியே பிரபலமாகி கொண்டிருக்கிறார். இவர் வீடியோக்கள் அதிகமாக சர்ச்சைகளை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் மற்றவர்கள் இந்த அளவிற்கு போலீஸ் கேஸ்களில் சிக்காததாலேயே டிடிஎஃப் வாசன் ரசிகர்கள் இர்ஃபான் மற்றும் வி ஜே சித்து போன்றோரை விமர்சிக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் இர்பான் வெளியிட்ட ஒரு வீடியோவில் விஜே சித்துவும் இருக்கிறார்.

அப்போது வி.ஜே சித்து இர்ஃபானை பார்த்ததும் "உன்னை பற்றி ஏதாவது பேசுனா உனக்கு ஆள் இருக்கிறாங்க.. என்ன அடிக்க வருவாங்க" என்று சொல்ல, அதற்கு இர்ஃபான் உடன் இருந்த இன்னொரு நபர் உனக்கு என்னப்பா அதான் உனக்கும் ஆளு இருக்காங்களே என்று கைகளால் பைக்கை முறுக்குவது போல ட்ரூ...ட்ரூ என்று சொல்லி டிடிஎஃப் வாசனை குறிப்பிடுவது போலவே சைகை காட்ட, அதற்கு விஜே சித்து ஆமா அவரு நம்ம ஆளு தான்... நல்லா தான் பேசிட்டு இருந்தாரு.

ஆனா எதுக்காக என்ன பத்தி போலீசில் போட்டு கொடுத்தாருனு தெரியலப்பா என்று சொல்ல அதற்கு இர்ஃபான் ஆமா முதலில் இப்படித்தான் ஆரம்பிக்கும் அப்புறம்தான் பூகம்பமா வெடிக்க போகுது என்று கிண்டல் செய்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு டிடிஎஃப் வாசன் காரில் போகும்போது பேசிக்கொண்டே வீடியோ போட்டு இருந்தார்.

இதனால் அவர் மீது போலீஸ் கேஸ் போட்டு இருந்த நிலையில் நான் மட்டுமா இப்படி வீடியோ போடுறேன். விஜே சித்து தான் பேசிக் கொண்டே வீடியோ போடுறாரு என்று சைக்கிள் கேப்பில் போலீஸிடம் டிடிஎஃப் வாசன் போட்டு கொடுக்க அதை வைத்து இப்போது ஒரு கண்டென்ட் ரெடி செய்து இர்பான் மற்றும் விஜே சித்து ஒரு வீடியோவில் பேசியிருக்கின்றனர். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications